search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரியில் முப்பெரும் விழா
    X

    மார்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரியில் முப்பெரும் விழா

    • மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பாட்டு, ஓவியம் போன்ற போட்டிகளை நடத்தியது
    • நடனம், பாடல், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது

    மார்த்தாண்டம் :

    மார்த்தாண்டம் வடக்கு தெருவில் செயல்பட்டு வரும் ஞானதீபம் கல்லூரியில் ஓணப்பண்டிகை, கல்லூரி ஆண்டு விழா மற்றும் கலாச்சார விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

    முதல் நாளில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பாட்டு, ஓவியம் போன்ற போட்டிகளை நடத்தியது.

    விழாவின் 2-ம் நாளில் விழாவிற்கு கல்லூரி தாளாளர் தோமஸ்ராஜ் தலைமை தாங்கி கல்லூரி முதல்வர் கலாராணி தலைமையில் சிறப்பு விருந்தி னர்கள் குத்து விளக்கு ஏற்றினார்.

    தொடர்ந்து தேசிய இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்றுநர் டாக்டர் கமலா செல்வராஜ் சிறப்பு விருந்தினர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் பேசினர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கல்லூரி நிர்வாகம் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. பேராசிரியர் செல்வின் இன்பராஜ் நன்றி கூறினார். மதியம் அனை வருக்கும் ஓணம் சத்யா உணவு பரிமாறப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கேரள பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனத்தை மாணவிகள் ஆடினார்கள். இதில் நடனம், பாடல், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவினை மாணவிகள் ஜீனு, ஆஷிகா தொகுத்து வழங்கினர். மாணவி வீனா நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் செல்வின் இன்பராஜ், ராமச்சந்திரன், ஜெபா, செல்வி, ஜினி, ஜெனிபிரியா, திவ்யா, பேபி ஸ்டெலினா, ஆரதி கிருஷ்ணா, ஸ்ரீமதி, சுஜிதா, ஜெபகனி, விஜிலா, அஜிதா, சிநேகா, சிஞ்சு ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×