களியக்காவிளை அருகே தனியார் கல்லூரியில் நடந்த ஓணம் விழாவில் மாணவர்கள் மோதல்

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ நிகழ்ச்சியில் மாணவர்கள் இருதரப்பினராக பங்கேற்று நிகழ்சிகளை நடத்தினர்
களியக்காவிளை அருகே தனியார் கல்லூரியில் நடந்த ஓணம் விழாவில் மாணவர்கள் மோதல்
Published on

கன்னியாகுமரி :

களியக்காவிளை அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

நேற்று இந்த கல்லூரியில் ஓணப்பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்கள் இருதரப்பினராக பங்கேற்று நிகழ்சிகளை நடத்தினர். இந்த நிலையில் திடீரென்று மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. மோதலை கட்டுப்படுத்த கல்லூரி நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்கு வெளியே கொண்டு சென்று விட்டு கதவை இழுத்து மூடியுள்ளனர்.

ஆனால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்க ளிடையே எதற்காக மோதல் ஏற்பட்டது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமை யான மாணவர்களால் தான் மோதல் ஏற்பட்ட தாகவும் அடிக்கடி இது போன்ற மோதல்கள் நடப்ப தாகவும் பலர் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com