என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமுட்டத்தில் மீனவர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
    X

    சின்னமுட்டத்தில் மீனவர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

    • மீனவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் கோஷம் எழுப்பியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர்
    • மீனவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது. இந்த பெட்ரோல் பங்க் அமைக்கும்பணியை தடுத்து நிறுத்த கோரி சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    இருப்பினும் மீனவர்களின் இந்த தொடர் போராட்டத்துக்கு இடையே பெட்ரோல்பங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு சின்ன முட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து உள்ளனர்.இதைத்தொடர்ந்து பெட்ரோல்பங்கை மூடக் கோரி சின்ன முட்டத்தில் மீனவர்கள் நேற்று முன் தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மீனவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் கோஷம் எழுப்பியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் முடிந்து கரை திரும்பிய மீனவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. இதில் ஆத்திரமடைந்த மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன்பிறகு போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இன்று 3-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இதனால் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட விசைப்படகுகளும் 100-க்கும் மேற்பட்ட நாட்டுபடகு களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.இதனால் இந்த விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் புனித தோமையார்ஆலயம் முன்பு மீனவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சின்னமுட்டத்தில் பர பரப்பும் பதட்டமும் நிலவு கிறது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். போலீசார் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் இதுவரை எந்தவித சமரச தீர்வும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று 18-வது நாளாக சின்னமுட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு எதிராக மீனவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சின்னமுட்டத்தில்இன்றும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×