என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • இந்த மாதத்துக்கான அன்னதானம் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது
    • கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் அன்னதான உண்டியல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படு வது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதானம் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில் ஆய்வாளர் ராமலட்சுமி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.76 ஆயிரத்து 708 வசூல் ஆகி இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் அங்கு சென்றனர்
    • ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு திருவிழா நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் செப்டம்பர் மாதம் திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலயத்தின் முன் பகுதியில், பங்கு பேரவை நிர்வாகிகள் கூட்டம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் அங்கு சென்றனர். இரு தரப்பி னரையும் போலீசார் சமாதா னம் செய்தனர். ஆனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு திருவிழா நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்ல நீண்ட வரிசை
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஞாயிற் றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியா குமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணி கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இன்று அதிகாலை கன்னியா குமரி கடலில் சூரியன் உதய மாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    அதேபோல கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவில், விவேகா னந்தகேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கன்னியாகுமரி களை கட்டி யது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • எதிர்பாராத விதமாக அந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
    • நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஐசக். இவரு டைய மகன் ஜோனிஸ் (வயது 19). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறைக்காக ஜோனிஸ், சொந்த ஊரான அச்சன் குளத்துக்கு வந்திருந்தார். இவரது நண்பர்கள் செல்வன்புதூரை சேர்ந்த சுபாஷ் (23) மற்றும் அச்சன்குளத்தை சேர்ந்த சுபின் (19). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச்சென்றனர். மோட்டார் சைக்கிளை ஜோனிஸ் ஓட்டிச் சென்றார்.

    கன்னியாகுமரி அருகே உள்ள நரிக்குளம் மகாதான புரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே சென்ற போது எதிரே கன்னியா குமரியில் இருந்து அஞ்சுகிராமம் நோக்கி கார் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜொனிஸ், சுபின் மற்றும் சுபாஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை ஜொனிஸ் பரிதாபமாக இறந்தார். சுபின் மற்றும் சுபாஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி போலீ சார், ஜெனிசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது.

    விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்குகிறது
    • தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    தென்தாமரைகுளம் :

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் 11-வது நாளான நாளை (28-ந்தேதி) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்குகிறது. மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பூஜித குரு.சாமி தலைமை தாங்குகிறார். பூஜித குரு.ராஜசேகரன், பூஜிதகுரு.தங்கபாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்படும் திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தடையும்.

    திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும்போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்து வழிபடுவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடையும்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

    • தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. சார்பில் 10 நாள் என்.சி.சி. பயிற்சி முகாம் நடக்கிறது
    • மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நாகர்கோவில் 11 தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. சார்பில் 10 நாள் என்.சி.சி. பயிற்சி முகாம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடை பெற்றது.

    கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக தக்கலை மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி கலந்துகொண்டார். தொடர்ந்து பேரணியை சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கொடி யசைத்து தொடங்கி வைத்த னர். பேரணியானது அஞ்சு கிராமத்தில் இருந்து தொடங்கி ரோகிணி பொறி யியல் கல்லூரி வந்து அடைந்தது. இந்த நிகழ்ச்சியை முகாம் துணை கேப்டன் அஜியேந்திர நாத் தலைமை ஏற்று நடத்தினார். இதில் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சீராய்வு கூட்டத்தில் தீர்மானம்
    • குமரி மாவட்ட கோவில்களுக்கு சொந்தமானது

    நாகர்கோவில் :

    சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் தலைமை அலுவலகத்தில் திருக்கோவில் அலுவலக கண்காணிப்பாளர்கள், மேலாளர்கள், ஸ்ரீகாரி யங்கள், கோவில் பணியா ளர்களுக்கான சீராய்வு கூட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருக்கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் திருமண மண்டபங்களை கட்டுதல், வழிபாடு மற்றும் திருமண கட்டணத்தை உயர்த்துவது, புதிய வணிக வளாகம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்து தல், தனி நபரிடம் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை கோவில் பணியாளர்கள் யார் அதிக அளவில் மீட்டு தரு கின்றார்களோ அவர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பரிசாக தமிழக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் வழங்கப்படும்.

    ஆக்கிரமிப்பு இடங்களில் வீடு, கடைகள் வைத்திருப்ப வர்களுக்கு உரிய கட்டண முறை வசூல் செய்வது, தொகுப்பூதியத்தில் கூடு தலாக அடிப்படை பணி யாளர்களை நியமனம் செய்வது, சிதல மடைந்த திருக்கோவில்களில் திருப் பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில் திருக்கோவில் நிர்வாக பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பிள்ளைகள். பெற்றோர்களை முதுமையில் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில் :

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேசமணிநகர் சிநேகம் முதியோர் இல்லத்திற்கு தொழிலதிபர் டாக்டர் சுஜின் ஜெகேஷ் சார்பில் கழிவறையுடன் கூடிய நவீன கட்டில் மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர், நவீன கட்டிலை முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் லதா கலைவாணனிடம் வழங்கினார்.

    பின்னர் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    பிள்ளைகள். பெற்றோர்களை முதுமையில் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பெற்றோர்கள் தங்களை வளர்த்து ஆளாக்குவதற்கு எவ்வளவு தியாகங்களை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். உங்கள் பெற்றோர்களை நீங்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கும்போது, உங்கள் பிள்ளைகள் நாளை உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க மாட்டார்கள் என என்ன நிச்சயம். கலைஞர் முதியோர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அத்தகைய தலைவரின் நூற்றாண்டு விழாவில் இத்தகைய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன், மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக மாக காணப்படும். ஆவணி 2-வது ஞாயிற்றுக் கிழமை யான இன்று (27-ந்தேதி) காலையில் நடை திறக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனை யும், அபி ஷேகங்களும் நடந்தது. கோவில் நடை திறக்கப் பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நாகராஜரை தரிசிக்க குடும்பத்தோடு பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று நாகராஜரை வழி பட்டு சென்றனர்.

    நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றுவதற்கும் கூட்டம் அதிகமாக இருந் தது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நாகர் சிலை களுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். கோவிலில் கூட்டம் அலைமோதி யதை யடுத்து கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது.

    சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டம் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தரி சனத்திற்கு வந்த பக்தர் களுக்கு கோவில் கலை யரங்கத்தில் அன்ன தானம் வழங்கப்பட்டது. பக்தர்க ளுக்கு வசதியாக குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. நாகராஜா கோவில் திடலில் பக்தர்கள் விட்டுவிட்டு வந்தனர். நாகராஜா கோவில் திடலையொட்டி உள்ள சாலைகளில் சாலைகளின் இருபுறமும் திரு விழாக் கடைகள் அமைப்பட்டு இருந்தது.

    • குமரியில் போதிய அளவு மழை இல்லாததால் நீர்மட்டம் சரிவு
    • பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்ய வில்லை. இயல்பான மழை அளவை காட்டிலும் 69 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை பெய்யாததையடுத்து மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள். மதியம் நேரங்களில் சாலையில் கானல் நீராகவே காட்சி அளிக்கிறது. மழை ஏமாற்றி வரும் நிலையில் பாசன குளங்களிலும், அணை களிலும் நீர்மட்டம் கிடுகிடு வென சரிய தொடங்கி யுள்ளது. ஏற்கனவே அணை மற்றும் பாசன குளங்களை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 3 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. மீதம் உள்ள 3 ஆயிரம் ஹெக்டே ரில் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது.

    கடைமடை பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. அணையில் குறைவான அளவில் தண்ணீர் உள்ளதை யடுத்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வந்த நிலையில் தற்போது 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.28 அடியாக இருந்தது. அணைக்கு 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 504 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.10 அடியாக உள்ளது.

    அணைக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 10.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் சரிந்து காணப்படுகிறது. 

    • ரெயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
    • ரூ.36 லட்சத்து 71 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 3 பிளாட் பாரங்கள் உள்ளது. இங்கு நெருக்கடி அதிகரித்து வருவதையடுத்து கூடுதலாக மேலும் 2 பிளாட் பாரங் களை அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டர் மற்றும் லிப்ட் வசதியும் உள்ளது. மேலும் ரெயில் நிலையத்தை மேம் படுத்த அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்துவரும் நிலை யில் அந்தப் பணிகள் நிறைவு பெறும்போது ரெயில் நிலையமும் புதுப்பொலிவு பெறும்.

    இதேபோல் கன்னியா குமரி, டவுண் ரெயில் நிலை யங்களை மேம்படுத்தவும் ரெயில்வே துறை நட வடிக்கை மேற்கொண்டு உள்ளது. நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வழியாக தற்போது சென்னை எழும்பூர்-கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி- திருவனந்த புரம் இண்டர்சிட்டி ரெயில், பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன.

    இந்த ரெயில்களுக்கு நாகர்கோவில் டவுன் நிலை யத்தில் நிறுத்தம் வழங்கப் பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில்கள் இங்கு நின்று செல்கின்றன. மேலும் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையங்களில் இருந்து கேரளா மார்க்கமாக செல்லும் சில ரெயில்களும் டவுன் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் இந்த ரெயில் நிலையத்தில் தற்போது பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் நிலையத்தில் 2 பிளாட் பாரங்கள் மட்டுமே உள்ளது. கூடுதலாக பிளாட்பாரங் களை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் முதல் பிளாட்பாரத்தில் இருந்து நடைமேடை ஏறி தான் 2-வது பிளாட்பா ரத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதை தவிர்க்கும் பொருட்டு ரெயில்வே துறை சார்பில் லிப்ட் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.36 லட்சத்து 71 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இ-டெண்டர் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த பணியை 10 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    இந்த லிப்ட் பணி முடிவு பெற்றுவிட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே ரெயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாக கார் பார்க்கிங் வசதி உட்பட பல்வேறு வசதிகள் அங்கு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை பொறுத்தமட்டில் இந்த ரெயில் நிலையத்தின் ஆண்டு வருவாய் ரூ.6 கோடியே 57 லட்சம் ஆகும். இந்த ரெயில் நிலையத்தை ஆண்டுக்கு 2 லட்சத்து 13 ஆயிரம் பயணிகள் சராசரி யாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பய ணிகளின் வருகை மற்றும் ரெயில் நிலையத்தின் வருவாயும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    • குமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கிராமப்புறங்களில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள், குடிநீர் திட்ட பணிகள் குறித்த விவரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டறிந்தார்.

    மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அவர் கேட்டார். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் செயல்படுத்தப் பட்டு வரும் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இதை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ரூ.பல லட்சம் செலவு செய்து பொதுமக்கள் வீடு கட்டியுள்ளனர். ஆனால் அதில் உள்ள கழிவுகளை ரோட்டில் விடுகிறார்கள். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர், மாணவ-மாணவிகள் நலன் கருதி காலை உணவுத் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். எனவே அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

    ஆணையாளர் ஆனந்த மோகன், திட்ட அதிகாரி பாபு மற்றும் அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ×