சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.76 ஆயிரம் வசூல்

இந்த மாதத்துக்கான அன்னதானம் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்ததுகோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.76 ஆயிரம் வசூல்
Published on

கன்னியாகுமரி :

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் அன்னதான உண்டியல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படு வது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதானம் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில் ஆய்வாளர் ராமலட்சுமி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.76 ஆயிரத்து 708 வசூல் ஆகி இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com