search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி - 2 வாலிபர்கள் படுகாயம்
    X

    கன்னியாகுமரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி - 2 வாலிபர்கள் படுகாயம்

    • எதிர்பாராத விதமாக அந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
    • நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஐசக். இவரு டைய மகன் ஜோனிஸ் (வயது 19). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறைக்காக ஜோனிஸ், சொந்த ஊரான அச்சன் குளத்துக்கு வந்திருந்தார். இவரது நண்பர்கள் செல்வன்புதூரை சேர்ந்த சுபாஷ் (23) மற்றும் அச்சன்குளத்தை சேர்ந்த சுபின் (19). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச்சென்றனர். மோட்டார் சைக்கிளை ஜோனிஸ் ஓட்டிச் சென்றார்.

    கன்னியாகுமரி அருகே உள்ள நரிக்குளம் மகாதான புரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே சென்ற போது எதிரே கன்னியா குமரியில் இருந்து அஞ்சுகிராமம் நோக்கி கார் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜொனிஸ், சுபின் மற்றும் சுபாஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை ஜொனிஸ் பரிதாபமாக இறந்தார். சுபின் மற்றும் சுபாஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி போலீ சார், ஜெனிசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது.

    விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×