என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து அதற்கான வேலைகள் துவங்கி வைக்கப்பட்டது.
    • எனது தந்தையின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது ஞாபகமாக இன்று அந்த தரைப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பரளி ஆற்று தரைப்பாலத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலின் அருகே பரளி ஆற்றை கடப்பதற்கு தரைப்பாலம் அமைக்க வேண்டுமென்ற ஊர்மக்களின் கோரிக்கையை ஏற்று தரைப்பாலம் அமைத்து தரப்படும் என எனது தந்தையும் கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தெய்வத்திரு திரு H.வசந்தகுமார் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.

    நான் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படட பின்னர் இந்த தரைப்பாலம் அமைப்பதற்கு 75 லட்சம் ரூபாய் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து அதற்கான வேலைகள் துவங்கி வைக்கப்பட்டது.

    வேலைகள் முடிந்தபின் எனது தந்தையின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது ஞாபகமாக இன்று அந்த தரைப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    • எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது

    நாகர்கோவில் :

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டுக்கு சென்று திரும்பிய குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி படிவம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோ விலில் நேற்று நடந்தது.

    அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசி னார். எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூத் கமிட்டி படிவத்தை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    மதுரையில் நடைபெற்ற வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது. தொண்டர்களிடம் புதிய தெம்புடனும் எதிர் காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    நினைவுகள் அழிவதில்லை. வெற்றிகள் முடி வதில்லை. அ.தி.மு.க.-வின் வெற்றிகள் மறைவதில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக நாம் ஒவ்வொருவரும் முனைப்போடு போர்க ளத்தில் நிற்பது போன்று செயல்பட வேண்டும். எதிரி கள் நமக்கு செய்யும் துரோகங்களை மக்களின் வாக்குகளால் வீழ்த்திக் காட்டி வெற்றி வாகை சூட வேண்டும். இதற்கு உண்மையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டசபை தொகுதி களில் பூத் கமிட்டி அமைத்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், ஒன்றிய செயலாளர்கள் ஜெசிம், பொன் சுந்தர்நாத், ஜீன்ஸ், முன்னாள் நகர செயலாளர் சந்திரன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் அய்யப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்,குளச்சல் நகர கழக செயலாளர் ஆண்ட்ரோஸ் , குளச்சல் சட்ட மன்ற தொகுதி முன்னாள் கழக செயலாளர் ஆறுமுகராஜா , முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திரவர்சன், ஆனக்குழி சதீஷ் , அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நடந்தது
    • மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்

    நாகர்கோவில் :

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்க கிருஷ்ணன் தலைமையில் அன்னதானமும், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மைக்கேல் ரத்தினம் தலைமையில் அழகப்பபுரம் மெயின் பஸ் நிறுத்தத்தில் வைத்து ஏழை, எளியவர்களுக்கு சேலை மற்றும் வேஷ்டிகளை மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாபு, வின்சென்ட் கிங், ஒன்றிய செயலாளர் பரமராஜா, மாவட்ட அணி நிர்வாகி மகேஷ் மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் லாசர், பேரூர் செயலாளர்கள் லிங்கம் மற்றும் பரமாத்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • 3-ம் ஆண்டு நினைவு நாள்
    • விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்திலும் இன்று வசந்தகுமார் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி குமரி மாவட்டம் அகஸ்திஸ்வ ரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அரசியல் கட்சியினர் திரண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு ஆகியோர் காலையிலேயே மணி மண்டபம் வந்து அங்குள்ள வசந்தகுமார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர். மேலும் வசந்தகுமா ரின் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார், மகள் தங்கமலர், மகன்கள் விஜய்வசந்த் எம்.பி., வினோத், மருமகன் ஜெகநாத், மைத்துனர் காமராஜ் ஆகியோரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.முக. வினர் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

    நினைவு தினத்தை முன்னிட்டு வசந்தகுமார் மணி மண்டபத்தில் இன்று பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.நாகர்கோவிலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்திலும் இன்று வசந்தகுமார் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

    அவரது படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கட்சியினர் கலந்து கொண்ட னர்.

    • ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு
    • அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி பகவதி அம்மனுக்கு சிவப்பு நிறபட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 30-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    முதல் நாளான இன்று உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி பகவதி அம்மனுக்கு பச்சைநிறப்பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 4-/30 மணிக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. பின்னர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷா தீபாராதனை போன்றவை நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடிபட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனையும் நடந்தது. சாயராட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளச்செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருளசெய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அத்தாழ பூஜையும்ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    திருவோணம் நட்சத்திரமான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டு ஓணக்கோடியாக அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) அவிட்டம் நட்சத்தி ரத்தையொட்டி காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு சிவப்பு நிறபட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் "நடப்போம் நலம் பெறுவோம்" என்னும் நோக்கத்தின் அடிப்படையில் பொதுமக்களுடன் அமைச்சர்கள் பங்கேற்ற நடைபயண நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று காலை நடந்தது.

    அதிகாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் சிலுவை நகர், சீரோ பாய்ண்ட், நான்கு வழி சாலை, ரெயில்வே மேம்பாலம், முருகன்குன்றம் வழியாக பரமார்த்தலிங்கபுரம் மின் வாரிய அலுவலகம் முன்பு வரைசென்று திரும்பி மீண்டும் அதே வழியாக தொடங்கிய இடமான சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் நிறைவடைந்தது.

    மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரம் இந்த நடைபயணம் நடந்தது. இன்று காலை தொடங்கிய இந்த நடைபயணம் காலை 7 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பிறகு சன் செட் பாயிண்ட் கடற்கரையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இந்த நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

    • நீங்கள் ஆற்றிய மக்கள் தொண்டும், சமூக சேவைகளும் சரித்திரத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
    • முன்னாள் எம்பி வசந்தகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

    கன்னியாகுமரி:

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    எம்மை விட்டு சென்று 3 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் எங்களை வழிநடத்தி வருகிறீர்கள். நீங்கள் ஆற்றிய மக்கள் தொண்டும், சமூக சேவைகளும் சரித்திரத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

    எனது தந்தையும், மக்கள் சேவகரும், சிறந்த காங்கிரஸ் செயல் வீரருமான திரு. H.வசந்த குமார் அவர்கள் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குகிறோம்.

    முன்னாள் எம்பி வசந்தகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

    • துப்புரவு பணிக்கான பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து புகை வந்துள்ளது.
    • ஊழியர்கள் பணிக்கு வந்து அறையை திறப்பதற்கு முன்பே, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து வரும் ரெயில்கள், கேரளாவில் இருந்து வரும் ரெயில்கள், இங்கிருந்து புறப்படும் ரெயில்கள் போன்றவற்றால், பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    அந்த நேரத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நடைமேடைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். காலையிலேயே பணிகளை தொடங்கும் அவர்கள், தங்களது பணிக்கான உபகரணங்கள் மற்றும் பிளிச்சிங் பவுடர், ஆசிட் போன்றவற்றை ரெயில் நிலையத்தில் படிக்கட்டின் கீழ் உள்ள அறையில் வைத்துள்ளனர்.

    காலையில் பணிக்கு வந்ததும், அந்த அறை கதவை திறந்து பொருட்களை எடுத்து செல்வது வழக்கம். பின்னர் மாலையில் அதனை அறையில் வைத்துச் செல்வார்கள்.

    இந்நிலையில் இன்று காலை 6.50 மணியளவில் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நேரத்தில் துப்புரவு பணிக்கான பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புகை மூட்டம் வந்ததை பார்த்த பயணிகள் பலரும் அலறியடித்து அங்கிருந்து ஓடினர். இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் துப்புரவு பணியாளர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

    தொடர்ந்து அந்த அறையின் பூட்டை திறந்தனர். அப்போது உள்ளே பொருட்கள் தீப்பிடித்து எரிவது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    இந்நிலையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் மேலும் தீ பரவாமல் நடவடிக்கை எடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அறையில் ஒரு சுவிட்ச் மட்டுமே உள்ளது. அந்த அறை எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். காலையில் துப்புரவு பணிக்கான பொருட்கள் எடுக்கப்பட்ட பிறகு அறையை பூட்டி விடுவார்கள்.

    இன்று காலை ஊழியர்கள் பணிக்கு வந்து அறையை திறப்பதற்கு முன்பே, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகன பயணம் நடத்த முடிவு
    • பல்வேறு மாநிலங்கள் வழியாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி காஷ்மீர் சென்றடைகிறார்.

    கன்னியாகுமரி :

    கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கிருஷ்ணாபுரதொட்டி பகுதியை சேர்ந்தவர் சித்ரா ராவ் (வயது 24). இவர் நடன கலைஞர் ஆவார். எம்.பி.ஏ.பெண் பட்டதாரியான இவர் பெற்றோர்களை கைவிடக்கூடாது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகன பயணம் நடத்த முடிவு செய்து இருந்தார்.

    அதன்படி அவரது இருசக்கர வாகன பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட நேருயுவ கேந்திரா கணக்கு மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர் ரெங்கநாதன், மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானச்சந்திரன், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு இருசக்கர வாகன பயணம் மேற்கொண்ட சித்ராராவ் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு செல்லும்போது அவரது தாயாரான கவிதா, அவரை கட்டித்தழுவி வழி அனுப்பி வைத்தார். இவர் பல்வேறு மாநிலங்கள் வழியாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி காஷ்மீர் சென்றடைகிறார்.

    மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 590 கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து செல்கிறார். அதன்பிறகு மீண்டும் காஷ்மீரில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து பெங்களூரில் தனது இருசக்கர வாகன பயணத்தை நிறைவு செய்கிறார்.

    • போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது மது பாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது.
    • அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.

    நாகர்கோவில் :

    வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் தலைமையிலான போலீசார் நாடான்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர், போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது மது பாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு

    கன்னியாகுமரி, ஆக.27-

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் மீனவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    இருப்பினும் அவர்களது எதிர்ப்பை மீறி பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. அதனை மூட வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 25-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மீனவர்களுடன், நாகர்கோ வில் ஆர்.டி.ஓ. சேது ராம லிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பல மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டது. இதைத்தொ டர்ந்து கடந்த 18 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க திட்டம்
    • சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருந்தது. முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.

    முதல் கட்ட முகாமில் 2,03,268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்டமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதைத்தொ டர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடந்தது.

    இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படி வங்களை வழங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். 1 லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் சில குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அவற்றை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் விண்ணப் பங்களை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர். அந்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

    ரேஷன் கார்டுதாரருடைய ஆண்டு வருமானம் மற்றும் விண்ணப்பங்களில் உள்ள குளறுபடிகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சில விண்ணப்பதாரர்கள் தகுதி இல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள விண்ணப்ப படிவங்களை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த பணிகளை வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கள ஆய்வு முடிக்கப்பட்ட விண்ணப்பங்களை சென்னையில் உள்ள மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின் ஆளுமை மையத்தில் பரிசீலனை செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×