search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. மாநாடு, வரும் தேர்தலில் வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது
    X

    அ.தி.மு.க. மாநாடு, வரும் தேர்தலில் வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    • எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது

    நாகர்கோவில் :

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டுக்கு சென்று திரும்பிய குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி படிவம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோ விலில் நேற்று நடந்தது.

    அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசி னார். எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூத் கமிட்டி படிவத்தை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    மதுரையில் நடைபெற்ற வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது. தொண்டர்களிடம் புதிய தெம்புடனும் எதிர் காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    நினைவுகள் அழிவதில்லை. வெற்றிகள் முடி வதில்லை. அ.தி.மு.க.-வின் வெற்றிகள் மறைவதில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக நாம் ஒவ்வொருவரும் முனைப்போடு போர்க ளத்தில் நிற்பது போன்று செயல்பட வேண்டும். எதிரி கள் நமக்கு செய்யும் துரோகங்களை மக்களின் வாக்குகளால் வீழ்த்திக் காட்டி வெற்றி வாகை சூட வேண்டும். இதற்கு உண்மையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டசபை தொகுதி களில் பூத் கமிட்டி அமைத்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், ஒன்றிய செயலாளர்கள் ஜெசிம், பொன் சுந்தர்நாத், ஜீன்ஸ், முன்னாள் நகர செயலாளர் சந்திரன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் அய்யப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்,குளச்சல் நகர கழக செயலாளர் ஆண்ட்ரோஸ் , குளச்சல் சட்ட மன்ற தொகுதி முன்னாள் கழக செயலாளர் ஆறுமுகராஜா , முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திரவர்சன், ஆனக்குழி சதீஷ் , அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×