search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 70 ஆயிரம் விண்ணப்பங்கள் கள ஆய்வு
    X

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 70 ஆயிரம் விண்ணப்பங்கள் கள ஆய்வு

    • வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க திட்டம்
    • சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருந்தது. முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.

    முதல் கட்ட முகாமில் 2,03,268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்டமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதைத்தொ டர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடந்தது.

    இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படி வங்களை வழங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். 1 லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் சில குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அவற்றை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் விண்ணப் பங்களை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர். அந்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

    ரேஷன் கார்டுதாரருடைய ஆண்டு வருமானம் மற்றும் விண்ணப்பங்களில் உள்ள குளறுபடிகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சில விண்ணப்பதாரர்கள் தகுதி இல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள விண்ணப்ப படிவங்களை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த பணிகளை வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கள ஆய்வு முடிக்கப்பட்ட விண்ணப்பங்களை சென்னையில் உள்ள மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின் ஆளுமை மையத்தில் பரிசீலனை செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×