என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சிக்கும், மனோஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • மனோஜ்குமார் படுகாயம் அடைந்தார். ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் கைலாஷ் கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22). இவரும், கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பேச்சி என்ற இசக்கிமுத்து (23) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சிக்கும், மனோஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு மனோஜ்குமார் கிருஷ்ணன் கோவில் வடக்கு ரத வீதி தெப்பக்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பேச்சி அங்கு வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பேச்சி மறைத்து வைத்திருந்த ஸ்குருடிரைவரால் கழுத்து மற்றும் நெஞ்சில் மனோஜ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் மனோஜ்குமார் படுகாயம் அடைந்தார். ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து பேச்சி அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது மனோஜ்குமாரின் மற்றொரு நண்பர் அங்கு வந்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மனோஜ்குமாரை அனுமதித்தார். மனோஜ்குமார் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக அவரது நண்பர் டாக்டர்களிடம் கூறினார். மனோஜை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது மனோஜ்குமாரின் உடலில் குத்து காயங்கள் இருந்ததை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மனோஜ்குமார் நண்பர்களிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். தனக்கும், இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் தனது நண்பர் மயங்கி கிடந்ததால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் கூறினார்.

    அப்போது மனோஜ்குமாரை குத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பேச்சி என்ற இசக்கிமுத்து , மனோஜ்குமாரை குத்தியது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பேச்சி ஸ்குருடிரைவரால் மனோஜ்குமாரை குத்தியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் பேச்சியை விசாரணைக்காக வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது சகோதரர் ராஜ கோபால் கொடுத்த புகாரின் பேரில் மீது பேச்சி மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். பலியான மனோஜ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். கைது செய்யப்பட்ட பேச்சியை போலீசார் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மனோஜ்குமார் வெளிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் வடசேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
    • தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    தென்தாமரைகுளம்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பூஜித குரு. சாமி தலைமை தாங்கினார். பூஜிதகுரு.ராஜசேகரன், பூஜிதகுரு.தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

    திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும்போது திரளான அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைகிறது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாமிதோப்பிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. காவல்துறை சார்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெறுகிறது. 

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
    • ரூ.14 கோடியில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க பங்கர் என்ற கட்டிடம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகள் மற்றும் கட்டுமான அமைப்புகளை ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவு, முதுகு தண்டுவட பிரிவு, நரம்பியல் பிரிவு மற்றும் பங்கர் என்னும் புற்று நோய் கண்டறியும் மையம் அமைய இருக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோருடன் 2 மணி நேரம் ஆய்வு செய்தேன். ஆஸ்பத்திரியில் 204 மருத்துவ பணியிடங்களில் தற்போது 193 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். 5 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளன.

    முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் மேலும் மருத்துவ உபகரணங்கள் வேண்டும் என கேட்டார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கான குளிர்சாதன வசதிகள் உள்பட பல உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான தானியங்கி ஆட்டோ கிளேவ் எந்திரம், துணிகளை உலர வைக்கும் எந்திரம் ரூ.75 லட்சத்தில் வாங்கி தரப்பட இருக்கிறது.

    நியூராலஜி பிளாக் பணிகள் ரூ.6.4 கோடியில் முடிந்துள்ளது. மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 50 தானியங்கி மருத்துவ படுக்கை ரூ.23.75 கோடியில் அமைய உள்ளது. குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு பணி மேற்கொண்ட போது இங்கு புற்றுநோய் தாக்கம் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அறிவித்த நிதி நிலை அறிக்கையில் கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 30 வயதுக்கும் மேற்பட்ட மக்களுக்கு கர்ப்பப்பை, வாய், மார்பக புற்றுநோய் கண்டறியும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட இருக்கிறது.

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ரூ.14 கோடியில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க பங்கர் என்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. இங்கு கதிரியக்க பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பங்கர் அமையும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களில் வேலை நிறைவடையும். அதன் பின் டெலிகோபால்ட் என்ற கருவி அமைக்கப்பட உள்ளது. எனவே அடுத்த மாதம் புற்றுநோய் கண்டறியும் மையம் கட்டுமான பணிகளை நானே தொடங்கி வைக்க இருக்கிறேன். புற்று நோயானது முதல் கட்ட பரிசோதனையில் கண்டறிந்தால் எளிதில் காப்பாற்றலாம். 3, 4 நிலைகளை கடந்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்பட்டு விட்டது. ஒரு மருத்துவரின் மனைவி பி.இ சிவில் படித்திருக்கிறார். இங்கு சிவில் தேவை இல்லை என்பதால் பணி வழங்கப்படாமல் உள்ளது. குமரி மாவட்டத்தில் எலிக்கடிக்கு, நாய் கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் கொடுத்த டிஸ்சார்ஜ் சம்மரியில் குழந்தைக்கு நாய் கடித்ததாக பதிவு இருந்தது. பாதுகாப்புக்காக நாய்க்கடி மருந்து செலுத்தினர். அதன்பிறகு கேரளாவில் தனியார் மருத்துமனையில் இல்லாத நாய் கடிக்கு சிகிச்சை அளித்ததாக அங்குள்ள மருத்துவரையும், அந்த மருத்துவமனையையும் புரமோட் செய்வதற்காக ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் அந்த தகவலை பரப்பினர். அந்த செய்தியை பார்த்துவிட்டு எதிர்கட்சி தலைவர் வேலை மெனக்கெட்டு அறிக்கை விட்டார். தனியார் மருத்துவமனை தவறு செய்திருக்கிறது.

    அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத்துறையிடமும் தெரிவித்துள்ளோம். அதற்கு நான் பதிலும் கொடுத்துவிட்டேன். அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களிலும் பாம்புகடி, நாய்க்கடிக்கான மருந்துகள் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2½ ஆண்டுகளாக நாய்க்கடி, பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ், சூப்பிரண்டு அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிடம் மருத்துவர்கள் ரெனிமோள், விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • மாணவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் பயணம்
    • அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பீச்ரோடு-செட்டிகுளம் சாலையில் உள்ள ஒரு கல்லூரயில் ஓணம் பண்டிகை கொண்டாடத்தின்போது கல்லூரி மாணவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்த போது ஆபத்தாக வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது, பதிவு எண் இன்றி வாகனம் ஓட்டியது, போக்குவரத்திற்கு இடையூறு செய்தது ஆகிய விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • ஒரு மாதத்தில் பாலம் பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளித்தனர்

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் அருகே நல்லூர்-இரவிபுதூர் இடையே உள்ள பாலம் பழுதடைந்ததை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக அந்த வழியே சென்ற பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் நல்லூர், இரவிபுதூர் மக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் மருங்கூர் வரை சென்று பஸ் ஏறினர். இந்த நிலையில் பாலத்தின் ஒரு பகுதி முடிக்கப்பட்ட நிலையில், மற்றொரு பகுதி பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனை கண்டித்து இரவிபுதூர் பகுதியில் இன்று பொது மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள், ஒரு மாதத்தில் பாலம் பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி புகையிலை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்"

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கசிவம், சங்கரநாராயணன், குமாரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கொட்டாரம் பகுதியில்உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் உள்ள ஒரு கடையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்" வைத்தனர்.

    • பழைய வீட்டை ரப்பர் ஷீட்டுகள் உலர வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார்.
    • எரிந்த ரப்பர் ஷீட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று தெரிவித்தார்.

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே திற்பரப்பு அருவிக்கு செல்லும் சாலை பகுதியை சேர்ந்தவர் ஷா (வயது 50). இவருக்கு சொந்தமாக ரப்பர் தோட்டம் உள்ளது. அதிலிருந்து கிடைக்கும் ரப்பர் ஷீட்டுகளை தன் வீட்டின் பின்புறம் உள்ள தனக்கு சொந்தமான பழைய வீட்டை ரப்பர் ஷீட்டுகள் உலர வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார்.

    தினமும் ரப்பர் ஷீட்டுகளை உலர் கூடத்தில் காய வைத்து கம்பியில் தொங்க போட்டு அடியில் விறகு வைத்து தீ மூட்டி உலர்த்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் ரப்பர் உலர் கூடத்தில் இருந்து தீ மளமளவென்று எரிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து ஷா அதிர்ச்சி அடைந்தார். உடனே பக்கத்து வீட்டுகாரர்களின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    தற்போது வெயில் காலம் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே குலசேகரம் தீயணைப்பு நிலையத்து தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். எரிந்த ரப்பர் ஷீட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று தெரிவித்தார்.

    • அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.
    • திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைகிறது.

    தென்தாமரைகுளம் :

    சாமிதோப்புஅய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பூஜித குரு. சாமி தலைமை தாங்கினார். பூஜிதகுரு.ராஜசேகரன், பூஜிதகுரு.தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

    திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும்போது திரளான அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைகிறது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாமிதோப்பிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. காவல்துறை சார்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

    • விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • அய்யாவழி அன்பு கொடிமக்கள் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கடந்த 111 நாட்களாக தவவேள்வி நடைபெற்றது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. நாட்டில் அமைதி நிலவவும், தொழில் மேன்மை, கல்வி மேன்மை அறிவியல் மேன்மை போன்றவற்றை வலியு றுத்தியும் அய்யாவழி முறைப்படி ஆன்மீகம் தழைப்பதற்காகவும் இந்த வேள்வி நடைபெற்றது.

    நிறைவு நாள் விழா நிகழ்ச்சி அய்யா வழி சமய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் நடந்தது. அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி முன்னிலை வகித்தார்.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் முருகேசன் மற்றும் மகாராசன், முத்து கிருஷ்ணன் மற்றும் சேனா பள்ளி கோபாலகிருஷ்ணன், அய்யாவழி அன்பு கொடிமக்கள் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    • பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமானவரை தேடி வருகின்றனர்.

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி அருகே பிள்ளை யார் கோவில் பகுதியை சேர்ந்த வர் நேவிஸ் ஜெயராஜ் (வயது 37). இவரது மனைவி எலிசபெத் ராணி (27). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எலிசபெத் ராணி செல்போனில் நீண்டநேரம் பேசுவாராம். இதை நேவிஸ் ஜெயராஜ் கண்டித்தார். சம்பவத்தன்று எலிசபெத் ராணி பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. குழந்தையையும் காண வில்லை.

    இதையடுத்து உறவி னர்கள், நண்பர்கள் வீடு களில் தேடியும் அவர்களை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து நேவிஸ் ஜெயராஜ் மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.

    • மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பரமன்விளையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர் கூலி வேலை செய்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் குடிப்பழக்கத்தால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்த அவரது உறவினர்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இது குறித்து கண்ணனின் தம்பி வைகுண்டம் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்கிறார்கள்
    • பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்

    ஆரல்வாய்மொழி :

    மலையாள மொழி பேசும் மக்கள் எல்லாம் வாழுகின்ற இடங்களில் கொண்டாடப்படும் ஓணம். நாளை திருவோணம் அத்தப்பூ கோலமிட்டு உலகை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதால் அத்தப்பூ கோலமிட தேவையான பூக்கள் அனைத்தும் தோவாளை பூச்சந்தையில் கிடைக்கும் என்பதால் கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 300 டன் பூக்கள் ராயக்கோட்டை, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளில் பூக்கள் வந்து இறங்கியது. நேற்று முன்தினம் தொடங்கிய வியாபாரம் விடிய விடிய நடந்து வருகிறது.

    ஆனாலும் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500, பிச்சிப்பூ ரூ.600, பட்ட ரோஸ் ரூ.200, அரளி ரூ.150, சேலம் அரளி ரூ.400, சம்பங்கி ரூ.250, கிரோந்தி ரூ.100, மஞ்சள் கிரோந்தி ரூ.70, கொழுந்து ரூ.120, மரிக்கொழுந்து ரூ.140, தாமரை ரூ.5, துளசி ரூ.40, பச்சை ரூ.10, கோழிப்பூ ரூ.100 உள்ளிட்ட பல பூக்களும் விலை குறைந்து காணப்படுகிறது. பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ரூ.1000, ரூ.2 ஆயிரம் என விற்பனையான பூக்கள் இந்த ஆண்டு விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×