என் மலர்
நீங்கள் தேடியது "ரப்பர் ஷீட்டுகள்"
- பழைய வீட்டை ரப்பர் ஷீட்டுகள் உலர வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார்.
- எரிந்த ரப்பர் ஷீட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று தெரிவித்தார்.
திருவட்டார் :
குலசேகரம் அருகே திற்பரப்பு அருவிக்கு செல்லும் சாலை பகுதியை சேர்ந்தவர் ஷா (வயது 50). இவருக்கு சொந்தமாக ரப்பர் தோட்டம் உள்ளது. அதிலிருந்து கிடைக்கும் ரப்பர் ஷீட்டுகளை தன் வீட்டின் பின்புறம் உள்ள தனக்கு சொந்தமான பழைய வீட்டை ரப்பர் ஷீட்டுகள் உலர வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார்.
தினமும் ரப்பர் ஷீட்டுகளை உலர் கூடத்தில் காய வைத்து கம்பியில் தொங்க போட்டு அடியில் விறகு வைத்து தீ மூட்டி உலர்த்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் ரப்பர் உலர் கூடத்தில் இருந்து தீ மளமளவென்று எரிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து ஷா அதிர்ச்சி அடைந்தார். உடனே பக்கத்து வீட்டுகாரர்களின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
தற்போது வெயில் காலம் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே குலசேகரம் தீயணைப்பு நிலையத்து தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். எரிந்த ரப்பர் ஷீட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று தெரிவித்தார்.






