என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்
- பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமானவரை தேடி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி :
மணவாளக்குறிச்சி அருகே பிள்ளை யார் கோவில் பகுதியை சேர்ந்த வர் நேவிஸ் ஜெயராஜ் (வயது 37). இவரது மனைவி எலிசபெத் ராணி (27). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எலிசபெத் ராணி செல்போனில் நீண்டநேரம் பேசுவாராம். இதை நேவிஸ் ஜெயராஜ் கண்டித்தார். சம்பவத்தன்று எலிசபெத் ராணி பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. குழந்தையையும் காண வில்லை.
இதையடுத்து உறவி னர்கள், நண்பர்கள் வீடு களில் தேடியும் அவர்களை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து நேவிஸ் ஜெயராஜ் மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.
Next Story






