search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வசந்தகுமார் நினைவிடத்தில் சிலைக்கு அமைச்சர்கள் மாலை
    X

    வசந்தகுமார் நினைவிடத்தில் சிலைக்கு அமைச்சர்கள் மாலை

    • 3-ம் ஆண்டு நினைவு நாள்
    • விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்திலும் இன்று வசந்தகுமார் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி குமரி மாவட்டம் அகஸ்திஸ்வ ரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அரசியல் கட்சியினர் திரண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு ஆகியோர் காலையிலேயே மணி மண்டபம் வந்து அங்குள்ள வசந்தகுமார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர். மேலும் வசந்தகுமா ரின் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார், மகள் தங்கமலர், மகன்கள் விஜய்வசந்த் எம்.பி., வினோத், மருமகன் ஜெகநாத், மைத்துனர் காமராஜ் ஆகியோரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.முக. வினர் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

    நினைவு தினத்தை முன்னிட்டு வசந்தகுமார் மணி மண்டபத்தில் இன்று பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.நாகர்கோவிலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்திலும் இன்று வசந்தகுமார் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

    அவரது படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கட்சியினர் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×