என் மலர்
கன்னியாகுமரி
- இன்று காலை தொடங்கியது
- பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
கன்னியாகுமரி, செப்.17-
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருந்திரு விழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக்கார்த்திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பயனாக தற்போது பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கம் சிற்பி சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்து உள்ளார். இந்த நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவது குறித்த தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
கோவில் கொலு மண்டபத்தில் நடந்த இந்த தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த 5 நம்பூதிரிகள் பங்கேற்று தேவபிரசன்னம் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன்நாயர், ஜோதீஸ்வரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
- கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் 11 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
- பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி?இறந்தார் என்பது தெரிய வரும்
குளச்சல் :
குளச்சல் அருகே ரீத்தாபுரம் ஒற்றப்பனவிளையை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 79).இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உண்டு.இதில் ஆல்பின் ஜெபராஜ் (39) தவிர மீதி 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.ஆல்பின் ஜெபராஜ் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்காக அவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அடிக்கடி வீட்டிலிருந்து காணாமல் போகும் இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் 11 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மீண்டும் எங்கேயோ சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார்.யாரிடமும் பேசாமல் இருந்த அவர் இரவு மேல் மாடி படுக்கை அறைக்கு சென்றார்.நேற்று காலையில் பார்க்கும்போது ஆல்பின் ஜெபராஜ் கீழே விழுந்து இறந்து கிடந்தார்.அவர் மாடியி லிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது கால் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து தெரிய வில்லை.இது குறித்து அவரது தந்தை ராஜாமணி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி?இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- அக்டோபர் மாதம் 2-ந்தேதி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சென்றடைகிறது.
- அமைதி நடைபயணம் மொத்தம் உள்ள 700 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்து செல்கிறது.
கன்னியாகுமரி :
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153-வது பிறந்த நாள் விழா வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புத்தமத அமைப்பான நிப்போன்சான் மயோகோஜி என்ற அமைப்பும் இணைந்து அமைதி மற்றும் அகிம்சைக்காக கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை புத்த மத துறவிகள் காந்திய வழியில் அமைதி நடைபயணம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இந்த நடை பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கியது. இந்த நடைபயணத்துக்கு புத்த மத துறவி இஸ்தானி தலைமை தாங்கினார். புத்த மதப்பெண் துறவிகள் லீலாவதி, கிமுரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அமைதி நடைபயணத்தை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த புத்தமத துறவிகளின் அமைதி நடைபயணம் கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, நாங்கு நேரி, சங்கரன்கோவில் ராஜபாளையம், கல்லுப்பட்டி வழியாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சென்றடைகிறது.
இந்த அமைதி நடைபயணம் மொத்தம் உள்ள 700 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்து செல்கிறது.
- மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- ஆக்சிஜன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மறவன் குடியிருப்பு புனித மரி யன்னை தொடக்கப்பள்ளியில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் இன்று நடந்தது.
முகாமை மறவன்குடி யிருப்பு ஊர் தலைவர் ஆண்டனி எட்வின் தொடங்கி வைத்தார். பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் பாபி, சிவனேசன், சமீன், மதன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். பொது மருத்துவம், ரத்த பரிசோதனை, ஆக்சிஜன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கு தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின், ஸ்டீபன் அமலதாஸ், ஆரோக்கிய வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இன்று பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நடைபெற்றது
- ஒரே இடத்தில் கிடைக்க கவுன்சிலர் அய்யப்பன் ஏற்பாடு
என்.ஜி.ஓ.காலனி :
பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படு வதையொட்டி நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப்பன் ஏற்பாட்டில் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதமர் மோடி கொண்டு வந்த 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
முகாமில் வேலைவாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொதுமருத்துவம், பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற நடவடிக்கை, பான் கார்டு பெற நடவடிக்கை, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை, விவசாயம் செய்ய விவசாய நிலத்தின் மண் பரிசோதனை, இலவச கியாஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு இலவச கியாஸ் அடுப்பு பெற்று தருதல், இலவச வீடு கிடைக்காதவர்களுக்கு இலவச வீடு பெற்று தர ஏற்பாடு செய்தல் ஆகிய வற்றுக்கான நடவடிக்கை உள்ளிட்ட உதவிகள் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட நபர்கள் என அனைவரும் பங்கேற்றனர். வார்டுக்கு ட்பட்ட பொதுமக்கள் அனை வரும் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையும்படி நாகர்கோ வில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப் பன் கேட்டுகொண்டுள்ளார்.
- கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின.
- 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, கடல் சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையை யொட்டி நேற்று முன்தினம் காலையில் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. இதனால் நேற்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
பின்னர் 10 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதேபோல இன்றும் 3-வது நாளாக காலையில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.
இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத் துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.
மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- உரிய ஆவணங்களுடன் அதற்குரிய காப்பீடு கட்டணம் செலுத்தினால் பயன்பெறலாம்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் கும்பப்பூ பருவத்தில் நெல் சாகுபடி செய்வதற்கு தேவையான நெல் விதைகள் வேளாண்மை துறை மூலம் வினியோகம் செய்திட 80 மெட்ரிக் டன் இலக்காக பெறப்பட்டது. இதற்கு தேவையான விதைகள் அரசு விதைப்பண்ணை, திருப்பதிசாரம் மற்றும் உதவி விதை அலுவலர்க ளால் விவசாயிகளின் வயலில் விதைப்பண்ைண அமைக்கப்பட்டு 114 மெட்ரிக் டன் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 92 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு கும்பப்பூ பருவத்தில் சாகுபடி செய்வதற்காக வினியோகம் செய்யப் பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தற்போது கும்பப்பூ பரு வத்தில் சாகுபடி செய்ய தேவையான விதைகளை பெற தங்கள் தாலுகா வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளவும், மேலும் அடுத்த ஆண்டு கன்னிப்பூ பருவத்திற்கு விவசா யிகளுக்கு தேவையான விதைகளை வினியோகம் செய்ய 102 எம்.டி. இலக்காக பெறப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான விதை களை உற்பத்தி செய்ய இந்த ஆண்டு கன்னிப்பூ பரு வத்தில் 110 ஏக்கர் பரப்பிற்கு அம்பை 16, டி.பி.எஸ்.- 5 மற்றும் பாரம்பரிய ரகங்க ளான பூங்கார், கருங்குறுவை ஆகிய ரகங்கள் அரசு விதைப்பண்ணை, திருப்பதி சாரம் மற்றும் உதவி விதை அலுவலர்களால் விவசாயி களின் வயலில் விதைப் பண்ணை அமைக்கப் பட்டுள்ளது.
மேற்படி விதைப் பண்ணைகள் விதைச்சான்று துறையினரால் உரிய ஆய்வு மேற்கொண்டு சான்றளிக் கப்பட்டு ஆதாரம் மற்றும் சான்று விதைகளாக வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயி களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.
மேலும் கும்பப்பூ பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்து அதனை காப்பீடு செய்ய உரிய ஆவணங்களுடன் அதற்குரிய காப்பீடு கட்டணம் செலுத்தினால் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தே.மு.தி.க. சார்பாக நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்
- கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் :
தே.மு.தி.க. 19-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட தே.மு.தி.க. சார்பாக நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை செயலாளர் ஆனிஸ் அலெக்ஸ் வரவேற்றார்.
மாவட்ட அவைத்தலை வர் ராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் கேப்டன் ஜெகன், ராஜமோகன், ராஜேஷ், கிழக்கு பகுதி செயலாளர் நாஞ்சில் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி துணை செயலாளர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கூட்டத்தில் வைகுண்ட ராஜா, சிவானந்த், செல்ல பெருமாள், ராஜாமணி, மறவை நாராயணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
- மலைக்கு செல்வதற்காக 500 படிக்கட்டுகள் உள்ளன.
- பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி மலை உச்சி வரை இலகுவாக ஏறி சென்று வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயரம் உள்ள மருந்து வாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் சித்த மருத்துவ மருந்து தயாரிப்பதற்கான மூலிகை கள் ஏராளமாக வளர்ந்து உள்ளன.
இதனால் இந்த மலைக்கு மருந்துவாழ் மலை என்று பெயர் வரக் காரணம் ஆயிற்று. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலையில் ஜோதிலிங் கேஸ்வரர் கோவில், பர மார்த்தலிங்க சுவாமி கோவில், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று "மகா தீபம்" ஏற்றப்படுவது வழக் கம். இதனால் இந்த மலைக்கு குமரியின் திருவண்ணா மலை என்று ஒரு பெயரும் உண்டு.
இந்த மலையில் சித்தர்கள் தவமிருக்கும் குகைகளும் உள்ளன. இந்த மலைக்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். இந்த மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மழையின் உச்சிவரை சென்று குமரியின் இயற்கை அழகை பார்த்து ரசிப்பது வழக்கம். இந்த மலைக்கு செல்வதற்காக 500 படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிக்கட்டுகள் சேத மடைந்த நிலையில் காணப் பட்டன.
இதைத்தொடர்ந்து மருந்து வாழ் மலை பாது காப்பு இயக்கம் சார்பில் சேதம் அடைந்த இந்த 500 படிக் கட்டுகளும் சீரமைக் கப்பட்டு உள்ளன. பொது மக்கள் மற்றும் பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெற்று இந்த படிக்கட்டுகள் சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. இதனால் தற்போது பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி மலை உச்சி வரை இலகுவாக ஏறி சென்று வரு கிறார்கள்.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அங்கன்வாடி கட்டிடத்தை குழந்தைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆல்பர்ட் ஜெனில், முன்னாள் கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிளைமெண்ட் பிரேம்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- தொழிலாளர் நல அதிகாரி எச்சரிக்கை
- குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணி கண்டபிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
மின்னணு மற்றும் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பழுது பார்க்கும் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தி னர் பணியில் ஈடுபடுத்தப்படு கிறார்களா? என்று நாகர்கோவில் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகி யோருடன் நடத்தப்பட்டது.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்க ளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்ப டும். குழந்தை தொழிலா ளர்களை பணியில் அமர்த்து வது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணிலோ, 04652-229077 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் தொடங்கி வைத்தார்
- விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு
கன்னியாகுமரி :
உலக சுகாதார நிறுவனம் 2023-ம் ஆண்டை சிறுதானி யங்கள் ஆண்டாக அறி வித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய சுகாதார நிறுவனமும் சிறுதானிய கழகமும் இணைந்து சிறுதானிய உணவினை
உ ட்கொள்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு பகுதிக ளில் சிறுதானியங்கள் பற்றிய கண்காட்சி, உணவு திருவிழா மற்றும் நடை பயணம் போன்ற நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கன்னியாகுமரியில் இன்று காலை கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சிறுதானியங்கள் விழிப்புணர்வு நடைபயணம் நடை பெற்றது.
திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இருந்து இந்த நடை பயணம் தொடங்கியது. இந்த நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கி னார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ.சேதுரா மலிங்கம் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு சிறுதானிய விழிப்புணர்வு நடைபயணத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் தி.மு.க. பிரமுகர் டாக்டர் சுந்தர்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






