என் மலர்
கன்னியாகுமரி
- கன்னியாகுமரியில் இன்று அமாவாசையையொட்டி இயற்கை மாற்றம்
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 3 மணி நேரம் பாதிப்பு
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிகடலில் சுனாமிக்கு பிறகுஅடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப் பு, ராட்சதஅலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன.
குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில்அமா வாசையை யொட்டிகடந்த 15-ந்தேதி முதல் காலையி ல்மட்டும் கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படு கிறது. இதனால் அன்று முதல் இன்று வரை காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்ட பத்துக்கு தொடங்க வேண்டிய படகுபோக்குவரத்து தொடங்க வில்லை.11மணிக்கு கடல் சகஜ நிலை க்கு திரும்பிய பிறகு 3 மணி நேரம் தாமதமாக காலை 11மணிக்கு தான் படகு போக்குவரத்து தொடங்குகிறது.
அதேபோல இன்றும் 4-வது நாளாக காலையில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
இதனால்கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு 3மணி நேரம் தாமதமாக காலை 11மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
திருவள்ளுவர் சிலைக்கு ம் விவேகானந்தர் மண்ட பத்துக்கு இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர்சிலைக்கு படகு போக்குவரத்து நடை பெறவில்லை.
மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவ த்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றமா க காணப்பட்டது.இதனால் இந்தகடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நட த்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- காட்டாத்துறை ஊராட்சி இளைஞர் காங்கி ரஸ் சார்பாகவும் முளகு மூட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
திருவட்டார் :
அகில இந்தியா காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜிடோ யாத்திரையின் ஓராண்டு நிறைவு ஆனதை யொட்டி பத்மநாபபுரம் தொகுதி இளைஞர் காங்கி ரஸ்சும், காட்டாத்துறை ஊராட்சி இளைஞர் காங்கி ரஸ் சார்பாகவும் முளகு மூட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தொகுதி தலைவர் சக்தி வேல், கண்ணனூர் இளை ஞர் காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபென் ஆசீர் ஆகியோர் தலைமை தாங்கினர். கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், இளைஞர் காங்கிரஸ் விஜய், ரூபன், ஸ்டெபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால்சிங், மாவட்ட பொருளாளர் ஐஜபி.லாரன்ஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, வட்டார தலைவர் வழக்கறிஞர் ஜெபா, வேர் கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜிர்ஜெப சிங்குமார், மாவட்ட பொது ச்செயலாளர் ஜெகன்ராஜ், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் பலர் கலந்துகொண்ட னர்.
- குமரியில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
- மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம்
நாகர்கோவில் :
கலைஞர் மகளிர் உரிமை த்தொகை திட்ட த்தின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்ட த்தை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 77 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களில் 4 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்ட த்திற்கு விண்ணப்பித்திரு ந்தனர்.
இதில் 2 லட்சம் விண்ண ப்பங்களில் குறைபாடுகள் இருந்ததையடுத்து களப்பணியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொ ண்டனர். இதை த்தொட ர்ந்து தகுதியான பயனா ளிகள் பட்டியல் தேர்வு செய்யப்ப ட்டது.
தகுதியான பயனாளிகள் குறித்த விபரங்கள் கடந்த 15-ந்தேதி முதல் செல்போ னில் குறுஞ்செ ய்தி மூல மாக அனுப்பப்பட்டு வருகி றது. ரூ.1000 உதவி தொகை க்கான குறுஞ்செய்திகள் நேற்றும் பலருக்கு வந்தது. இதை பார்த்து பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் சுமார் 70 சதவீதம் பேருக்கு உதவித்தொகை வந்திருப்ப தாக கூறப்படு கிறது.
மீதமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. நிராகரிக்கப்பட்டதில் முக்கிய காரணம் அரசு அலுவலர்கள் மற்றும் பென்ஷன் திட்டத்தில் உதவி பெறுபவர்கள் விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. இருப்பினும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிரா கரிக்கப்பட்டவர்களு க்கான விண்ணப்பங்கள் எதற்கு நிராக ரிக்கப்பட்டது என்பது குறித்த விபரங்கள் செல்போனில் குறு ஞ்செய்தி மூலமாக இன்று முதல் அனுப்புவதற்கு ஏ ற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த குறைபாடுகளை கலைந்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை யடுத்து உதவித்தொகை கிடைக்காமல் இருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் குறுஞ்செய்தி எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறுஞ்செய்தி வந்தவுடன் அந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவல கத்திற்கு சென்று குறைபாடு களை சரி செய்து 30 நாட்களுக்குள் வழங்கினால் மீண்டும் கலைஞர் உரிமை த்தொகை திட்டத்தற்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, கிள்ளியூர், தோவாளை, கல்குளம், திருவட்டார் தாலுகா அலுவலகங்களிலும், நாகர்கோவில், தக்கலை ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களில் பொதுமக்கள் தங்களது குறைபாடுகளை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க லாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
- தேவப்பிரசன்னத்தில் தகவல்
- பஞ்சலோக விக்கிரகங்களில் கால் மற்றும் கை பகுதிகளில் சிறுசிறு கீறல்கள் உள்ளது அதனை மாற்ற வேண்டும்
கன்னியாகுமரி :
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நா ட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ராஜகோ புரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையா கவே இருந்து வருகிறது. அஸ்தி வாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேவப்பி ரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. திருவனந்த புரத்தை சேர்ந்த சூர்யானந்த் சர்மா, சசிதர சர்மா, நடராஜ அய்யர், பத்மநாப அய்யர் ஆகிய 4 நம்பூதிரிகள் தேவ பிரசன்னம் பார்த்து அருள்வாக்கு சொன்னா ர்கள். மணலிக்கரைமாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ சஜித், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ரா மகிரு ஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, ஜோதீஸ்வரன், நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்கா ணிப்பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், திருக்கோவிலூர் மராமத்து பிரிவு பொறி யாளர் ராஜ்குமார், மண்டல ஸ்தபதி செந்தில், முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தேவப்பிரசன்னத்தின் போது கேரளநம்பூதிரிகள் வெற்றிலை மூலமும் சோவியை குலுக்கிபோட்டு பார்த்தும் சொன்ன அருள்வாக்கு முழு விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி கடற்கரையில் தவக்கோல த்தில் பகவதி அம்மன் வீற்றிருப்பதால் இந்த கோவில் அதிக சக்தி வாய்ந்த கோவிலாக திகழ்கிறது. முனிவர்களும், ரிஷிகளும், மகான்களும், சித்தர்களும் தவசு இருந்து முக்திபெற்ற தலமாகும். திருமணம் முடியாமல் இருக்கும் கன்னி பெண்களுக்கு இந்த கோவிலில் தொடர்ந்து 11 வாரம் சுயவரம் அர்ச்சனை செய்தால் திருமணம் நடக்கும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு வருவதற்கு இந்த தலத்தை நாடி வந்தால் வெற்றி கிடைக்கும். வேலை கிடைக்க வேண்டும் என்று இந்த கோவிலில் வந்து தரிசனம் செய்தால் வேலை உடனடியாக கிடைக்கும்.
இந்த கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்ப டாமல் பாழாகி கிடக்கிறது. அதனை உடனடி யாக சீரமைத்து தெப்ப திருவிழாவை ஒழுங்காக நடத்த வேண்டும். இந்த கோவிலின் சன்னதி தெருவில் அமைந்துள்ள பாபநாச தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு அந்த குளத்தில் இருந்து கோவிலுக்கு சுரங்கப்பாதை வழியாக வந்து தான் மேல் சாந்திகளாக இருக்கும் போற்றிமார்கள் அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்த வேண்டும். ஆனால் அந்த பாபநாச தீர்த்தகுளம் இன்று கழிவு பொருட்கள் கலந்து சுத்தம் இல்லாமல் உள்ளது. அதனை உடனடியாக சுத்த ப்படுத்தி மேல் சாந்திகள் அங்கு குளித்துவிட்டு வந்து தான் பூஜை நடத்த வேண்டும்.
கோவிலில் உள்ள கொடிமரத்தில் கீறல் விழுந்து சேதமடைந்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். தங்க கொடிமரம் வைக்கலாம்.
அம்மனின் பஞ்சலோக விக்கிரகங்களில் கால் மற்றும் கை பகுதிகளில் சிறுசிறு கீறல்கள் உள்ளது அதனை மாற்ற வேண்டும். இந்த கோவிலுக்கு ஸ்தல விருச்சமாக கன்னி மூலையில் சந்தன மரம் நட வேண்டும். கோவிலின் வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும். மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும்பணியை தொடங்க வேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கி கொள்ளலாம்.
இவ்வாறு தேவ பிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.
- பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
- விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்
குளச்சல் :
குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
தமிழக முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டா லின் தேர்தல் வாக்குறுதிப்படி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 வழ ங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இது ஏழை, எளிய பெண்கள், உழை க்கும் இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தை நடத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு மேல் பெண்கள் பயனடைகின்றனர். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு தான் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது.
மீதி 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர்களின் செல்போ னுக்கு குறுஞ்செய்தி வரவி ல்லை. மகளிர் உரிமை தொகை கிடைக்கா தவர்கள் குழப்ப மடைந்து ள்ளனர். தகுதி யானவர்களுக்கு கிடைக்கா ததால் பீதியடைந்துள்ளனர். இவர்கள் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கு குறித்து வி பரம் கேட்கும் நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். இதனால் வங்கிகளில் கூட்டம் கூடு கிறது. தொ கை கிடைக்கா தவர்கள் இன்று முதல் ஒரு மாதத்தி ற்குள் மேல் முறையீடு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து ள்ளார்.
மேல் முறையீட்டில் தகுதி உள்ள விண்ணப்ப ங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு உரிமை தொகை வழங்க வேண்டும். தொழி லாளர் நல வாரியத்தில் சேர்ந்தவர்கள், விதவை பென்சன் வாங்கு பவர்க ளின் விண்ணப்ப ங்கள் நிராகரிக்கப்பட்டு ள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தொகை பெற விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் பெண்களின் சமூக நீதி காப்பாற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- திருவட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்க போலீசார் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
- பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவட்டார் :
கன்னியாகுமரி மாவட் டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப டவுள்ள நிலையில் மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 5000-க்கும் மேற்பட்ட சிலைகள் பொதுஇடங்கள் மற்றும் ஆலயங்களில் பூஜையில் வைக்கபட்டு வருகிற 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கன்னியா குமரி, சொத்த விளை கடற்கரை, குழித்துறை, தாமிரபரணி, திற்பரப்பு ஆறுகளில் விநாயகர் சிலைகள் பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்து கொண்டு விஜர்சனம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மாவட்டத்தில் ஆற்றூர், திருவட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்க போலீசார் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
இதேபோல் திருவட்டார் அருகே தோட்டவாரம் பகுதியில் சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ்பிரகாஷ் என்பவரது வீட்டில் பொதுஇடங்களில் பூஜையில் வைப்பதற்கு வழங்குதற்கான வைக்க பட்டிருந்த விநாயகர் சிலை களை நள்ளிரவில் திரு வட்டார் தாசில்தார் முருகன் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் நள்ளி ரவில் திடீரென வீட்டிற்குள் புகுந்து பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த வருடம் விநாயகர் சிலைகள் பூஜைகளில் வைக்கபட்ட பகுதிகளிலும் தற்போது விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை மாலத்தீவு கப்பல் படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.
- காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்
நாகர்கோவில் :
இரவிபுத்தன்துறையை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மாதம் 7-ந்தேதி ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு மாலத்தீவுக்கு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மோதியதில் படகு முற்றிலும் சேதமடைந்தது. இதில் மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை மாலத்தீவு கப்பல் படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.
இந்நிலையில் அவர்கள் சொந்த ஊரான குமரி மாவட்டம் இரையு மன்துறைக்கு வந்து சேர்ந்த னர். அவர்களை விஜய்வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் மீனவர்கள் தரப்பில் சேதமடைந்த படகு மற்றும் பொருட்களுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மோதிய கப்பல் நிறுவனத்தி டம் இருந்து நஷ்ட ஈடாக பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் விஜய் வசந்த் எம்.பி. டெல்லி தூதரக அதிகாரியிடம் பேசி இதற் கான முயற்சி மேற்கொள ளப்படும் எனவும், காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.
நிகழ்ச்சியில் இரவி புத்தன்துறை பங்குத்தந்தை ரெஜூஸ்பாபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கிய ராஜன், தூத்தூர் கிறிஸ்து தாஸ், பஞ்சாயத்து கமிட்டி தலைவர் லைலா, கவுன்சிலர் பேபி ஜான், காங்கிரஸ் பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜஸ்டின், நாகர்கோவில் மாநகர தலைவர் நவீன்குமார், குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- சுருளோட்டில் அதிகபட்சமாக 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை நீர்மட்டமும் 9.60 அடியாகவே இருந்து வருகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ரம்யமான சூழல் நிலவுகிறது. இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது.
மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையிலும் லேசான மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழைகொட்டி தீர்த்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிக ரித்து உள்ளது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 781 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழையின் காரணமாக பாசன குளங்க ளும் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி யுள்ளனர். பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், சுசீந்திரம், தக்கலை பகுதி களில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். உழவு பணி, நாற்று பாவும் பணி நடந்து வருகிறது. மழையும் விட்டுவிட்டு பெய்து வருவதால் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.58 அடியாக உள்ளது. அணைக்கு 612 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.30 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. மாவட் டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக பரவலாக மழை பெய்த பிறகும் பொய்கை, மாம்பழத்துறை யாறு, முக்கடல் அணை களின் நீர்மட்டம் உயர வில்லை. முக்கடல் அணை தொடர்ந்து மைனஸ் அடியிலேயே இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 10.90 அடியாக இருந்தது.
54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்து றையாறு அணையின் நீர்மட்டமும் 3.28 அடியாக உள்ளது. இந்த அணை வறண்டு குட்டை போல் காட்சி அளிக்கிறது. மழை பெய்த பிறகும் அணையின் நீர்மட்டம் உயராததால் இந்த அணையை நம்பி பாசனம் செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அணைகளுக்கு நீர்வரத்து வரக்கூடிய பகுதிகளில் உள்ள மணல் திட்டுகளே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே அந்த மணல் திட்டுகளை உடனடியாக அகற்றி அணைக்கு தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதேபோல் 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை நீர்மட்டமும் 9.60 அடியாகவே இருந்து வருகிறது.
- கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
- பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது
நாகர்கோவில் :
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நாகர்கோவிலில் மீனாட் சிபுரம், வடிவீஸ்வ ரம், கோட்டார், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பகுதி களில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று அதி காலையில் நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. கோவிலில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதேபோல் அகஸ்தீஸ்வ ரம், ராஜாக்கமங்கலம், மேல்புறம், குழித்துறை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்க ளிலும் அதி காலையில் நடை திறக்கப் பட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பத்தோடு வந்து பக்தர்கள் விநாயகரை வழி பட்டு சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி யையொட்டி பொது இடங்களிலும், கோவில்களிலும், வீடுகளி லும் விநாயகர் சிலைகள் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளை பகுதியில் உள்ள கோவிலில் 9 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. விநாயகர் சிலைக்கு அருகம்புல், கொழுக்கட்டை, பழம், சுண்டல் படைத்து வழிபட்டனர்.
பின்னர் விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கட் டது. இதேபோல் நாகர் கோவில் நகரில் வடசேரி, பள்ளிவிளை, வைத்தியநா தபுரம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், மேல்புறம் ஒன்றி யத்துக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அலங்கார தீபாரதனைகள் நடந்தது. ½ அடி முதல் 9 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு காலை, மாலை 2 வேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்க ளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22, 23, 24-ந்தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.
- வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாகர்கோவில் :
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் கேட்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், அணி அமைப்பாளர்கள் இ.என். சங்கர், அருண் காந்த் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவைத் தலைவர் சேவியர் மனோகரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் மற்றும் வடிவை மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன், அந்தோணி ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் :
கோட்டார் பஜனைமட தெருவை சேர்ந்தவர் துளசிராம் (வயது 56). இவர் நாகர்கோவிலில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து துளசிராம் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டு நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சி களை கைப்பற்றி போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோ வில் நகரில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மார்த்தாண்டம் பழைய தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன் (28), இவர் பம்மம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ந்தேதி பம்மம் பெட்ரோலியம் அருகாமையில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார்.
பின்னர் மதியம் வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரை பகுதிகளில் கான்கிரீட் அமைக்க துரித நடவடிக்கை
- 8 மீட்டர் அகலத்திற்கு 4 ½ மீட்டர் உயரத்திற்கு 80 அடி நீளத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஊட்டு வாழ் மடத்தில் ரெயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை அமைப்ப தற்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்களுக்கு வசதியாக தற்காலிக பாதை அமைத்து கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமாக தண்டவாளத்தின் கீழ் கர்டர் கருவி பொருத்தப்பட்டு கான்கிரீட் அமைக்கப்பட்டது. பின்னர் தண்டவாளத்தின் கீழே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
ஜே.சி.பி. எந்திரம் மூலமாக கடந்த 2 வாரங்களாக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. 8 மீட்டர் அகலத்திற்கு 4 ½ மீட்டர் உயரத்திற்கு 80 அடி நீளத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்டதையடுத்து தரையில் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
இந்த பணியை துரிதமாக முடிக்க இரவு பகலாக பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது சுரங்கப்பாதையில் கம்பி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் கம்பி கட்டும் பணி முடிவடைந்து சுரங்கப்பாதையின் கரை பகுதி காங்கிரீட் அமைக்கப்படும் என்று தெரிகிறது.
சுரங்கப்பாதை பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணியில் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சுரங்கப்பாதை வரும் பட்சத்தில் அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு கிராம மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை பயனுள்ளதாக இருக்கும்.
ஏற்கனவே பல மணி நேரம் காத்திருந்து ரெயில்வே தண்டவாளத்தை கடந்து பொதுமக்கள் வருவதால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டே தற்பொழுது சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சுரங்கப்பாதை பணி முடிவுக்கு வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு மிகவும் பேருதவியாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.






