search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் வீடுகளிலும், பொதுஇடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    X

    குமரி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் வீடுகளிலும், பொதுஇடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    • கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    • பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    நாகர்கோவிலில் மீனாட் சிபுரம், வடிவீஸ்வ ரம், கோட்டார், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பகுதி களில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று அதி காலையில் நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. கோவிலில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இதேபோல் அகஸ்தீஸ்வ ரம், ராஜாக்கமங்கலம், மேல்புறம், குழித்துறை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்க ளிலும் அதி காலையில் நடை திறக்கப் பட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பத்தோடு வந்து பக்தர்கள் விநாயகரை வழி பட்டு சென்றனர்.

    விநாயகர் சதுர்த்தி யையொட்டி பொது இடங்களிலும், கோவில்களிலும், வீடுகளி லும் விநாயகர் சிலைகள் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளை பகுதியில் உள்ள கோவிலில் 9 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. விநாயகர் சிலைக்கு அருகம்புல், கொழுக்கட்டை, பழம், சுண்டல் படைத்து வழிபட்டனர்.

    பின்னர் விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கட் டது. இதேபோல் நாகர் கோவில் நகரில் வடசேரி, பள்ளிவிளை, வைத்தியநா தபுரம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், மேல்புறம் ஒன்றி யத்துக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அலங்கார தீபாரதனைகள் நடந்தது. ½ அடி முதல் 9 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு காலை, மாலை 2 வேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்க ளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22, 23, 24-ந்தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.

    Next Story
    ×