search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 வாரங்களாக மழை பெய்த பிறகும் குட்டை போல் காட்சியளிக்கும் மாம்பழத்துறையாறு அணை
    X

    3 வாரங்களாக மழை பெய்த பிறகும் குட்டை போல் காட்சியளிக்கும் மாம்பழத்துறையாறு அணை

    • சுருளோட்டில் அதிகபட்சமாக 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை நீர்மட்டமும் 9.60 அடியாகவே இருந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ரம்யமான சூழல் நிலவுகிறது. இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையிலும் லேசான மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழைகொட்டி தீர்த்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிக ரித்து உள்ளது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 781 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்க ளும் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி யுள்ளனர். பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், சுசீந்திரம், தக்கலை பகுதி களில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். உழவு பணி, நாற்று பாவும் பணி நடந்து வருகிறது. மழையும் விட்டுவிட்டு பெய்து வருவதால் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.58 அடியாக உள்ளது. அணைக்கு 612 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.30 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. மாவட் டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக பரவலாக மழை பெய்த பிறகும் பொய்கை, மாம்பழத்துறை யாறு, முக்கடல் அணை களின் நீர்மட்டம் உயர வில்லை. முக்கடல் அணை தொடர்ந்து மைனஸ் அடியிலேயே இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 10.90 அடியாக இருந்தது.

    54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்து றையாறு அணையின் நீர்மட்டமும் 3.28 அடியாக உள்ளது. இந்த அணை வறண்டு குட்டை போல் காட்சி அளிக்கிறது. மழை பெய்த பிறகும் அணையின் நீர்மட்டம் உயராததால் இந்த அணையை நம்பி பாசனம் செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அணைகளுக்கு நீர்வரத்து வரக்கூடிய பகுதிகளில் உள்ள மணல் திட்டுகளே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

    எனவே அந்த மணல் திட்டுகளை உடனடியாக அகற்றி அணைக்கு தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதேபோல் 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை நீர்மட்டமும் 9.60 அடியாகவே இருந்து வருகிறது.

    Next Story
    ×