என் மலர்
கன்னியாகுமரி
- கிராம சபா கூட்டத்தில் வலியுறுத்தல்
- செறியூட்டப்பட்ட அரிசிகளை ரேசன் கடைகளில் தடை செய்ய வேண்டும்
கருங்கல் :
கருங்கல் பேரூராட்சி 13-வது வார்டு பகுதி சபா கூட்டம் ஊற்றுமுகம் பகுதியில் நடைபெற்றது. பேரூராட்சி உறுப்பினர் பிறேம்சிங் தலைமை தாங்கினார். பகுதி தலைவர் மோகன், பேரூராட்சி அலுவலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். ஊற்றுமுகம் பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மாங்கன்றுவிளை அய்யா கோயில் முதல் ஊற்றுமுகம் பாலம் வரை மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், ஊற்றுமுகம் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், மாமூட்டுகுளம் கரை கட்டி படித்துறை அமைக்க வேண்டும், ஊற்றுமுகம் பகுதியில் சானல் கரைகட்டி சாலை அமைக்க வேண்டும், செறியூட்டப்பட்ட அரிசிகளை ரேசன் கடைகளில் தடை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 8 இடங்களில் கரைக்கப்படுகிறது
- போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் விநா யகர் சதுர்த்தியன்று இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகளுக்கு காலை, மாலை வேளைகளில் பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகள் நேற்று முன்தினம் கரைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டது. இன்று 3-வது நாளாக விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.
இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. நாகர் கோவில் நகர பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டது. நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சங்குத்துறை பீச்சில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.
அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு எடுத்து வரப்பட்டது. இங்கிருந்து இன்று மாலை ஊர்வலம் புறப்படுகிறது. ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பள்ளி கொண்டான் அணையில் கரைக்கப்படுகிறது.
குருந்தன்கோடு ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் ராதாகிருஷ்ணன் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மண்டைக்காடு கடலிலும், தக்கலை வைகுண்டபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லப்பட்டு மண்டைக்காடு கடலிலும் கரைக்கப்படுகிறது. முஞ்சிறை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலைகள் ஐந்து கண்ணு கலுங்கு பகுதியிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேங்காய் பட்டினம் கடலிலும், கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட விநாயகர் சிலைகள் கூனாலுமூட்டில் இருந்து ஊர்வலமாக செல்லப் பட்டு மிடாலம் கடலிலும், குழித்துறை நகரத்தில் உள்ள விநாயகர் சிலைகள் பம்பத்திலி ருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குழித்துறை ஆற்றிலும், மேல்புறம் ஒன்றி யத்துக்குட்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.
திருவட்டார் ஒன்றியத்துக்கு உட்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திற்பரப்பு அரு வியில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படு வதையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலை கொண்டு செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் அந்த நேரத்தில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
- 40 பள்ளிகளில் இருந்து 160 ஆசிரியர்கள் பங்கேற்பு
- அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு, மகிழ்ச்சியாக கற்றலை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் :
குமரி, நெல்லை, தூத்துக் குடி, சி.பி.எஸ்.இ பள்ளி களின் கூட்டமைப்பான தக்க்ஷின் சஹோதயா தென்மாவட்ட சி.பி.எஸ்.இ. பள்ளி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிலரங்கத்தை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தியது. பள்ளியின் நிறு வனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கினார். வின்ஸ் பள்ளி முதல்வர்டாக்டர் பீட்டர் ஆண்டனி சுரேஷ் வர வேற்றுப் பேசினார். டாக்டர் பினு மோன் பயிற்சியாளரை அறிமுகப்ப டுத்தி திருவனந்தபுரம் சிறப்பு பயிற்சியாளர் டாக்டர் பிஜுதாமஸ் பயிற்சியளித்தார்.
தொடக்க நிலை மாணவ - மாணவியரின் அறிவுத்திறனை மெருகூட்டும் வகையில் கற்பித்தலை மேற்கொள்வது, மதிப்பீட்டு வழிமுறை, கல்வி தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையை அனைத்து கோணங்களிலும் ஆசிரியர்களுக்கு விழிப்பு ணர்வுடன் கூட அதனை செயல்படுத்தும் வழிமுறை களும் இந்த பயிலரங்கத்தில் கற்பிக்கப்பட்டது. குழந்தை களுக்கு எளியமுறையில் ஆடிப்பாடி கற்பிப்பது குறித்து பல்வேறு குழு விளையாட்டுகள் பாடல்கள் நடனங்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு, மகிழ்ச்சியாக பயிலரங்கத்தில் கற்றலை மேற்கொண்டனர்.
சி.பி.எஸ்.இ. பள்ளி தொடக்க நிலைஆசிரியர்க ளுக்கு இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்றவாற அனுபவ வழிகற்றல் மற்றும் கற்பித்தல் கலைகளை மேம்படுத்தும் வகையில் இந்த இருநாள் திறன் வளர் பயிற்சி முகாம் நடை பெற்றது.
பயிற்சியினை வின்ஸ் பள்ளியின் செய லாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் மற்றும் கூட்ட மைப்பின் செயலாளர் டாக்டர் ஸ்ஓஹரா குஸைன் ஒருங்கிணைத்திருந்தனர். தக்க்ஷின் சஹோதயா கூட்டமைப்பின் பொரு ளாளர் மஞ்சு ராஜேஷ் நன்றி உரையாற்றினார். வின்ஸ் சி.பி.எஸ்.இ. ஆசிரியர் ஜெகன் பிரிட்டோ நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட 160 ஆசிரியர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
- அணைகளின் நீர்மட்டம் உயர்வு
- திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. சிற்றாறு-1 அணை பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்ச மாக 33.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திற்பரப்பு அருவி பகுதி யில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை களுக்கும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ½ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 1 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சி பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 20.89 அடியாக உள்ளது. அணைக்கு 1190 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. அணைக்கு 628 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.41 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.51 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 9.40 அடியாகவும் மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாக இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 15.10 அடியாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 23.2, பெருஞ்சாணி 7, சிற்றாறு1- 33.6, சிற்றாறு 2-26.2, பூதப்பாண்டி 1.4, களியல் 26.2, புத்தன்அணை 8.2, சுருளோடு 6.4, திற்பரப்பு 25.8.
- அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
- கோதையாறு சாலையை சீரமைக்க பல முயற்சிகள் செய்தோம், சிக்கல்கள் உருவாகி கொண்டே இருக்கிறது.
திருவட்டார் :
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி பேச்சிப்பாறை கடம்பமூடு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) சங்கரலிங்கம் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது :-
குமரி மாவட்டத்தில் 488 பழங்குடி குடும்பங்களுக்கு தற்போது பட்டா வழங்கும் வகையில், பரிசீலினை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களை கஷ்டத்திற்கு ஆளாக்ககூடாது என்று மாவட்டத்தில் தற்போது அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
முன்பெல்லாம் குமரி மாவட்ட சாலைப் பணிகளுக்கு அதிக பட்சம் 40 முதல் 45 கோடி ரூபாய் தான் வரும். ஆனால் இப்போது ஆண்டுக்கு ரூ. 200 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் செய்யப்படுகிறது. கோதையாறு சாலையை சீரமைக்க பல முயற்சிகள் செய்தோம், ஆனாலும் சிக்கல்கள் உருவாகி கொண்டே இருக்கிறது.
தற்போது வனத்துறை மூலமாகதான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் விஷயத்தில் மக்கள் யாரும் அதிருப்தி கொள்ள தேவையில்லை. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி உங்களுக்கு நன்மை செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன் நன்றி கூறினார். மாவட்ட வன அலுவலர் இளை யராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், வன உரிமைக் குழு மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ்காணி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
பொன்மனை பேரு ராட்சிக்கு உட்பட்ட வண்ணாரங்கோடு பகுதியில் உள்ள இளைஞர்க ளின் கோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ நிதியில் இருந்து சுமார் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான்சன், பேருராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி, தி.மு.க. பேரூர் செய லாளர்கள் ஜெபித்ஜாஸ், சேம் பெனட் சதீஷ், ஜான், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஜே.எம்.ராஜா, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திற்பரப்பு பேருராட்சிக்குட்பட்ட கோட்டூர் கோணம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டுவதற்க்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார். பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், தலைவர் பொன்.ரவி, வார்டு உறுப்பினர் மல்லிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொன்மனை மற்றும் மனியன் குழி பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தையும் அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் அனஸ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் வினு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
- சொத்தவிளை, சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு
- இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் நாளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் காலை, மாலை 2 வேளைகளும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. சிவசேனா சார்பில் வைக் கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று தாமிர பரணி ஆற்றில் கரைக்கப் பட்டது.
வீடுகளில் வைக்கப் பட்டுள்ள சிலைகளையும் பெண்கள் ஆற்றில் கொண்டு வந்து கரைத்தனர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக விநாயகர் சிலை கள் கரைக்கப்படுகிறது. இந்து மகா சபா சார்பில் வைக்கப்பட்டிருந்த விநா யகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்படுகிறது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் வைக்கப் பட்டிருந்த விநாயகர் சிலை கள் நான்கு சக்கர வாகனங்களில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டது. நாகராஜா கோவில் திடலில் இருந்து விநாயகர் ஊர்வலம் இன்று மதியம் தொடங்குகிறது. நாகராஜா திடலில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம் பீச் ரோடு வழியாக சொத்தவிளை செல்கிறது. சொத்தவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
இதேபோல் மணவாளக் குறிச்சியில் இருந்து சின்ன விளை கடலிலும் விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப் பட உள்ளது. விநாயகர் ஊர்வலத்தையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.
முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். விநாயகர் ஊர்வலம் நடைபெறும் நேரங்களில் நாகர்கோவிலில் பஸ் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை (24-ந்தேதி) கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடக்கிறது.
- https//naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
நாகர்கோவில் :
உலக திறன் போட்டிகள் 1950-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 77 நாடுகள் பங்குபெறும் 47-வது உலகத்திறன் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் அடுத்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த 748 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து முதற்கட்டமாக போட்டியாளர்களின் திறன்களை சோதித்தறியும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடக்கிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் நுழைவுச்சீட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் https//naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04652-264463, 94435 79558 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் தார்தளம் அமைக்கப்பட உள்ளது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியில் 16-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், 17-வது வார்டுக்குட்பட்ட ஹரீஸ் தெருவில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும், 21-வது வார்டுக்குட்பட்ட செரியன் தெரு, நடஷா தெரு, தடி டிப்போ 4-வது குறுக்கு தெரு பகுதிகளில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் தார்தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் கவுசிகி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, பகவதி பெருமாள், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
- ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று உடல் பிரேத பரிசோதனை
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூர் குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 50), கட்டிட தொழிலாளி.
இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு அனீஸ் (15) என்ற மகன் உள்ளார். இவர்கள் தற்பொழுது ராஜாவூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அனீஸ் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அனீசுக்கு நேற்று திடீரென வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அனீசுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் அனீசை அவரது தாயார் ராஜேஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்தார். அனீசை வீட்டில் விட்டுவிட்டு ராஜேஸ்வரி வெளியே சென்று இருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது அனீஸ் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அவரை உடனடியாக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அனீசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சி யடைந்த ராஜேஸ்வரி கதறி அழுதார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவி னர்கள் ஏராளமா னோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். பலியான அனீஸ் உடலை முதலில் சிகிச்சை அளித்த ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். தவறான சிகிச்சையால் மாணவன் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவி டப்பட்டது. இதை யடுத்து அனீசின் உடல்பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பலியான அனீஸ் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமா னோர் அங்கு திரண்டு உள்ளனர். பிரேத பரிசோதனையில் தான் அனீஸ் எப்படி இறந்தார் என்று தெரியவரும்.
- மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
- மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் :
டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்கரியை விஜய்வசந்த் எம்.பி. சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிக் காக தங்களின் நிலத்தை அரசுக்கு வழங்கிய மக்களுக்கு போதிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. குறிப்பாக திருப்பதி சாரம், குன்னத்தூர், பேரூர், கப்பியறை, ஆளூர், தோவா ளை, பெருங்குடி மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய ஊர்களுக்குட்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு வதில் அரசு பாரபட்சம் காட்டியுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013-ன்படி இழப்பீடு தொகையை மாவட்ட கலெக்டர் முன் 2018 பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தின் போது வழங்க ஒத்துக்கொண்டனர். பின்னர் நெடுஞ்சாலைத் துறை உரிய இழப்பீடு தொகை வழங்க மறுத்து விட்டது. இந்த கிராமங்களுக்கு பழைய சட்டத்தின் கீழ் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தெரிவித்தது.
2021-ம் ஆண்டுக்கு பின்னர் இழப்பீடு வழங்கு வதை தேசிய நெடுஞ்சாலைத்துறை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கையால் 251 நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்ட பின்னரும், இந்த தொகையை வழங்கு வதற்கு நெடுஞ்சாலைத்துறை மறுத்து வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தாங்கள் தயவு கூர்ந்து நெடுஞ்சாலை துறையை அறிவுறுத்தி, நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று தாமதம் இன்றி உரிய இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான்கு வழி சாலை திட்டப்பணியை விரைவாக முடிப்பதற்கு இது மிகவும் முக்கியம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 9 அடி உயரத்தில் 14 கல் தூண்கள் நிறுவப்பட உள்ளது.
- தை மாதத்தில் கலாஷாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மணவாளக்குறிச்சி :
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி இக்கோவிலின் கருவறை கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப் பட்டது. தொடர்ந்து ஜூன் 14-ந்தேதி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணி களை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து தேவசம் பள்ளி வளாகத்தில் மர தச்சு தொழிலாளர்கள் தீவிரமாக மரப்பணி செய்து வந்தனர். மேற்கூரை பணிக்கு உத்திரம், பட்டியல் கூட்டும் பணி நிறைவ டைந்துள்ளது.
இதையடுத்து மூலஸ்தான மேற்கூரைக்கு திருப்பணி கள் திருக்கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.
வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள மர அழிகள் மற்றும் கல்தூண்கள் நிறுவும் பணி நேற்று தொடங்கியது. 9 அடி உயரத்தில் 14 கல் தூண்கள் நிறுவப்பட உள்ளது. கல் தூண்கள் நிறுவும் பணியை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இந்த திருப்பணிகளை கோவிலின் மண்டல இணை ஆணையர் கவிதா, பிரியதர்ஷினி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் உதவி ஆணையர் தங்கம், இணை ஆணையர் ரெத்னவேல் பாண்டியன், ஸ்ரீகாரியம் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், தேவசம் முன்னாள் கண்காணிப்பா ளர் ஜீவானந்தம், அறங்கா வல் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதீஸ்குமார், துளசிதர நாயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதத்தில் கலாஷாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.
- மறை க்கல்வி மன்ற ஆண்டு விழா, மாபெரும் இன்னிசை விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
- ஆலயம் வண்ண விளக்குகளாலும், அழகு தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மேலராமன்புதூரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திரு விழா நேற்று மாலை திரு கொடியேற்றம் மற்றும் திருவிழா திருப்பலியுடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்.
விழாவில் பங்குத்தந்தை மரிய சூசை வின்சென்ட், ஊர் தலைவர் ஏ.ஆர்.கென்னடி, பொருளாளர் ஆல்பர்ட், செயலாளர் எட்வின் ஜோ, தணிக்கை யாளர் விபின் ராஜ் மற்றும் நிர்வாக குழுவினர், பங்கு சபை உறுப்பினர்கள், ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இன்று 2-ம் நாள் திரு விழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், தொடர்ந்து மறையுரை, பொதுக்கூட்டம், கலை நிக ழ்ச்சிகள் ஆகியவை நடக்கி றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள், இன்னிசை விருந்துகள், சிறப்பு பட்டிமன்றம், பொதுக்கூ ட்டம், இளைஞர் இயக்கம் நடத்தும் நடன போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. வருகிற 30-ந்தேதி 9-ம் நாள் நிகழ்ச்சியாக காலை 9.30 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலியும், தொடர்ந்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் மாபெரும் சமபந்தி விருந்தும் நடைபெறுகிறது.
வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி 10-ம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 3.30 மணிக்கு தேர் பவனி நிகழ்ச்சியும், தேர் திருப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சியும், தொடர்ந்து பங்கு நிர்வாக சிறப்பு பொதுக்கூட்டம், மறை க்கல்வி மன்ற ஆண்டு விழா, மாபெரும் இன்னிசை விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழாவையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளாலும், அழகு தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.






