search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றாறு -1 அணை பகுதியில் 33.6 மில்லி மீட்டர் மழை
    X

    சிற்றாறு -1 அணை பகுதியில் 33.6 மில்லி மீட்டர் மழை

    • அணைகளின் நீர்மட்டம் உயர்வு
    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. சிற்றாறு-1 அணை பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்ச மாக 33.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை களுக்கும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ½ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 1 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சி பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 20.89 அடியாக உள்ளது. அணைக்கு 1190 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. அணைக்கு 628 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.41 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.51 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 9.40 அடியாகவும் மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாக இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 15.10 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 23.2, பெருஞ்சாணி 7, சிற்றாறு1- 33.6, சிற்றாறு 2-26.2, பூதப்பாண்டி 1.4, களியல் 26.2, புத்தன்அணை 8.2, சுருளோடு 6.4, திற்பரப்பு 25.8.

    Next Story
    ×