என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலம்
- சொத்தவிளை, சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு
- இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் நாளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் காலை, மாலை 2 வேளைகளும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. சிவசேனா சார்பில் வைக் கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று தாமிர பரணி ஆற்றில் கரைக்கப் பட்டது.
வீடுகளில் வைக்கப் பட்டுள்ள சிலைகளையும் பெண்கள் ஆற்றில் கொண்டு வந்து கரைத்தனர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக விநாயகர் சிலை கள் கரைக்கப்படுகிறது. இந்து மகா சபா சார்பில் வைக்கப்பட்டிருந்த விநா யகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்படுகிறது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் வைக்கப் பட்டிருந்த விநாயகர் சிலை கள் நான்கு சக்கர வாகனங்களில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டது. நாகராஜா கோவில் திடலில் இருந்து விநாயகர் ஊர்வலம் இன்று மதியம் தொடங்குகிறது. நாகராஜா திடலில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம் பீச் ரோடு வழியாக சொத்தவிளை செல்கிறது. சொத்தவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
இதேபோல் மணவாளக் குறிச்சியில் இருந்து சின்ன விளை கடலிலும் விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப் பட உள்ளது. விநாயகர் ஊர்வலத்தையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.
முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். விநாயகர் ஊர்வலம் நடைபெறும் நேரங்களில் நாகர்கோவிலில் பஸ் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை (24-ந்தேதி) கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






