search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • மறை க்கல்வி மன்ற ஆண்டு விழா, மாபெரும் இன்னிசை விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
    • ஆலயம் வண்ண விளக்குகளாலும், அழகு தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மேலராமன்புதூரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திரு விழா நேற்று மாலை திரு கொடியேற்றம் மற்றும் திருவிழா திருப்பலியுடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்.

    விழாவில் பங்குத்தந்தை மரிய சூசை வின்சென்ட், ஊர் தலைவர் ஏ.ஆர்.கென்னடி, பொருளாளர் ஆல்பர்ட், செயலாளர் எட்வின் ஜோ, தணிக்கை யாளர் விபின் ராஜ் மற்றும் நிர்வாக குழுவினர், பங்கு சபை உறுப்பினர்கள், ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இன்று 2-ம் நாள் திரு விழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், தொடர்ந்து மறையுரை, பொதுக்கூட்டம், கலை நிக ழ்ச்சிகள் ஆகியவை நடக்கி றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள், இன்னிசை விருந்துகள், சிறப்பு பட்டிமன்றம், பொதுக்கூ ட்டம், இளைஞர் இயக்கம் நடத்தும் நடன போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. வருகிற 30-ந்தேதி 9-ம் நாள் நிகழ்ச்சியாக காலை 9.30 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலியும், தொடர்ந்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் மாபெரும் சமபந்தி விருந்தும் நடைபெறுகிறது.

    வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி 10-ம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 3.30 மணிக்கு தேர் பவனி நிகழ்ச்சியும், தேர் திருப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சியும், தொடர்ந்து பங்கு நிர்வாக சிறப்பு பொதுக்கூட்டம், மறை க்கல்வி மன்ற ஆண்டு விழா, மாபெரும் இன்னிசை விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழாவையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளாலும், அழகு தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×