என் மலர்
கன்னியாகுமரி
- ஒரு சில தொழிலாளர்கள் கடை பின்பு தூங்கிக் கொண்டிருந்தனர்.
- காலை நேரத்தில் விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஒழுங்கினசேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை முன்பு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு படுத்து தூங்கினார்கள். இன்று காலையில் கண்விழித்து ஒரு சில தொழிலாளர்கள் டீ குடிக்க சென்றனர். ஒரு சில தொழிலாளர்கள் கடை பின்பு தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து அப்டா மார்க்கெட் நோக்கி வந்த டெம்போ ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது கடையின் முன்பு படுத்திருந்த தொழிலாளர்கள் அலறி அடித்தபடி ஓடினார்கள். இதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.
படுகாயம் அடைந்த அவரைமீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் படுகா யம் அடைந்தவர் மதுரை சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கிய டெம்போ நாகர்கோவில் பகுதியில் உள்ள பன்றிபண்ணைக்கு கேரளாவில் இருந்து தீவனத்தை கொண்டு வந்த போது பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது தெரிய வந்துள்ளது.
காலை நேரத்தில் விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதிகாலை நேரத்தில் நடந்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். விபத்தில் சிக்கிய டெம்போவை போக்குவரத்து போலீசார் கடைக்குள் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
- காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
நாகர்கோவில், செப்.24-
செம்பொன்விளை, சேரமங்கலம் மற்றும் முட்டம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சாஸ்தான்கரை, சேனம்விளை, சைமன்காலனி, கீழ்க்கரை, குளச்சல், மிடாலக்காடு, பிடாகை, கோடிமுனை, ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, பத்துறை, குப்பியன்துறை, பாலப்பள்ளம், திங்கள்சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, பேயன்குழி, நெய்யூர், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அடிகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, லட்சுமிபுரம், நடுவூர்கரை, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூர், மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில், கடியப்பட்டிணம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினார் குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தக்கலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- வயிற்றில் மண்ணீரலையொட்டி இருந்த 26x20x16 செ.மீ. என்ற அளவிலான கட்டியை அகற்றினர்.
- 15 வயது பெண்ணுக்கு அகற்றப்பட்டுள்ள கட்டி உலக அளவில் இதுவரை அகற்றப்பட்ட நீர்கட்டிகளிலேயே மிகப்பெரியதாகும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது பெண் ஒருவர் வயிறு வீக்கம் மற்றும் வலியால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தார். இவர் நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை டாக்டர்கள் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்தபோது மண்ணீரலில் பெரிய அளவிலான கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கல்லீரல் மற்றும் குடல் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் கரிகால் சக்ரவர்த்தி தலைமையிலான குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவரது வயிற்றில் மண்ணீரலையொட்டி இருந்த 26x20x16 செ.மீ. என்ற அளவிலான கட்டியை அகற்றினர். இதன் எடை 5 கிலோவாகும்.
இது உலகிலேயே இதுவரை வயது குறைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த அகற்றப்பட்ட நீர் கட்டிகளில் மிகப்பெரிய கட்டியாகும். இதன்மூலம் நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷா லிட்டி ஆஸ்பத்திரி டாக்டர் கள் சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து டாக்டர் கரிகால் சக்ரவர்த்தி கூறியதாவது:– மண்ணீரலில் இருக்கும் 15 செ.மீ. அளவு அல்லது அதற்கு மேலான அளவுள்ள நீர்கட்டி ராட்சத கட்டி என்று அழைக்கப்படும். இதுவரை மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில் உள்ள பதிவுகளின்படி கடந்த 2014ல் பாகிஸ்தானை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு 27x20 செ.மீ. அளவிலான கட்டி அகற்றப்பட்டிருக்கிறது. அதுபோல் 2021ல் ஆஸ்திரே லியாவை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு 26x26x28 செ.மீ. என்ற அளவிலான கட்டி அகற்றப்பட்டிருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷா லிட்டி ஆஸ்பத்திரியில் 15 வயது பெண்ணுக்கு அகற்றப்பட்டுள்ள கட்டி உலக அளவில் இதுவரை அகற்றப்பட்ட நீர்கட்டிகளிலேயே மிகப்பெரியதாகும்.
மண்ணீரலில் திட மற்றும் திரவ கட்டி என இருவகை கட்டிகள் உருவாகும். நீர் கட்டிகள் 5 செ.மீ. அளவுக்கு பெரியதாக இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். கட்டியை மட்டும் அல்லது பாதி மண்ணீரலை நீக்கலாம். அல்லது கட்டியின் அளவை பொறுத்து முழு மண்ணீரலையும் நீக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
மண்ணீரலை நீக்குவதால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மண்ணீரலை நீக்குவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
- 88-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
- காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நாகர்கோவில் :
பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர் சிவபிரபு, டைசன், சீனிவாசன் ஆதிலிங்கபெருமாள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வக்கீல் அகஸ்தீசன், சரவணன் பீனிக்ஸ் கண்ணன், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள். இதில் மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர் தேவ், கவுன்சிலர்கள் சுனில்குமார், ரோசிட்டா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், சந்திரசேகரன், ஆர்.எம்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், சேகர், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, ஜெயகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் தங்கவேல், மாநகர தலைவர் பிரேம், செயலாளர் அனீஸ், துணைத் தலைவர் யூஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் தியாக ராஜன், பிரதீஸ், மார்த்தாண்டன், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
- நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து கொண்டார்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அடைக்காக்குழி பாத்திமாநகர் பகுதியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் ஊர்வல நிகழ்ச்சி புல்லூர் பகவதி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கியது. நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துக்கு இந்து மகா சபா நிர்வாகிகளும், காங்கிரஸ் நிர்வாகிகளும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு ஊர்வலம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார தலைவர் விஜயகுமார், குளப்புறம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில், மெதுகும்மல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், நடைக்காவு பஞ்சாயத்து தலைவர் கிறிஸ்டல்ஜாண், நடைக்காவு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெக்கின்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், முன்னாள் வட்டார தலைவர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
- தொடக்க பூஜைக்குப்பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டது.
மணவாளக்குறிச்சி :
மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டடிருந்த விநாயகர் சிலைகள் சின்னவிளை கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. மணவாளக்குறிச்சி ஜங்சன், புதுக்கடை தெரு, பம்மத்து மூலை, வடக்கன்பாகம், பிடாகை, சேரமங்கலம், பெரியகுளம் ஜங்ஷன் ஆகிய 7 இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8 சிலைகளும் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் வந்து, அங்கு நடந்த தொடக்க பூஜைக்குப்பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டது.
இந்து முன்னணி மாவட்ட ஆலோசகர் மிசா சோமன் துவக்க உரையாற்றினார். மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோவிலுக்கும் ஊர்வலம் சென்று மாலை ஜங்ஷன் வந்தடைந்தது. பின்னர் சின்னவிளை கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.
விஜர்சன விழாவிற்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க மாவட்ட உதவி துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கல்குளம் தாசில்தார் கண்ணன், சிறப்பு தாசில்தார் ரமேஷ், குளச்சல் ஆர்.ஐ. முத்து பாண்டி, மணவாளக்குறிச்சி வில்லேஜ் ஆபீசர் பாலமுருகன், மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்கு செயல் அலுவலர் ஏசுபாலன் ஆகியோர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தனர்.
- சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
- பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள்உள்பட பலர் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட் கள் உள்ளன. அந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி தற்போது முழுமையான கைராட்டை கண்காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் குடிசைத்தொழிலாக வருமானம் ஈட்டவும், வீட்டில் தங்களது துணி களை நெய்து கொள்ளவும் ஒரு கருவியாகத் திகழ்ந்தது இந்த கைராட்டை ஆகும்.
நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சி யின் நோக்கமாகும் என்று மாவட்ட அரசு அருங்காட்சி யக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்தார். இந்தக்கண்காட்சியை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள்உள்பட பலர் பார்வையிட்டனர்.
- “நீயா நானா” கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்
- மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந் துள்ள ரோகிணி பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ மாணவி களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பேராசிரியை தங்கம் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனியார் டிவி புகழ் "நீயா நானா" கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்.அப்போது அவர் நேரத்தின் முக்கியத்து வம் பற்றியும், மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது பற்றியும், தன் துறையில் தனித்துவம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்து, மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைமுதலாம் ஆண்டு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர், பேராசிரியை செய்து இருந்தனர். முடிவில் பேராசிரியை ஜார்ஜ் மேரி ஆர்த்தி நன்றி கூறினார்.
- சமபந்தி விருந்தை தாமரைபாரதி தொடங்கி வைத்தார்
- பஜனை மற்றும் திருவிளக்கு பூஜைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தென்தாமரைகுளம் :
அகஸ்தீஸ்வரம் அருகே வெள்ளையந்தோப்பு வெள்ளை விநாயகர் இந்து இளைஞர் இயக்கம் சார்பில் நடைபெற்ற
20-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் விஜர்சன விழா கடந்த 18ஆம் தேதி 7 நாட்கள் நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு விநாயகருக்கு பூஜையும், 8மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு பஜனை மற்றும் திருவிளக்கு பூஜைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விஜர்சன விழாவை யொட்டி வெள்ளையந் தோப்பு ஸ்ரீமன் நாராயண சாமி கோவில் வளாகத்தில் நடைபெற்ற சமபந்தி விருந் தினை தி.மு.க. வர்த்தகர் அணி இணைச் செயலாள ரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் பேராசிரியர் ரத்தின சிகாமணி தலைமை தாங்கினார். செயலாளர் சுயம்புலிங்கம், பொருளாளர் முருகேசன், பேரூராட்சி கவுன்சிலர் ராகவன் ஆகி யோர் முன்னிலை வைகித்த னர். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், வர்த்தகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர்.டி.ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் துணை ஒருங்கி ணைப்பாளர் சுதன்மணி, மணிராஜா, தங்கராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை வெள்ளையந்தோப்பு வெள்ளை விநாயகர் இந்து இளைஞர் இயக்க நிர்வாகி கள் செய்திருந்தனர்.
- 25 நாட்களுக்கு பிறகு வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி தொடங்கியது
- காலையிலும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படு கிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநிலசுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப் பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில்சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.
காலை8மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரை யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாது காப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 25 நாட்களுக்கு பிறகு வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு போக்குவரத்து நேற்று நடந்தது. நேற்று ஒரே நாளில் 50 உள்ள பயணிகள் மட்டுமே படையில் வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செய்தனர். இன்று காலையிலும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது.
- பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்
- ஜான்ரோஸ் இறந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது.
அருமனை :
குலசேகரம் கோட்டூர் கோணத்தை சேர்ந்தவர் ஜான்றோஸ் (வயது 65). இவர், குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த தோட்டம் திருவனந்த புரத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்த மானதாகும். ஜான்ரோஸ் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு சென்று வருவார்.
இந்நிலையில் அவரது மகன் கில்பர்ட்டின் நிச்சய தார்த்தம் இன்று நடைபெற இருந்தது. இதற்காக ஜான்ரோஸ் நேற்று வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார்.
ஆனால் அவர் வர வில்லை. இதனை தொடர்ந்து மனைவி ராணி, மகனுடன் இன்று காலை அருமனை குஞ்சாலு விளையில் தனது கணவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவுகள் திறக்காமல் இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் ஜான் ரோஸ் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அருமனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுனில் குமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தோட்டத்தின் உரிமையாளர் பிரசாந்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஜான்ரோஸ் இறந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜான் ரோசின் மரண செய்தி கேட்டு கோட்டூர் கோணம் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
- பொதுமக்கள் பார்த்து பயன் பெற்றனர்
- பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
நாகர்கோவில் :
தக்கலை பஸ் நிலைய த்தில் அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப் படக் கண்காட்சி நடை பெற்றது.
ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அரசு அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருவது, முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்கள், குமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க பட்டதை நேரில் பார்வை யிட்டது.
முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப் படங்கள் மற்றும் மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின் போது காலமானவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த இந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன் பெற்றார்கள்.






