என் மலர்
கன்னியாகுமரி
- மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் இணைப்பதிவாளரிடம் மனு
- விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ்பொருட்கள் வாங்குவதை வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.
நாகர்கோவில் :
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இன்று நிர்வாகிகள் இணைப்பதிவாளர் சிவகாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறது. இதனால் சங்கங்கள் மேலும் நட்டத்திற்கு உள்ளாகி நிதிநிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ்பொருட்கள் வாங்குவதை வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேறாவிடில் வரும் அக்டோபர் 3-ந் தேதி வாங்கியுள்ள உபகரணங்களை ஒப்படைத்துவிட்டு அனைத்து பணியாளர்களும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட்ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார் மற்றும் இணை செயலாளர்கள் ரமணி, வசந்தபிரபா ஆகியோர் உடனிருந்தனர்.
- பொதுமக்கள் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கூட கட்டிடம் சீர் செய்தல், கயர் சொசைட்டி கட்டிடம் புனரமைப்பு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
- மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யப்படும் விஜய்வசந்த் எம்.பி. உறுதி அளித்தார்.
நாகர்கோவில்:
கொல்லங்கோடு நகரத்திற்கு உட்பட்ட கலிங்கராஜபுரத்திற்கு சென்ற விஜய்வசந்த் எம்.பி. அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்பகுதி பொதுமக்கள் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கூட கட்டிடம் சீர் செய்தல், கயர் சொசைட்டி கட்டிடம் புனரமைப்பு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
இதையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யப்படும் விஜய்வசந்த் எம்.பி. உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின்போது கொல்லங்கோடு நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரமேஷ் குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர், வார்டு உறுப்பினர் சுசீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு
இரணியல் :
குளச்சல் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட குருந்தன்கோடு ஒன்றியத்தில் நெட்டாங்கோடு பஞ்சாயத்தில் கண்டன்விளை மல்லங்கோடு நெட்டாங்கோடு வழியாக பேயன்குழி சானல் கரையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அக்கிராமணம் குளத்தின் கரை மற்றும் கிணற்றின் பக்கவாட்டு சுவர் பல வருடங்களாக இடிந்து கிடக்கிறது. இந்த குடிநீர் கிணறு நீரை இப்பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் மொட்டவிளை, பேயன்குழி சுற்று வட்டார பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
பக்கச்சுவர்களை கட்டித்தர வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் குளத்தின் கரை மற்றும் கிணற்று பக்கச்சுவரை விரைந்து கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் அனுஷ்யா மதுக்குமார் கூறுகையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அக்கிராமணம் குளத்தின் கரை சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குளத்தின் கரை மற்றும் கிணற்றின் பக்கச்சுவரை விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.
- காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது
கருங்கல் :
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக குழித்துறை கோட்ட செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இட விளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செங்கோணம், முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளி யாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப் பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலனி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் அகற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பெரி யார் நகரை சேர்ந்தவர் மரியதாசன் (வயது 62), மீனவர். இவர் அஞ்சு கூட்டுவிளையை சேர்ந்த பீட்டர் (50) என்பவருடன் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கி ளில் வெளியில் சென்றார்.
கன்னியாகுமரி 4 வழிச்சாலை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவித மாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மரியதாசன், பீட்டர் படுகாயம் அடைந்த னர். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தி னர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மரிய தாசன் இறந்து விட்டது தெரியவந்தது. தொடர்ந்து பீட்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். மரியதாசனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது
- அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறிக்கை
- நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகம் (இருப்பு நாகராஜா கோவிலில்) வைத்து நடைபெறும்.
நாகர்கோவில் :
இந்து சமய அறநிலை யத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தாவது:-
நான் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பின் அறநிலையத்துறைக்கு சொந்தமான 490 கோவில்களை ஆய்வு செய்து நிறை, குறைகளை அறிந்து அமைச்சர் சேகர்பாபுவிடம் அறிக்கை சமர்பித்தேன். இதன் அடிப்படையில் கோவில்க ளுக்கு திருப்பணி கள் செய்திடவும், கும்பாபி ஷேகம் நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை துரிதப்படுத்தவும், மேலும் விளக்கமான குறைகள் கேட்டறியவும், ஆக்கிரமிப்பு ஆவணங்கள் பெற்றிடவும் பொதுமக்களிடம் மனுக்கள் பெற உள்ளோம்.
முதற்கட்டமாக நாளை (26-ந் தேதி) நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி, சுசீந்திரம், நாகர்கோவில், கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், தாம ரைக்குளம், மருங்கூர், பாணத்திட்டை, தளியல், கிருஷ்ணன் கோவில், பெருவிளை, பறக்கை, தெங்கம்புதூர், பேரம்பலம், ஏழகரம், வடிவீஸ்வரம், புரவசேரி, கோதிச்ச பிள்ளையகரம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் சம்மந்தமாக மனுக்கள் கொடுக்க, நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகம் (இருப்பு நாகராஜா கோவிலில்) வைத்து நடைபெறும்.
இதுபோல் நாளை மறுநாள் (27-ந்தேதி) பத்மநாபபுரம் தேவஸ்தனம் தொகுதிக்குட்பட்ட மண்டைக்காடு, வேளிமலை, வெள்ளிமலை, திருநந்திக்க ரை, பொன்மனை, மணலி கரை, பன்னிப்பாகம், மேலாங்கோடு, நீலகண்ட சுவாமி கோவில், திருவி டைக்கோடு, திருவி தாங்கோடு, சே ரமங்கலம், கரகண்டேஸ்வ ரம், ராதாகிருஷ்ணசன் கோவில், திருபன்னியோடு, வாள் வச்சகோஷ்டம் ஆகிய பகுதிகளுக்கு பத்மநாபபுரம் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடை பெறும். இரு நாட்களும் மனு பெறும் நேரம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த வாய்பினை பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுள்ளப்படு கிறது.
இந்த முகாமில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
- குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் நடந்தது
திருவட்டார் :
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செம்பருத்திவிளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பலீலா ஆல்பன், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பேசில்துரை, மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், துணை தலைவர் டாக்டர் அஜித் ஜித், துணை அமைப்பாளர் டாக்டர் மார்பல்சிங், தொகுதி துணை அமைப்பாளர்கள் டாக்டர் பெலக்கில்ராஜ், சேம்ராஜ், கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிரேமகுமாரி, தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் மகிழ்ச்சி
- தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் சேதமாகின
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கனிம வளச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் படி சிறு குன்றுகளில் கூட கற்களை உடைக்க முடி யாது. தரைமட்டத்தில் காணப்படும் பாறைகளில் மட்டுமே விதிகளின்படி கற்களை எடுக்கலாம். ஆனால் மாவட்டத்தில் முறைகேடாக எடுக்கப்படும் கல், ஜல்லி, பாறைப்பொ டிகள் கேரளாவுக்கு தொடர்ந்து கனரக லாரி களில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக தினமும் 500-க்கும் மேற் பட்ட லாரிகளில் கல், ஜல்லி கொண்டு செல்லப்பட்டது. இதுதவிர காக்காவிளை, நெட்டா போன்ற அனைத்து வழிகளிலும் கல் பாரம் ஏற்றிய நூற்றுக்கணக்கான லாரிகள் கேரளாவுக்கு சென்றன. லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலை கள் உட்பட அனைத்து சாலைகளும் சேதமாகின. இதனை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.
அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாக னங்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டார்.
விதிமுறையை மீறி கனிம வளங்கள் கொண்டு செல் லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.3 கோடி அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் போக்கு வரத்து நெரிசல், விபத்துக் கள் அதிகரித்தலை தொடர்ந்து, 10 டயர் கொண்ட லாரிகளுக்கு மேல் உள்ள லாரிகள் கன்னியாகுமரி மாவட் டத்திற்குள் வர அரசு தடை விதித்தது. அரசின் இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்ததோடு, சாலை விபத்துக்களும் குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர்களும், அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
- தப்பியோடிய ஆந்திர பெண்ணை சக பயணிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- பயணிகளிடம் பணம் மற்றும் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
தக்கலை :
குமரி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரத்தில் அரசு பஸ்சுகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவி கள், வேலைக்கு செல்ப வர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் பஸ்களில் கூட்டம் அதிகளவில் இருக்கிறது.
பஸ்களில் நிலவும் இந்த கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி பஸ்சில் பயணிப்பவ ரிடம் திருடர்கள் கைவரிசை காட்டும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது போன்று கைவரிசை காட்டக்கூடிய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த போதிலும் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் பணம் மற்றும் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் போலீ சார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தக்கலை அருகே இன்று ஆசிரியை ஒருவரிடம் ஓடும் பஸ்சில் நகை பறிக்க முயன்ற பெண்ணை சக பயணிகள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர். வேர்கிளம்பி அருகே உள்ள பூவன்கோடு பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். அவர் தினமும் பணிக்கு தனது ஊரில் இருந்து அரசு பஸ்சில் சென்று வருவார். அதே போல் இன்றும் அவர் வழக்கம் போல் அரசு பஸ்சில் சென்றார்.
குலசேகரத்தில் இருந்து குளச்சல் சென்ற அரசு பஸ்சில் அவர் பயணித்தார். காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் ஆசிரியை பஸ்சில் நின்றபடி பயணம் செய்தார். அப்போது அவரது அருகில் 3 பெண்கள் உரசியபடி நின்றிருக்கின்றனர்.
அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை நைசாக கழற்ற முயன்றனர். இதனால் உஷாரான ஆசிரியை கூச்சலிட்டார். அந்த நேரத்தில் ஆசிரியை பயணித்த பஸ் அழகிய மண்டபம் ஜங்ஷன் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது.
பஸ்சை டிரைவர் நிறுத்தியதும், ஆசிரியை யிடம் நகை பறிக்க முயன்ற 3 பெண்களும் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 2 பெண்கள் வேறு பஸ்சில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். தன்னிடம் நகை பறிக்க முயன்றது குறித்து சக பயணிகளிடம் ஆசிரியை தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் நகை பறிக்க முயன்ற வர்களில் ஒரு பெண்ணை துரத்தி சென்று பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் பேச்சி முத்து பாண்டியன் மற்றும் போலீசார் வந்தனர்.
அவர்களிடம் பிடிப்பட்ட பெண் ஒப்படைக்கப்பட் டார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது தன்னை பற்றிய தகவலை சரியாக கூறாமல் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் பெண் போலீசார் மூலம் அந்த பெண் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. அந்த பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, இதே போல் பஸ் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை திருடும் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அதன் அடிப்படையில் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பெண்ணுடன் வந்த மற்ற பெண்கள் குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் ஆசிரியை யிடம் நகை பறிக்க முயன்ற பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அழகிய மண்ட பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சுற்றுலா பயணிகள் வருகை “திடீர்”என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.
காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 25 நாட்களுக்கு பிறகு வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு போக்குவரத்து நேற்று நடந்தது. நேற்று ஒரே நாளில் 50 உள்ள பயணிகள் மட்டுமே படையில் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செய்தனர். இன்று காலையிலும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது.
- 2 மாணவிகள் டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
- வடமாநில வாலிபர்கள் மாணவிகளை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் கீழப் பெருவிளை பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது 2 வடமாநில வாலிபர்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் வேகமாக சென்றனர். உடனே வடமாநில வாலிபர்கள் மாணவிகளை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் வெளியே சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது நாய் தங்களை துரத்தியதால் ஓடியதாகவும் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மாணவிகளை பின்தொடர்ந்து சென்றார்களா? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- சாலையில் நடந்து சென்ற சிறுமியின் கை வாகனத்தின் கண்ணாடியில்பட்டது.
- திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திருவட்டார் :
திருவட்டார் அருகே உள்ள வடக்கன்நாடு பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 28), லாரி டிரைவர்.
நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து பூவன் கோடு நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாலையில் நடந்து சென்ற சிறுமியின் கை வாகனத்தின் கண்ணாடியில் பட்டது.
இதனால் நவீன், தனது வாகனத்தை திருப்பிய போது எதிரே வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் நவீன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் உறவினர்களும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நவீன் பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் டிரை வரை போலீசார் தேடி வருகிறார்கள். திரும ணமான 8 மாதத்தில் புது மாப்பிளை விபத்தில் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






