search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற பெண்கள்
    X

    தக்கலை அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற பெண்கள்

    • தப்பியோடிய ஆந்திர பெண்ணை சக பயணிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
    • பயணிகளிடம் பணம் மற்றும் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    தக்கலை :

    குமரி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரத்தில் அரசு பஸ்சுகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவி கள், வேலைக்கு செல்ப வர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் பஸ்களில் கூட்டம் அதிகளவில் இருக்கிறது.

    பஸ்களில் நிலவும் இந்த கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி பஸ்சில் பயணிப்பவ ரிடம் திருடர்கள் கைவரிசை காட்டும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது போன்று கைவரிசை காட்டக்கூடிய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த போதிலும் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் பணம் மற்றும் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் போலீ சார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தக்கலை அருகே இன்று ஆசிரியை ஒருவரிடம் ஓடும் பஸ்சில் நகை பறிக்க முயன்ற பெண்ணை சக பயணிகள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர். வேர்கிளம்பி அருகே உள்ள பூவன்கோடு பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். அவர் தினமும் பணிக்கு தனது ஊரில் இருந்து அரசு பஸ்சில் சென்று வருவார். அதே போல் இன்றும் அவர் வழக்கம் போல் அரசு பஸ்சில் சென்றார்.

    குலசேகரத்தில் இருந்து குளச்சல் சென்ற அரசு பஸ்சில் அவர் பயணித்தார். காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் ஆசிரியை பஸ்சில் நின்றபடி பயணம் செய்தார். அப்போது அவரது அருகில் 3 பெண்கள் உரசியபடி நின்றிருக்கின்றனர்.

    அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை நைசாக கழற்ற முயன்றனர். இதனால் உஷாரான ஆசிரியை கூச்சலிட்டார். அந்த நேரத்தில் ஆசிரியை பயணித்த பஸ் அழகிய மண்டபம் ஜங்ஷன் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது.

    பஸ்சை டிரைவர் நிறுத்தியதும், ஆசிரியை யிடம் நகை பறிக்க முயன்ற 3 பெண்களும் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 2 பெண்கள் வேறு பஸ்சில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். தன்னிடம் நகை பறிக்க முயன்றது குறித்து சக பயணிகளிடம் ஆசிரியை தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் நகை பறிக்க முயன்ற வர்களில் ஒரு பெண்ணை துரத்தி சென்று பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் பேச்சி முத்து பாண்டியன் மற்றும் போலீசார் வந்தனர்.

    அவர்களிடம் பிடிப்பட்ட பெண் ஒப்படைக்கப்பட் டார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது தன்னை பற்றிய தகவலை சரியாக கூறாமல் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் பெண் போலீசார் மூலம் அந்த பெண் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. அந்த பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, இதே போல் பஸ் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை திருடும் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அதன் அடிப்படையில் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பெண்ணுடன் வந்த மற்ற பெண்கள் குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் ஆசிரியை யிடம் நகை பறிக்க முயன்ற பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அழகிய மண்ட பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×