search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலிங்கராஜபுரத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் விஜய்வசந்த் எம்.பி.

    • பொதுமக்கள் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கூட கட்டிடம் சீர் செய்தல், கயர்‌ சொசைட்டி கட்டிடம் புனரமைப்பு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
    • மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யப்படும் விஜய்வசந்த் எம்.பி. உறுதி அளித்தார்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு நகரத்திற்கு உட்பட்ட கலிங்கராஜபுரத்திற்கு சென்ற விஜய்வசந்த் எம்.பி. அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்பகுதி பொதுமக்கள் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கூட கட்டிடம் சீர் செய்தல், கயர் சொசைட்டி கட்டிடம் புனரமைப்பு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

    இதையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யப்படும் விஜய்வசந்த் எம்.பி. உறுதி அளித்தார்.

    இந்த சந்திப்பின்போது கொல்லங்கோடு நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரமேஷ் குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர், வார்டு உறுப்பினர் சுசீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×