செம்பருத்திவிளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள்

அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் நடந்தது
செம்பருத்திவிளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள்
Published on

திருவட்டார் :

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செம்பருத்திவிளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பலீலா ஆல்பன், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பேசில்துரை, மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், துணை தலைவர் டாக்டர் அஜித் ஜித், துணை அமைப்பாளர் டாக்டர் மார்பல்சிங், தொகுதி துணை அமைப்பாளர்கள் டாக்டர் பெலக்கில்ராஜ், சேம்ராஜ், கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிரேமகுமாரி, தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com