தக்கலையில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

பொதுமக்கள் பார்த்து பயன் பெற்றனர்பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
தக்கலையில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Published on

நாகர்கோவில் :

தக்கலை பஸ் நிலைய த்தில் அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப் படக் கண்காட்சி நடை பெற்றது.

ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அரசு அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருவது, முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்கள், குமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க பட்டதை நேரில் பார்வை யிட்டது.

முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப் படங்கள் மற்றும் மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின் போது காலமானவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த இந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com