என் மலர்
கன்னியாகுமரி
- வள்ளலார் திருஉருவப்படம் திறந்து வைத்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்
- தலைமையாசிரியர் நாகம்மாள் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டி வள்ளலார் விருது வழங்கப்பட்டது
நாகர்கோவில் :
நாகர்கோவில், வடசேரி, ரவிவர்மன் புதுத்தெருவில் அமைந்துள்ள வள்ளலார் பேரவையில் திருவருட்பிரகாச வள்ளலார் (வருவிக்கவுற்ற திருநாள்) 201-வது அவதார தின விழா நடைபெற்றது. மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை பொதுச்செயலாளர் டாக்டர் மகேஷ் வரவேற்றார்.
திருஅகவல், திருவடிப்புகழ்ச்சி பாராயணம் அங்ரி சுஜித், எம்.பி. ஆதிரா நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வள்ளலார் திருஉருவப்படம் திறந்து வைத்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் அருட்பெருஞ்ஜோதி மகா தீபம் ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரதானத்தை நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் ஆகியோர் வழங்கினர்.
10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வளர்மதி கேசவன், தேவசம் பொறியாளர் ராஜகுமார், சுகாதார ஆய்வாளர் ராஜா, ஆர். ஏ. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பாரத்சிங், ரீத்தாபுரம் ஜான் போஸ்கோ, முன்னாள் மாநில கைத்தறி குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஊர்வகை தலைவர் சுப்பிரமணியன், எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானத்தை ஹெச்.சி.எல். திட்ட மேலாளர் சிவா, பிரிமியர் ரேடியோ உரிமையாளர் சுஜித், பாவநாசம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நாகம்மாள் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டி வள்ளலார் விருது வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் குடும்ப நல ஆலோசனை மையம் ஆலோசகர் தினேஷ் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
- ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு குழிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
- கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தக்கலை:
தக்கலை அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக மது அருந்தும்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரெஜின் நண்பர் அனீசை தாக்கியதாக தெரிகிறது.
படுகாயம் அடைந்த அனீஸ் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனீஸ் கொடுத்த புகாரின் பேரில் ரெஜின் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு குழிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள. கத்தியால் குத்தியதுடன் அந்த பகுதியில் கிடந்த கம்பியாலும், கற்களாலும் தாக்கியதில் ரெஜின் படுகாயம் அடைந்தார்.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. படுகாயம் அடைந்த ரெஜினை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரெஜின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜேஷ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ரெஜினை தாக்கியது கோழிப்போர்விளை பழ விளையை சேர்ந்த வினித் (24) கூட்டமாவு பகுதியை சேர்ந்த பரத் லியோன் (24), குழிக்கோட்டை சேர்ந்த அருண் (23), ஜெபின் (24), ஜிஜிஸ் (24) மற்றும் கோழிப்போர்விளையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட வினித், பரத் லியோன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- மழை சேதங்களையும் பார்வையிட்டார்
- சேதம் அடைந்த சாலையை சீரமைக்கவும் அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையத்தில் உள்ள டெப்போ ஊழியர்களுக்கான கழிவறை மோசமான நிலையில் இருந்தது. இதை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கழிவறையை டெப்போ ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் என்றும் மேயர் மகேஷ் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பஸ் நிலையத்தில் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் மற்றும் தரைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறையை பார்வையிட்டார். மழையின் காரணமாக செட்டிகுளம், சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மேயர் மகேஷ், அதை உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை கிருஸ்டோபர் காலனி பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த மரம் ஒன்று மழையினால் முறிந்து வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது சாய்ந்திருந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் மேயர் மகேஷ் அங்கு சென்று பார்வையிட்டார். உடனே மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ராஜலட்சுமி நகர் பகுதியில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்கவும் அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- நாகர் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
- மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு சென்று செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
நாகர்கோவில், அக்.3-
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. கன மழை பெய்வதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
எனவே வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் 8 தீயணைப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதே போல நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்திலும் மீட்பு கருவிகளை தயார் செய்யும் பணி இன்று தீவிரமாக நடந்தது.
இங்குள்ள ரப்பர் படகுகள், கயிறுகள், மோட்டார் என்ஜின்கள், மோட்டார் ரம்பம், ஆக்சிஜன் சிலிண்டர்கள், காலி தண்ணீர் பாட்டில்களால் தயார் செய்யப்பட்ட படகு மற்றும் மிதவை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதற்காக அனைத்து கருவிகளும் தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அதோடு நவீன கருவிகளையும் ஆய்வு செய்தனர். இந்த பணிகளை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், உதவி அலுவலர் துரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு சென்று செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதோடு வெள்ளம் அதிகமாக செல்லும் காட்டு பகுதிகளுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்ல கூடாது என்று தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- 5-ந் தேதி தொடங்குகிறது
- குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெண்குழந்தைகளை காப்போம். பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாலின பாகுபாடு அடிப்படையில் பாலினம் அறிந்து கொள்வதை தடுப்பதற்காகவும் பெண்களின் வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது மற்றும் குறைந்து வரும் பெண் குழந்தை பாலின விகித பிம்பத்தின் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அவர்களின் கல்வியினை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் 2022-2023-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அனைத்து துறைகள் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 120 பெண் ராணுவ வீராங்கனைகள் இருசக்கர வாகன பேரணி நடத்துகின்றனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்தும் இந்த பேரணியை வருகிற 5-ந் தேதி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தின் முன்பு மத்திய இணை மந்திரி தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் பங்கேற்கின்றனர்.
இந்த பேரணி 31-ந் தேதி குஜராத் மாநிலத்தில் முடிவடைகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தேசிய மாணவர் படை, வளரிளம் பெண்கள் பேரணியில் கலந்து கொண்டு கலந்துரையாடுகின்றனர். கன்னியாகுமரியில் தொடங்கி களியக்காவிளை வழியாக செல்லும் இந்தப்பேரணியில் பொதுமக்களும் கலந்து கொண்டு பெண்குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ற்றூர் சந்திப்பில் இருந்து வேர்கிளம்பி சந்திப்பு வரை இந்தியா ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
- முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவட்டார் :
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி யில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப யணம் கடந்த ஆண்டு மேற்கொண்டார். நடைப யணம் மேற்கொண்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை யொட்டி திருவட்டார் கிழக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆற்றூர் சந்திப்பில் இருந்து வேர்கிளம்பி சந்திப்பு வரை இந்தியா ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், ஆற்றூர் நகர தலைவர் ஜான்வெர்ஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார், காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், மாவட்ட பொதுச்செயலா ளர் ஜான் இக்னேசியஸ், மாவட்ட செயலாளர்கள் பெனட், ஆற்றூர் குமார், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்
- காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் காந்தி திருவுருவ சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்தி, காமராஜர் படங்களுக்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது
- வங்கிகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
நாகர்கோவில், அக்.3-
குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களும் விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாக னங்கள் வாங்குமாறு நிர்பந் திக்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதன் காரணமாக ஒரு சில கூட்டுறவு வங்கிகள் பணியாளர்கள் இன்றி மூடப்பட்டது.
அதே சமயம் பல வங்கிகளில் ஒரு சில பணியாளர்களுடன் இயங்கியது. பணியாளர்கள் போராட்டம் காரணமாக பணிகள் முடங்கின. கடந்த 2 நாட்கள் விடுமுறைகளுக்கு பிறகு கூட்டுறவு வங்கிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் வங்கிகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமையில் செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட்ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார் மற்றும் இணை செயலாளர்கள் ரமணி, வசந்தபிரபா உள்பட பலர் இணை பதிவாளர் அலுவலகம் முன் திரன்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பொதுமக்கள் சார்பில் குமரி மாவட்ட சாலைகளில் 10 சக்கரங்களுக்கு மேலான கனரக வாகனங்களில் கனிமவளங்கள் கொண்டு செல்வதால் சாலைகள் பழுதடைவதாகவும் இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டது. மேலும் விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகி உள்ளதால், குமரி மாவட்டத்தில் உள்ள சாலைகளில் 10 - சக்கரங்களுக்கு மேலான கனிம வள லாரிகளை தடை செய்ய வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.
கிராம சபை கூட்டத்தில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், ஊராட்சி ஒன்றிய கவுன்சில் விஜயராணி, மற்றும் சுகாதார துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மின்சார வாரியம், ரேஷன் கடை ஊழியர்கள், அரசு செவிலியர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.
தென்தாமரைகுளம் :
கரும்பாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டப் பணிக்கன் தேரி விளையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி தலைவர் தங்க மலர் சிவபெருமான் தலை மையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மைப் பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதி க்கப்பட்டு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உதவி மருத்துவர் சுரேஷ், உதவி வேளாண் அலுவலர் ரஜினி, கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன், கால் நடை மருத்துவர் ஆசீர் எட்வின், ஊராட்சி துணை தலைவர் தமிழரசி, வார்டு உறுப்பினர்கள் ஞான வடிவு, அரிஹர சுதன், ஞானராணி, ஆல்வின் ராஜபால், கீதா, ராஜ்குமார், நாகம்மாள், மணிகண்டன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் காளி யப்பன் நன்றி கூறினார்.
- படகுபோக்குவரத்து 4 நாட்களுக்கு பின் காலை 8 மணிக்கு தொடங்கியது
- ஓட்டல் மற்றும் கடைகளில் வியாபாரமும் குறைந்து விட்டன.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் பவுர்ணமியையொட்டி கடந்த 4 நாட்களாக காலை10 மணி வரை கடல் ஒருபுறம் சீற்றமாகவும் மறுபுறம் நீர்மட்டம் தாழ்வாகவும் காணப்பட்டது.இதனால் 4 நாட்களாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டு வந்தது.
வழக்கமாக தொடங்கும் நேரமான காலை 8 மணிக்கு பதில் 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.இதற்கிடையில்கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறையின் காரண மாகவும்பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும் கன்னியாகுமரியி ல்ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர்.
ஆனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயற்கை சீற்றம் கார ணமாக படகு போக்கு வரத்து காலதாமதமாக தொடங்கப்பட்டது.இதனால் காலை நேரத்தில் வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தொடர்மழை பெய்த பிறகும் சுற்றுலாபயணிகளின் வருகை குறையவில்லை.கொட்டும் மழையிலும் குடைபிடித்துக்கொண்டு சுற்றுலா பயணிகள்சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
இதற்கிடையில் நேற்றுடன் தொடர்விடுமுறை முடிந்தது. மேலும் மழை இல்லாத மாவட்டங்களில் காலாண்டு தேர்வுமுடிந்து விடுமுறை விடப்பட்ட பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும்இன்று முதல் குறையதொடங்கிவிட்டது. மழையின் காரணமாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவினாலும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளும் சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி கிடக்கிறது. ஓட்டல் மற்றும் கடைகளில் வியாபாரமும் குறைந்து விட்டன. லாட்ஜ்க ளில் உள்ள அறைகளும் காலியாக கிடக்கின்றன.
- மோட்டார் சைக்களில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- சோதனையில் அவரிடம் 16 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இரணியல் :
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இரணி யல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த னர். அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்களில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் 16 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து அரசு அனுமதி இன்றி கொண்டு வந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் நிஷாந்தை (வயது 24) கைது செய்தனர்.
மேலும் அந்த வழியாக நடந்து வந்த மற்றொருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ஒரு பையில் 10 மது பாட்டில்கள் அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்ய வைத்தி ருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் சதாசிவம்பிள்ளை (37) என்பவரை கைது செய்தனர்.






