search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் ஆய்வு
    X

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் ஆய்வு

    • மழை சேதங்களையும் பார்வையிட்டார்
    • சேதம் அடைந்த சாலையை சீரமைக்கவும் அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையத்தில் உள்ள டெப்போ ஊழியர்களுக்கான கழிவறை மோசமான நிலையில் இருந்தது. இதை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கழிவறையை டெப்போ ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் என்றும் மேயர் மகேஷ் கேட்டுக்கொண்டார்.

    பின்னர் பஸ் நிலையத்தில் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் மற்றும் தரைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறையை பார்வையிட்டார். மழையின் காரணமாக செட்டிகுளம், சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மேயர் மகேஷ், அதை உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை கிருஸ்டோபர் காலனி பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த மரம் ஒன்று மழையினால் முறிந்து வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது சாய்ந்திருந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் மேயர் மகேஷ் அங்கு சென்று பார்வையிட்டார். உடனே மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ராஜலட்சுமி நகர் பகுதியில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்கவும் அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×