என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் பெண்களின் உரிமை விழிப்புணர்வு பேரணி
    X

    கன்னியாகுமரியில் பெண்களின் உரிமை விழிப்புணர்வு பேரணி

    • 5-ந் தேதி தொடங்குகிறது
    • குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெண்குழந்தைகளை காப்போம். பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாலின பாகுபாடு அடிப்படையில் பாலினம் அறிந்து கொள்வதை தடுப்பதற்காகவும் பெண்களின் வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது மற்றும் குறைந்து வரும் பெண் குழந்தை பாலின விகித பிம்பத்தின் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அவர்களின் கல்வியினை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் 2022-2023-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அனைத்து துறைகள் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 120 பெண் ராணுவ வீராங்கனைகள் இருசக்கர வாகன பேரணி நடத்துகின்றனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்தும் இந்த பேரணியை வருகிற 5-ந் தேதி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தின் முன்பு மத்திய இணை மந்திரி தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் பங்கேற்கின்றனர்.

    இந்த பேரணி 31-ந் தேதி குஜராத் மாநிலத்தில் முடிவடைகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தேசிய மாணவர் படை, வளரிளம் பெண்கள் பேரணியில் கலந்து கொண்டு கலந்துரையாடுகின்றனர். கன்னியாகுமரியில் தொடங்கி களியக்காவிளை வழியாக செல்லும் இந்தப்பேரணியில் பொதுமக்களும் கலந்து கொண்டு பெண்குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×