என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    கவுன்சிலராக டி. பூபதி பொறுப்பேற்றவுடன், தனது சொந்த செலவில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளார்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட டி. பூபதி வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிடும் போது இவர் வார்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்த நிலையில் அதில் முக்கியமான ஒன்று வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்பதாகும்.

    தற்போது கவுன்சிலராக டி. பூபதி பொறுப்பேற்றவுடன், தனது சொந்த செலவில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளார்.

    அதன்படி அண்ணா நகர் மற்றும் அரசு ஊழியர் குடியிருப்பு நகர்களின் ஒரு பகுதி, ஆஞ்சநேயர் கோவில் தெரு, நேதாஜி தெரு மற்றும் விவேகானந்தர் தெரு ஆகிய பகுதிகளில் மொத்தம் 30 கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் கட்டுப்பாட்டு பகுதி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் வழங்கப்பட இருக்கிறது.
    சின்னசேலம் அருகே சாராயம் விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சேண்டி மகன் ராஜேந்திரன் (வயது 39)  தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனையில்    ஈடுபட்டு வந்துள்ளார்.  கடந்த மாதம் 17-ம் தேதி சின்னசேலம் அடுத்த கனியாமூர் ஆற்றுப்பாலம் அருகே 60 லிட்டர் கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த ராஜேந்திரனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கையும் களவுமாக பிடித்து சாராயத்தை பறிமுதல் செய்ததோடு வழக்கு பதிந்து கைது செய்து  சிறையில் அடைத்தனர்.  

    ராஜேந்திரன் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் மேலும் 2 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் கிளை சிறையில் இருந்த ராஜேந்திரனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்  கைது செய்த சின்னசேலம் போலீசார் நேற்று  கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஐ.ஆர். கோவிந்தராஜ் கவுன்சிலராக பொறுப்பேற்றவுடன், வார்டு பகுதியில் 10 இடங்களில் குப்பை தொட்டிகளை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்துள்ளார்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் ஐ.ஆர். கோவிந்தராஜ், அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதில், 2-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைத் தொட்டிகள் அமைக்கும் பணியை உடன் செய்வேன் என்று தெரிவித்து இருந்தார்.

    அதன்படி, ஐ.ஆர். கோவிந்தராஜ் கவுன்சிலராக பொறுப்பேற்றவுடன், வார்டு பகுதியில் 10 இடங்களில் குப்பை தொட்டிகளை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
    கள்ளக்குறிச்சி அருகே வியாபாரியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் கரீம்ஷாதக்கா பகுதியைச் சேர்ந்தவர் சையத் உசேன் (வயது 45). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரும், இதே பகுதியில் கலையநல்லூர் சாலையில் வசித்துவரும் முகமது இப்ராகிம் (52) என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

    நேற்று இரவு முகமது இப்ராகிம் தனது நண்பரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் போனை எடுத்துப் பேசாததால் ஆத்திரமடைந்த முகமது இப்ராகிம் நேராக சையத் உசேன் என்பவர் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார்.

    சத்தம் கேட்டு சையது உசேன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கதவைத் திறந்து கிரில் கதவுக்கு உள்பக்கமாக நின்றுகொண்டு எதற்காக இந்த இரவு நேரத்தில் இங்கு வந்து தொந்தரவு செய்கிறாய் என கேட்டார்.

    அப்போது நான் செல்போனில் அழைத்தால் எடுக்க மாட்டாயா?, அவசரத்திற்கு என் போன் எடுக்காத நீ உயிரோடு இருக்க வேண்டியதே இல்லை எனக்கூறி முகமது இப்ராகிம் தனது கைலியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சையது உசேன் மார்பில் குத்தி உள்ளார்.

    அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சையது உசேனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சையத் உசேன் மனைவி அஸ்மர் பீ கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இப்ராகிமை கைது செய்தனர்.
    கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மணிமுக்தா ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மயானத்தில் வைத்து படையலிட்டு, சுண்டலை சூரையிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சித்தலூரில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயான கொள்ளை மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி கடந்த 1- ந் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதன்படி தினமும் மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை மணிமுக்தா ஆற்றில் இருந்து பூங்கரகம் அலங்கரித்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டது.

    மேலும் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மணிமுக்தா ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மயானத்தில் வைத்து படையலிட்டு, சுண்டலை சூரையிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாளை மாலை விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அறநிலையத் துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புதுவையிலிருந்து சாராயம் கடத்தியது தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    புதுச்சேரியிலிருந்து கார் ஒன்று உளுந்தூர்பேட்டை வழியாக தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த சிறுவன் ஓட்டி வந்தான்.

    உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் பகுதியில் கார் சென்றபோது சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்த சாராயக் கேனில் இருந்து சாராயம் வழிந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் காரை சோதனை செய்ததில் காரில் இருந்து 10 சாராய கேன்களை பறிமுதல் செய்தனர். உடனே திருநாவலூர் போலீசார் உளுந்தூர்பேட்டை மது விலக்கு போலீசாரிடம் தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    காரை ஓட்டி வந்த சிறுவனிடம் விசாரணை செய்தபோது அவன் தஞ்சாவூரைச் சேர்ந்தவன் என்பதும் திருமண நிகழ்ச்சிக்காக புதுவையிலிருந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் கடத்தி வந்த சிறுவனை கைது செய்தனர்.

    திருக்கோவிலூர் அருகே கோலப்பாறை கிராமத்தில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற பால தண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
    திருக்கோவிலூர்:

     திருக்கோவிலூர் அருகே கோலப்பாறை கிராமத்தில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற பால தண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. மாசி மாத சஷ்டி மற்றும் கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை முதல் பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

    காலையில் தொடங்கி, மாலை 6 மணி வரைக்கும் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திருக்கோவிலூர் மற்றும் அதைச சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும்கண்காணிப்புக்குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும்கண்காணிப்புக்குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மாவட்டத்தில் முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்டவன்கொடுமை வழக்குகள் குறித்தும், அவ்வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நவடடிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார். மேலும், இனிவரும் காலங்களில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், கள்ளக்குறிச்சி செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர் விஜயராகவன், கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி முதல்வர் மோகன்தாஸ், இணை இயக்குநர் வேளாண்மை (திட்டம்) சுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ராவுத்தராயன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்புசாமி (வயது 55). விவசாயியான இவர் தனது கிராமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மூலசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் சுப்புசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சின்னசேலம் அருகே பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டி துண்டிக்கப்பட்டுள்ளதை பொக்லைன் எந்திரத்தை கொண்டு மூடினர்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர்பூசப்பாடி சாலையில் பெரியார் நகர் காட்டுக்கொட்டாய் கிழக்கு பாதையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் தனிப்பட்ட முன் விரோதத்தை கொண்டு 5 இடங்களில் சாலையின் குறுக்கே யாரும் செல்ல முடியாது வகையில் தடுத்து பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.

    இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மேல்நாரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆசிரியர் உள்ளிட்ட 28 பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோரிடம் நேரில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    காலம் காலமாக அனுபவித்து வந்த பாதையில் சிலர் உள்நோக்கம் கொண்டு பாதையின் குறுக்கே குழிதோண்டி துண்டித்து நடக்கவிடாமல், வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத வகையில் தடுத்துள்ளதால், சுமார்150 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயிகள் . மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற வருவோர், கால்நடை வளர்ப்போர், விளைபொருட்களை அறுவடை செய்து வெளியில் கொண்டு செல்வோர் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

    இந்த சம்பவம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆகவே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் ,

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், தேவ மூர்த்தி மற்றும் மகளிர் போலீசார், வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட அப்பகுதி மக்களிடம் சட்டம் ஒழுங்கு பற்றி பேச்சுவார்த்தை செய்து பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டி துண்டிக்கப்பட்டுள்ளதை பொக்லைன் எந்திரத்தை கொண்டு மூடினர்.
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சிசார்பில் லாவண்யா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    சங்கராபுரம்:

    தமிழகம் முழுவதும் மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சிகள் தலைவர், துணைத்தலைவர்கள் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பதவிகளைப் பிடித்தனர்.

    இருப்பினும் சில இடங்களில் தி.மு.க. தலைமையால் அதிகாரப்பூர்வமாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க.வினரே போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளனர். இதனால் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் போட்டியாக மனுதாக்கல் செய்து வென்றவர்கள் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

    இந்த சூழலில் பல்வேறு இடங்களில் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சிசார்பில் லாவண்யா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த பேரூராட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் கடைசி நிமிடத்தில் போட்டியிட மறுத்து விட்டார். இதனால் துணைத் தலைவர் பதவிக்கும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலுக்கான வாக்களிப்பை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் புறக்கனித்தனர். இதனால் துணைதலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க.வேட்பாளர் சிவாவை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இந்த நகராட்சியிலும் துணைத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

    மேலும் அ.தி.மு.க., வி.சி.க., த.வா.க. வினரும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் இங்கும் தேதி குறிப்பிடாமல் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    சங்கராபுரம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரோஜாரமணி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வும், வி.சி.க.வும் முட்டி மோதி வந்த நிலையில் காங்கிரசுக்கு அந்த பதவி ஒதுக்கப்பட்டது.

    இதனால் பிற்பகல் நடந்த துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் புறக்கனித்தனர். எனவே இங்கும் தேதி குறிப்பிடாமல் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட நிர்மலா ரவிச்சந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக சின்னசாமி என்ற தி.மு.க. வேட்பாளரை அறிவித்திருந்தனர். ஆனால் நகராடசி தேர்தலில் வி.சி.க. வினர் இந்த பதவியை தங்களுக்கு ஒதுக்கித் தருமாறு வலியுறுத்தி பெற்றதால் அக்கட்சியின் ராஜலட்சுமி துணைத் தலைவராக போட்டியின்றி வெற்றி பெற்றார்.

    உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு வேறு யாரும் தாக்கல் செய்யாத நிலையில் திமுக முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு ஒருமனதாக வெற்றி பெற்றார்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை முதல் நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளில் உள்ள கவுன்சிலர்கள் 20 பேர் வெற்றி பெற்ற நிலையில் நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது.

    இதில் திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு விண்ணப்பம் செய்தார். உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு வேறு யாரும் தாக்கல் செய்யாத நிலையில் திமுக முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு ஒருமனதாக வெற்றி பெற்றார்.

    ×