search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயான கொள்ளை திருவிழா"

    • அம்மன் கோவிலில் மயான கொள்ளைத் திருவிழா நடந்தது.
    • அலகு குத்தியும், உடலில் எலுமிச்சைப் பழங்களைக் குத்திக் கொண்டும் ஊர்வலமாக சென்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளைத் திருவிழா நடந்தது.

    கிருஷ்ணகிரி பழையபே ட்டை அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளைத் திருவிழா நேற்று நடந்தது. காலையில் அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், உடலில் எலுமிச்சைப் பழங்களைக் குத்திக் கொண்டும் ஊர்வலமாக சென்றனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காளி வேடம் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பூசாரியிடம் பக்தர்கள் சாட்டையடி வாங்கிக் கொண்டனர்.

    மதியம், அலங்கரிக்க ப்பட்ட தேரில் பூத வாகனத்தில் அமர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை க்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு இடுகாட்டில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளை காளி வேடம் அணிந்து சென்ற பக்தர்கள் வாயால் கடித்தனர்.

    விழாவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இவ்விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில், பல இடங்களில் பொதுமக்கள் அன்னதானம், நீர்மோர், தண்ணீர் போன்றவற்றை பக்தர்களுக்கு வழங்கினர்.

    ×