என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கள்ளக்குறிச்சி அருகே வியாபாரியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நண்பர்

    கள்ளக்குறிச்சி அருகே வியாபாரியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் கரீம்ஷாதக்கா பகுதியைச் சேர்ந்தவர் சையத் உசேன் (வயது 45). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரும், இதே பகுதியில் கலையநல்லூர் சாலையில் வசித்துவரும் முகமது இப்ராகிம் (52) என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

    நேற்று இரவு முகமது இப்ராகிம் தனது நண்பரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் போனை எடுத்துப் பேசாததால் ஆத்திரமடைந்த முகமது இப்ராகிம் நேராக சையத் உசேன் என்பவர் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார்.

    சத்தம் கேட்டு சையது உசேன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கதவைத் திறந்து கிரில் கதவுக்கு உள்பக்கமாக நின்றுகொண்டு எதற்காக இந்த இரவு நேரத்தில் இங்கு வந்து தொந்தரவு செய்கிறாய் என கேட்டார்.

    அப்போது நான் செல்போனில் அழைத்தால் எடுக்க மாட்டாயா?, அவசரத்திற்கு என் போன் எடுக்காத நீ உயிரோடு இருக்க வேண்டியதே இல்லை எனக்கூறி முகமது இப்ராகிம் தனது கைலியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சையது உசேன் மார்பில் குத்தி உள்ளார்.

    அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சையது உசேனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சையத் உசேன் மனைவி அஸ்மர் பீ கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இப்ராகிமை கைது செய்தனர்.
    Next Story
    ×