என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சாலபோகம், புஞ்சையரசன்தாங்கள், மேட்டுப்பாளையம், முசரவாக்கம், நெய்குப்பம், வளத்தோட்டம், குருவிமலை ஆகிய பகுதிகளில் சிலர் மாட்டு வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், பாலுச்செட்டிச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, மாகரல் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த மோகன் (வயது 27), செவிலிமேட்டை சேர்ந்த வேலு (41), புஞ்சையரசன்தாங்கலை சேர்ந்த சுப்பிரமணி (30), குமார் (39), மணிகண்டன் (33), மேல்கதிர்பூரை சேர்ந்த புவனேஸ்வரன் (34), முசரவாக்கத்தை சேர்ந்த அண்ணாமலை (28), அங்கம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணி (19), அப்துல்லாபுரத்தை சேர்ந்த தயாளன் (27) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,208 ஆக உள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 32,754 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 757-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,159 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,208 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

முழு ஊரடங்கு மற்றும் சூரிய கிரகணத்தையொட்டி மக்கள் நடமாட்டம் இன்றி மாமல்லபுரம் கடற்கரை வெறிச்சொடி காணப்பட்டது.
மாமல்லபுரம்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த 4 மாவட்டங்களுக்கும் வருகிற ஜூன் 30-ந்தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
கடுமையான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்ட இந்த முழு ஊரடங்கால் சர்வதேச சுற்றுலா மையான மாமல்லபுரம் நேற்று 3-வது நாளாக மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு புறம் முழு ஊரடங்கு மறுபுறம் சூரிய கிரகணத்தையொட்டி நேற்று மக்கள் வெளியே வராமல் விடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
குறிப்பாக, உள்ளூர் மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளுடன் தினமும் கடற்கரை பகுதிக்கு வந்து பொழுதை போக்குவர். இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து உள்ளூர் மக்களின் நடமாட்டமும் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரை கோவிலும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
குறிப்பாக, நேற்று சூரிய கிரகணத்தையொட்டி கொக்கிலமேடு, வெண்புருஷம், தேவனேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பெரும்பாலோனோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்கள் சூரியகிரகணம் முடிந்தவுடன் மதியம் 2 மணிக்கு குளித்துவிட்டு தங்கள் வீடுகளில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாட்டு பணிகளில் ஈடுபட்டனர். வலை பின்னுதல், படகுகளை சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் சூரிய கிரகணம் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் வாகன நடமாட்டம் இல்லாதால் வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம் புறவழிச்சாலையில் பல்லவன் சிலை அருகில் உள்ள சோதனை சாவடியில் நின்ற போலீசார் தேவையில்லாமல் ஊர் சுற்றும் வாலிபர்களை மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர். ஒரு சில வாகனங்கள் மட்டுமே கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்தது.

காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாறு அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவரது மேற்பார்வையில், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 மூட்டைகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த விஜய் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மேட்டார் சைக்கிள்கள் மற்றும் மணல் மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

சீனமொழியில் அச்சிடப்பட்டு டிரம்மில் அடைக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று சீலிடப்பட்ட தகர டிரம் ஒன்று கரை ஒதுங்கியது. அங்கிருந்த மீனவர்கள் அதை உடைத்து பார்த்தனர். அதன்உள்ளே 78 பொட்டலங்கள் இருந்தன. இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கடலோர காவல் படை போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி, மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் முனியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய டிரம்மில் இருந்த 78 பொட்டலங்களை கைப்பற்றினர்.
ரூ.100 கோடி போதை பொருட்கள்
அந்த பொட்டலத்தின் மேல் “ரீபைன்ட் சைனீஸ் டீ” என சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தை பிரித்து சோதனை செய்தனர்.
அதுபோதை பொருளாக இருக்கும் என சந்தேகம் அடைந்த கடலோர காவல் படை போலீசார் 78 பொட்டலங்களையும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அது ஹெராயின் வகையை சேர்ந்த ‘மெத்தாம்பிடைமின்’ என்ற ஒரு வகை போதை பொருள் என்பது தெரிந்தது.
இதை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்தியும், சாப்பிட்டும், பவுடராக்கி சுவாசித்தும் போதை ஏற்றி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 78 கிலோ மதிப்புள்ள இந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ.100 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.
மீனவர்களிடம் விசாரணை
போலீசார் வருவதற்குள் டிரம்மை உடைத்து பார்த்த சில மீனவர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் அழைத்து விசாரித்தனர். அதற்குமீனவர்கள், டீசல் அல்லது பெட்ரோல் நிரப்பப்பட்ட டிரம் என நினைத்து அதை உடைத்து பார்த்ததாக தெரிவித்தனர்.
கடலில் ஏதாவது மர்ம பொருள் மிதந்து வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் வருவதற்குள் அதனை திறந்து பார்க்ககூடாது என்றும் அறிவுரை வழங்கினர்.
மேலும் மர்மநபர்கள் யாராவது படகில் கடத்தி வந்து இந்த போதை பொருட்களை வீசிவிட்டு சென்றனரா? என்ற சந்தேகத்தில், மர்மநபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என அந்த கடற்கரை பகுதியில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் மொபட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 47). ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புருஷோத்தமன் தன்னுடைய மகள் திருமணத்துக்கு தங்க நகை வாங்குவதற்காக ஸ்ரீபெரும்புதூர் காந்திரோட்டில் உள்ள வங்கியில் ரூ.3 லட்சத்தை எடுத்தார்.
அதை அவர் தனது மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள கடை அருகே மொபட்டை நிறுத்தி விட்டு ஜூஸ் குடித்தார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மர்ம நபரால் திருடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புருஷோத்தமன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,070 ஆக உள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 30,271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 666-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,001 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,070 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

முழு ஊரடங்கு காரணமாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடியது.
மாமல்லபுரம்:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி மாமல்லபுரம், பூஞ்சேரி மற்றும் புறவழிச்சாலையில் உள்ள சோதனை சாவடிகளில் மாமல்லபுரம் சரக உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் நேற்று காலை 8 மணி முதல் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேவையில்லாத காரணங்களால் வரக்கூடியவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனை சாவடிகளில் சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக மாமல்லபுரத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டதால் மாமல்லபுரம் நகரத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

காஞ்சிபுரம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அசோக் நகர் இந்திரா அவென்யூவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 25). மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இந்த நிலையில், கார்த்திகேயன் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வட்டாட்சியர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வட்டாட்சியருக்கு கொரோனா உறுதியானதால் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 859 ஆக உள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 26,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 428-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 803 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 859 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 440 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே அதிக அளவில் மது குடித்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மின்நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் குருசந்திரன் (வயது 45). கடையில் வேலை செய்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்த குருசந்திரன் காஞ்சிபுரம் ரெயில்வே ரோடு பகுதியில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி பாண்டீஸ்வரி பெரிய காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.