என் மலர்
செய்திகள்

மணல் கடத்தல்
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 9 பேர் கைது
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சாலபோகம், புஞ்சையரசன்தாங்கள், மேட்டுப்பாளையம், முசரவாக்கம், நெய்குப்பம், வளத்தோட்டம், குருவிமலை ஆகிய பகுதிகளில் சிலர் மாட்டு வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், பாலுச்செட்டிச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, மாகரல் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த மோகன் (வயது 27), செவிலிமேட்டை சேர்ந்த வேலு (41), புஞ்சையரசன்தாங்கலை சேர்ந்த சுப்பிரமணி (30), குமார் (39), மணிகண்டன் (33), மேல்கதிர்பூரை சேர்ந்த புவனேஸ்வரன் (34), முசரவாக்கத்தை சேர்ந்த அண்ணாமலை (28), அங்கம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணி (19), அப்துல்லாபுரத்தை சேர்ந்த தயாளன் (27) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story