என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் தற்கொலை
    X
    வாலிபர் தற்கொலை

    காஞ்சிபுரம் அருகே வாலிபர் தற்கொலை

    காஞ்சிபுரம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அசோக் நகர் இந்திரா அவென்யூவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 25). மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இந்த நிலையில், கார்த்திகேயன் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×