என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் இருந்து சந்தேகப்படும்படியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அனஸ் (வயது 27), சென்னையை சேர்ந்த ஜும்மாகான் (47), முகமது ரபி (46) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அதில் 2 பேரின் முதுகிலும் சற்று வீங்கி இருந்தது. அது என்ன? என்று கேட்டதற்கு முதுகில் சுளுக்கு பிடித்து இருப்பதாகவும், அதற்காக பேண்டேஜ் வைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், பேண்டேஜை பிரித்து பார்த்தனர்.

    அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மற்றொருவர் பேண்ட்டில் மறைத்து கடத்தியதும் தெரிந்தது. 3 பேரிடம் இருந்தும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    பெரும்பாக்கத்தில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் பாரதி (வயது 24). இவர், காதல் தோல்வியால் 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    பாரதியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு செல்போன் செயலி ஒன்றில் பாடல் பாடுவதில் விருதுநகரைச் சேர்ந்த முத்துகுமரேசன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

    நாக்பூரில் ராணுவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் முத்துகுமரேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதையறிந்த பாரதி அதிர்ச்சி அடைந்தார். கடந்த 2-ந் தேதி பாரதியுடன் முத்துகுமரேசன் வீடியோ கால் மூலம் பேசியபோது இது தொடர்பாக 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாரதி, தான் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.

    உடனே முத்துகுமரேசன், அதற்கு பதிலாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள் என கூறியதாக தெரிகிறது. இதனால் வீடியோ காலில் முத்துகுமரேசன் முன்னிலையிலேயே பாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் முத்துகுமரேசனை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இர்பான் (வயது 36), லியாகத் அலி (36), சையத் அபுதாகிர் (21), திருச்சியை சேர்ந்த முகமது இர்திஷ் (25), சென்னையை சேர்ந்த அபூபக்கர் சித்தீக் (21) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அனைவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.82 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த சென்னையை சேர்ந்த ஜாகீர் உசேன் (40) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் யூரோ கரன்சிகள் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள யூரோ கரன்சிகளை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் யூரோ கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 6 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்கப்பட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் தும்பவனம், வெள்ளை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவரது அக்காள் மகள் பூரணி (17). இவரது தோழிகள் அதே பகுதியை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ (15), சுபஸ்ரீ (14) மற்றும் மீனாட்சி (9). இவர்கள் 5 பேரும் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில் குளிக்க சென்றனர்.

    குளித்து முடித்தபிறகு தாமோதரன் மீனாட்சியை அழைத்து கொண்டு பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ 3 பேரும் தண்ணீர் வழியாகவே பாலாற்றை நடந்து கடக்க முயன்றனர். தாமோதரன் திரும்பி பார்த்தபோது பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்கள்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர் குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று மாயமான 3 சிறுமிகளை தேடினர்.

    இந்த நிலையில் மாயமான பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ ஆகியோரின் உடல்கள் நேற்று அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த சிறுமிகளின் உடலை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த சென்னையை சேர்ந்த சையத் அபுதாகீர் (வயது 37), ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் காதர் (54) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

    பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் இருவரையும் மின்சாரம் தாக்கியது.

    மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர், அவருக்கு உதவியவர் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த வேலூரை சேர்ந்த விவேக் மனோகரன் (வயது 30) என்பவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

    ஆனால் அவர் அணிந்து இருந்த கால் செருப்பு சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பயணிகள் அனைவரும் சென்ற பிறகு அந்த விமானத்துக்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு இருக்கையின் அடியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதை பிரித்து பார்த்தபோது அதற்குள் 6 தங்க கட்டிகள் இருந்தன.

    ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த பயணி, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து இருக்கைக்கு அடியில் விட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட விவேக் மனோகரனிடம் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்-டாப்கள், விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அப்துல் மன்னன் (வயது 46), தமீமுன் அன்சாரி அப்துல் ரசீத் (34) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 11 ஐபோன் செல்போன்கள், 45 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகள், 11 லேப்டாப்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்ததில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தையும் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள், விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில், காலணியில் மறைத்து வைத்து ரூ.12 லட்சம் தங்கம் கடத்தி வரப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அசன் அலி (வயது 23) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை.

    இதையடுத்து அவரது காலில் அணிந்து இருந்த காலணியை கண்டபோது, சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற சிறப்பு விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் (21) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்களை கைப்பற்றினார்கள்.

    2 பேரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
    சென்னை:

    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த சென்னையைச் சேர்ந்த சையத் நதீமுர் ரகுமான் (வயது 33) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் முகத்தில் பூச பயன்படுத்தும் கிரீம், தைலம், நக வெட்டிகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மை கார்கள் இருந்தது. சந்தேகத்தின்பேரில் அவற்றை பிரித்து சோதனை செய்தபோது அவற்றுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக சையத் நதீமுர் ரகுமானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்து செல்லும்போது வாகனத்தில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    உத்திரமேரூர்: 

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 75). உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு வாகனத்தில் எடுத்து சென்றனர். அப்போது அந்த வாகனத்தின் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் அந்த வாகனத்தில் இருந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி (40), பாஸ்கர் (46), அவரது மகன் முகி (18), நீலமேகம் (28) ஆகியோரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக மின்சாரத்தை துண்டித்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்து போன்ார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரோசையன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    துபாயில் இருந்து டி.வி., லேப்-டாப்பில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த திருச்சியை சேர்ந்த முகமது இஷாக் (வயது 26), சென்னையை சேர்ந்த சாதிக் அலி (53), நாகூர் அனிபா (36) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில், 3 பேரின் உடமைகளில் இருந்த எல்.இ.டி.டி.வி.களில் தங்கத்தை தகடுகளாக மாற்றி மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, 3 பேரிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட 36 தங்க தகடுகளை கைப்பற்றினார்கள்.

    அதேபோல், துபாயில் வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை இளையான்குடியை உசேனையூர் ரகுமான் (22), முகமது கனி (46), சென்னையை சேர்ந்த காதர் உமாயூன் (25), அப்துல் கரீம் (52) ஆகிய 4 பேரிடம் இருந்த டி.வி., லேப்-டாப்களின் மானிட்டரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.81 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் எடைக்கொண்ட 28 தங்க தகடுகளை கைப்பற்றினார்கள்.

    மேலும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்து இறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் ஆசிக் (22) என்பவரின் உள்ளாடைகளில் இருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் 8 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×