என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    உத்திரமேரூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் பெருநகர் பகுதியில் லாரிகளில் மணல் கடத்துவதாக பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தண்டரை சேர்ப்பாக்கம் சாலையில் வந்த 2 லாரியை மறித்து சோதனை செய்ததில் லாரியில் அனுமதியின்றி மண் ஏற்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக தண்டரை கிராமத்தை சேர்ந்த ராபின் (வயது 31), பெருநகர் சிங்காள தெருவை சேர்ந்த தவமணி (36) ஆகியோரை போலீசார் கைது செய்து, 2 மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்துள்ள சுதர்சன் விரிவாக்கம் நகர் பகுதியில் வசித்து வரும் கவிதா வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் வைர நெக்லஸ், கம்மல், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கமாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கொரோனா தொற்றை ஒழிக்க தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்படுகிறது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று தாக்கத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் முக்கிய பங்காக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக அளித்து வருகிறது. அதனை தொடர்ந்து தொழிற்சாலைகள் நிறைந்துள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் 3-ம் கட்ட தடுப்பூசி போடும் முகாமை துரிதப்படுத்தும் பொருட்டு தொழில் நிறுவனங்கள் அதிகமாக இயங்கி வரும் சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, மாம்பாக்கம், பிள்ளைப்பாக்கம், வல்லம்வடகால், ஒரகடம், திருமுடிவாக்கம் போன்ற இடங்களில் தினந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. எனவே, தொழிலாளர்கள் இந்த முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    சிப்காட் மற்றும் சிட்கோவில் உள்ள நிறுவனங்கள் தவிர ஏனைய தொழில் நிறுவன தொழிலாளர்களும் நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு 100 சதவீதம் தடுப்பூசி போட்டு கொண்ட மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைவரும் விடாமுயற்சியுடன் கடைசி ஒரு தொழிலாளர் வரை தடுப்பூசி போட்டு கொள்ள செய்ய வேண்டும்.

    கொரோனா தொற்றை ஒழிக்க தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம். (044-27238837, 9688036736).

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 731 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி முதல் பிரதியை பெற்று கொண்டார்.

    பின்னர் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான மறு வரையறை செய்யப்பட்ட வார்டுகளின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 1281 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 81 ஆயிரத்து 731 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 266 ஆண்கள், 3 லட்சத்து 50 ஆயிரத்து 387 பெண்கள் மற்றும் 78 இதர வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) தினகரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
    ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    பெரிய காஞ்சீபுரம் வெள்ளக்குளத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 58). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி. 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சீனிவாசன் தனது அண்ணனுடன் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். சீனிவாசனை குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே பிச்சாவாடி பாலாற்று படுகையில் விஷம் குடித்து உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போலீசார் அங்கு விரைந்து சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் மலர்விழி தமிழ்அமுதன், ஆதனூர் ஊராட்சி கிளை செயலாளர் டி. தமிழ்அமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். பொதுமக்களுடன் வரிசையில் நின்று வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பொதுமக்கள் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அப்போது ஊராட்சி செயலர் இதயராஜ் உடன் இருந்தார்.
    அரசு உத்தரவின்படி கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்ளவேண்டும்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு தற்போது கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. கொரோனா நோய்த்தொற்று மீண்டும் பரவாமல் இருக்க அரசால் அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகள் தீவிரமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும் ஒவ்வொரு தனி நபரும் கொரோனா நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நமக்குள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. நமது மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு ஆரம்பித்து 60 வயதுக்கு மேற்பட்டோர். 18 வயதிற்கு மேற்பட்டோர் என படிப்படியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றாநோய் பாதிப்புடையோர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 1,824 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 2 தவணைகளும் செலுத்தி கொண்டவர்கள் 50 ஆயிரத்து 146 பேர் ஆவர். கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 2 தவணை தடுப்பூசிகள் போட்டு கொண்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

    2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே 90 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முதல் தவணை தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவான அளவிலேயே கிடைக்கும். எனவே அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.

    அரசு உத்தரவின்படி கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்ளவேண்டும். தற்சமயம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே முதல் தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆரம்ப சுகாதாரநிலையம் அல்லது சிறப்பு மருத்துவ முகாம்களில் தவறாமல் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.
    பொதுமக்களின் வசதிக்கேற்ப தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் அனைத்து நாட்களிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட பஸ் நிலையங்கள், காய்கறி சந்தைகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். மேற்படி தடுப்பூசி செலுத்தப்படும் சிறப்பு முகாம்களின் விவரங்களை மாவட்ட இணையதளமான www.kancheepuram.nic.in மற்றும் மாவட்ட கலெக்டரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான @kanchicollector மற்றும் முகநூல் பக்கமான District Collector Kancheepuram போன்றவற்றில் வெளியிடப்படுகிறது.

    பொதுமக்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2 தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முக கவசம் அணிந்து வெளியே செல்லுமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 40). இவர் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து படப்பை அருகே ஏகாம்பரத்தை மணிமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சின்ன காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் தி.மு.க. நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    காஞ்சீபுரம்:

    சின்ன காஞ்சீபுரம் நசரத்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 60). முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர். தி.மு.க. நிர்வாகியான இவருக்கு உமா என்ற மனைவி, 3 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இவர் சொந்தமாக தேங்காய், வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். மேலும் ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

    கொரோனா தொற்று காலத்தில் ஆட்டோக்கள் சரி வர இயங்காததால், போதிய வருமானம் இன்றி கடன் தொல்லையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தார்.

    இந்த நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்துவிட்டு மாடிப்படி வழியாக கீழே இறங்கும் போது மயக்கம் அடைந்தார்.

    இதை பார்த்த கபிலேஷ் தந்தையிடம் கேட்கவே, அவர் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக கருணாநிதியை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    சின்ன காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் தி.மு.க. நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் நசரத்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 60). முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர். தி.மு.க. நிர்வாகியான இவருக்கு உமா என்ற மனைவி, 3 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இவர் சொந்தமாக தேங்காய், வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். மேலும் ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

    கொரோனா தொற்று காலத்தில் ஆட்டோக்கள் சரி வர இயங்காததால், போதிய வருமானம் இன்றி கடன் தொல்லையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தார்.

    இந்த நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்துவிட்டு மாடிப்படி வழியாக கீழே இறங்கும்போது மயக்கம் அடைந்தார்.

    இதை பார்த்த கபிலேஷ் தந்தையிடம் கேட்கவே, அவர் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக கருணாநிதியை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு வடிவேல் நகரில் அசோக்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அசோக்குமார் குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பதறியடித்து கொண்டு வீட்டுக்குள் சென்று பீரோவை சோதனை செய்தபோது, அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    வண்டலூர் பூங்காவில் அனைத்து சிங்கங்களும் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளன. பரிசோதனையில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தாம்பரம்:

    கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் வண்டலூர் பூங்கா கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் பூங்காக்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதனால் வண்டலூர் பூங்காவும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பூங்கா திறக்கப்படவில்லை. அரசிடம் இருந்து உரிய உத்தரவு கிடைத்ததும் வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வண்டலூர் பூங்காவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று காரணமாக 9 வயதான நீலா, 12 வயதான பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

    மேலும் 9 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. இதையடுத்து பூங்கா ஊழியர்கள் சிங்கங்களை தனியாக பிரித்து தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    தற்போது அனைத்து சிங்கங்களும் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளன. பரிசோதனையில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பார்வைக்காக இந்த வார இறுதியில் வண்டலூர் பூங்காவை திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அப்போது நோய் தொற்றில் இருந்து மீண்ட சிங்கங்களை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படாது.

    இதுதொடர்பாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வண்டலூர் பூங்கா இந்த வார இறுதியில் திறக்கப்படும். கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட சிங்கங்களை பார்க்க அனுமதி கிடையாது. சுற்றுலா பயணிகளுக்கு நிலையான வழிகாட்டு முறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    ‘சிங்கம் சபாரி’ மூடப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. மேலும் காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் விலங்குகளின் பாதுகாப்பிற்காகவும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளும் நல்ல நிலையில் உள்ளன. 24 மணி நேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×