என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    உக்ரைன் நாட்டில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை தமிழகம் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் 24-ந் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைன் மீது போர்த்தொடுத்து வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் உக்ரைன் நாட்டில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை தமிழகம் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்களைத் திறந்துள்ளது. அதன்படி உக்ரைனில் சிக்கியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் விவரங்களை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை 9445008138 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அப்போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீதான சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

    தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கு பெற்றதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று(திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் நடைபெறும் என்றும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
    உக்ரைன் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வாலாஜாபாத் மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற மாணவி உக்ரைன் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

    இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உக்ரைன் நாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமி பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.

    ரஷியா நாட்டின் தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் அவசர நிலை நிலவி வருகிறது. அங்கு வாழும் தமிழக மாணவர்கள் கீழ் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களின் கையிருப்பில் தற்போது குறைந்த அளவு உணவுகள் மட்டுமே உள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.

    உணவு இடைவேளை நேரத்தில் மட்டுமே அவர்கள் மேல் தளத்தில் சென்று உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் கீழ் தளத்துக்கு செல்கிறார்கள். அப்பகுதியில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கி உள்ளது. அப்பகுதியில் வாழும் தமிழக மாணவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

    உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் இதை கருத்தில் கொண்டு எங்களை மீட்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட கடந்த 22 ஆண்டுகளாக 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 721 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

    இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர்கள் என மொத்தம் 2,818 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுது போக்கு பூங்கா போன்ற இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 12 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் தவறாமல் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருப்பினும், இந்த முறையும 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட போலியோ நோய் நம் நாட்டில் வராமல் காத்திடவும் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் இணை இயக்குனர் நலப்பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மற்றும் திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு நலம் ஆகியோர் கலந்துக்கொண்டு போலியோ சொட்டு மருந்து திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தபட உள்ளது.
    ரஷியா நாட்டின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் அவசர நிலை நிலவி வருகிறது. அங்கு வாழும் தமிழக மாணவர்கள் கீழ் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற மாணவி உக்ரைன் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவப்படிப்பு படித்து வருகிறார்.

    இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உக்ரைன் நாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமி பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.

    ரஷியா நாட்டின் தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் அவசர நிலை நிலவி வருகிறது. அங்கு வாழும் தமிழக மாணவர்கள் கீழ் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களின் கையிருப்பில் தற்போது குறைந்த அளவு உணவுகள் மட்டுமே உள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.

    உணவு இடைவேளை நேரத்தில் மட்டுமே அவர்கள் மேல்தளத்தில் சென்று உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் கீழ் தளத்துக்கு செல்கிறார்கள். அப்பகுதியில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கி உள்ளது. அப்பகுதியில் வாழும் தமிழக மாணவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் இதை கருத்தில் கொண்டு எங்களை மீட்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமாபுரத்தில் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வினோதன். தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி தீபா ( வயது 48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    வினோதன் நேற்று காலை வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். தீபா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள் கதவு பூட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள படுக்கை அறை கழிவறைக்குள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் தீபா இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்ததும் ராயலா நகர் போலீசார் விரைந்து வந்து தீபாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களாகவே தீபா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள கொனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது50). தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சைலஜா. கொனேரிக் குப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.

    இன்று காலை சேகர் மோட்டார் சைக்கிளில் விப்பேடு பகுதிக்கு சென்றார். பின்னர் காலை 8.45 மணி அளவில் கொனேரிக்குப்பம் தலையாரி தெரு பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கும்பல் சேகரை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் சேகரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    கழுத்து, தலை, கையில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிய சேகரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    டி.எஸ்.பி. ஜூலியர் சீசர், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவம் இடத்தை ஆய்வு செய்தனர். கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. முன் விரோதத்தில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து சேகருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் யார்-யார் என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் போது சேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தொழில் போட்டியிலும் மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    எனவே இந்த தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தி.மு.க. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    மதுரவாயலில் வீட்டில் இருந்த வாலிபர் ‘திடீர்’ மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் மணிகண்டன் (வயது30) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் மணிகண்டனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர். மணிகண்டனை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது திடீர் சாவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்ற 26 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தி.மு.க. 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. 31 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 9 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 17 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற 6 பெண்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும், வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களையும் சந்தித்து ஆதரவு பெறும் நடவடிக்கைகளை, அவர்களின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் முக்கிய நிர்வாகிகள் மூலம் தங்களுக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளராக உள்ள ராமகிருஷ்ணனின் மனைவி மல்லிகா 18-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் தி.மு.க. நகரச் செயலாளராக இருக்கும் சன்பிராண்டு ஆறுமுகம் மகள் சசிகலா 17-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    இவர்கள் இருவரும் மேயர் பதவியை பிடிக்க கடும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இவர்கள் தவிர முன்னாள் எம்.எல்.ஏ. உலகரட்சகன் மகன் ஷோபன்குமாரின் மனைவி சூர்யா 8-வது வார்டிலும், மாவட்ட அவைத் தலைவர் சேகரின் மனைவி விமலாதேவி 2-வது வார்டிலும், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜின் மனைவி மகாலட்சுமி 9-வது வார்டிலும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள சீனுவாசனின் மனைவி சாந்தி 32-வது வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இவர்களும் மேயர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட செயலாளர் சுந்தர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்ற 26 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தி.மு.க. 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

    போட்டி ஏற்பட்டாலும் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் வெற்றி பெறுவார். மேயர் பதவியை கைப்பற்ற கட்சிகள் இடையே இழுபறி இருந்திருந்தால் தற்போது தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள 36-வது வார்டு தேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்திருக்கும். ஆனால் தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு பரபரப்பு இல்லை.
    வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே பூவால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு லட்டுகள் வழங்கப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு அதில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து மரியாதை செய்யப்பட்டது.

    இதேபோல் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பகுதி, மேட்டு தெரு, காமராஜர் சாலை, பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் மாவட்டம் முழுவதும் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட கிளைக் கழகங்கள் தோறும் அ.தி.மு.க. கட்சி கொடி ஏற்றி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

    வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே பூவால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு லட்டுகள் வழங்கப்பட்டது. ஆயிரம் பேருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர் செல்வம், கே.யூ.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம் பாலாஜி, ஜெயராஜ், படுநெல்லி தயாளன், கரூர் மாணிக்கம், திலக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரான கே.கே. நகர் க.தனசேகரன் சென்னை மாநகராட்சி தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 137-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.

    போரூர்:

    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரான கே.கே. நகர் க.தனசேகரன் சென்னை மாநகராட்சி தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 137-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.

    இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் பழனியை விட கூடுதலாக 10ஆயிரத்து 583 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் தனசேகரனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க, பா. ஜ.க உட்பட அனைத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகளில் மொத்தம் உள்ள 1373 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் தி.மு.க. வேட்பாளர் தனசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தனசேகரன் தன்னை வெற்றி பெற செய்த 137-வது வார்டு மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    மேயர் பதவியை பிடிக்க வெற்றி பெற்ற தி.மு.க. வார்டு உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் 4 உறுப்பினர்களிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த இடத்தில் மட்டும் ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை.

    நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. 32 இடங்களில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க.-9, சுயேட்சை-6, பா.ம.க.-2, பாரதிய ஜனதா-1 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மேயர் பதவியை பிடிக்க வெற்றி பெற்ற தி.மு.க. வார்டு உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் 4 உறுப்பினர்களிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.

    18-வது வார்டு உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் 8-வது வார்டு உறுப்பினர் டாக்டர் சூர்யா ஷோபன்குமார், 17-வது வார்டு உறுப்பினர் சகிகலா கணேஷ், 32-வது வார்டு உறுப்பினர் சாந்தி சீனிவாசன் ஆகியோரும் மேயர் பதவியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×