என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மேயர் பதவிக்கு மோதும் 6 பெண்கள்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்ற 26 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தி.மு.க. 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதில் தி.மு.க. 31 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 9 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 17 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற 6 பெண்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும், வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களையும் சந்தித்து ஆதரவு பெறும் நடவடிக்கைகளை, அவர்களின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் முக்கிய நிர்வாகிகள் மூலம் தங்களுக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கும் வலியுறுத்தி வருகிறார்கள்.
தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளராக உள்ள ராமகிருஷ்ணனின் மனைவி மல்லிகா 18-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் தி.மு.க. நகரச் செயலாளராக இருக்கும் சன்பிராண்டு ஆறுமுகம் மகள் சசிகலா 17-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவர்கள் இருவரும் மேயர் பதவியை பிடிக்க கடும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இவர்கள் தவிர முன்னாள் எம்.எல்.ஏ. உலகரட்சகன் மகன் ஷோபன்குமாரின் மனைவி சூர்யா 8-வது வார்டிலும், மாவட்ட அவைத் தலைவர் சேகரின் மனைவி விமலாதேவி 2-வது வார்டிலும், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜின் மனைவி மகாலட்சுமி 9-வது வார்டிலும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள சீனுவாசனின் மனைவி சாந்தி 32-வது வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களும் மேயர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட செயலாளர் சுந்தர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

போட்டி ஏற்பட்டாலும் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் வெற்றி பெறுவார். மேயர் பதவியை கைப்பற்ற கட்சிகள் இடையே இழுபறி இருந்திருந்தால் தற்போது தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள 36-வது வார்டு தேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்திருக்கும். ஆனால் தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு பரபரப்பு இல்லை.

Next Story