என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் ஆர்த்தி
    X
    கலெக்டர் ஆர்த்தி

    காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று நடைபெறும்- கலெக்டர் தகவல்

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அப்போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீதான சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

    தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கு பெற்றதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று(திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் நடைபெறும் என்றும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×