என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயலலிதா
    X
    ஜெயலலிதா

    காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

    வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே பூவால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு லட்டுகள் வழங்கப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு அதில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து மரியாதை செய்யப்பட்டது.

    இதேபோல் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பகுதி, மேட்டு தெரு, காமராஜர் சாலை, பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் மாவட்டம் முழுவதும் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட கிளைக் கழகங்கள் தோறும் அ.தி.மு.க. கட்சி கொடி ஏற்றி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

    வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே பூவால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு லட்டுகள் வழங்கப்பட்டது. ஆயிரம் பேருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர் செல்வம், கே.யூ.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம் பாலாஜி, ஜெயராஜ், படுநெல்லி தயாளன், கரூர் மாணிக்கம், திலக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×