என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மேட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • அந்தியூர் பகுதியில் வந்து வாங்கி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், காட்டுப்பாளையம், சிந்த கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேட் (மிதியடி) தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பெண்கள் தங்கள் வீடுகளில் இரவு. பகல் பாராமல் மேட் தயாரித்து ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் திங்கட்கிழமைகளில் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.

    மேலும் மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள் அந்தியூர் பகுதியில் வந்து வாங்கி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

    தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த மேட் தேவைகள் அதிகளவில் இருக்கும் என்பதால் திருப்பூரில் இருந்து வேஸ்டேஜ் துணிகளை டெம்போ மூலம் அந்தியூர் பகுதிகளுக்கு கொண்டு வந்து அவற்றை மேட் (கால் மிதியடியாக) பயன்படுத்த தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் அமைந்திருப்பதால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் இதனை தயாரித்து கொடுக்கின்றார்கள்.

    மேலும் சிறியரக மேட் 14 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்றாவாறு விற்பனை செய்து வருகின்றார்கள்.

    • கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கோபி:

    கோபி அடுத்த ஆண்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவர் மோடூர்பாளையம் பிரிவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் மளிகை கடையை பூட்டிவிட்டு மோகன்ராஜ் சென்றுவிட்டார். இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டிகளில் இருந்த ரூ.2000 பணம் மற்றும் 20 பீடிக்கட்டுகள் திருட்டு போய் இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் நள்ளிரவில் மோகன்ராஜ் கடையில் புகுந்த மர்ம நபர் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. கொள்ளை நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இல்லை.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வைரா பாளையம் கந்தசாமி வீதியை சேர்ந்தவர் கோபால் (35). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சந்தியா என்ற மோகனப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக கோபால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    கோபால் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகனப் பிரியா கோபாலை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதில் மனவேதனை அடைந்த கோபால் ஓயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக சரிந்து உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 261 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நில வரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக சரிந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 261 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,950 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.34 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 6.46 அடியும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.74 அடியும் உள்ளது.

    • வேன் பின்பக்க டயர் வெடித்து நடு ரோட்டில் கவிழ்ந்து.
    • விபத்தில் டிரைவர் உட்பட 12 பேருக்கு பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்து சிவியர்பாளையம் பகுதியில் இருந்து திருமணத்தி ற்காக பெண் வீட்டார் புளியம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையம் பகுதியில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு நிச்சயம் செய்து மதிய விருந்துக்காக வாடகை வேனில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது புங்கம்பள்ளி அருகே பெட்ரோல் பங்க் அருகில் எதிர்பாராத விதமாக திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்தும் மற்றும் வீல் ட்ரம் உடைந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் இழுத்து சென்று நடு ரோட்டில் கவிழ்ந்து.

    இந்த விபத்தில் டிரைவர் உட்பட 12-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டது. சிலருக்கு கை, கால் முறிவு, தலையில் காயம் ஏற்பட்டிரு ந்தது.

    இந்நிலையில் விபத்தில் வேனில் சிக்கி கொண்ட வர்களை அருகில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலத்த காயம் அடைந்த 5 நபர்களை மேல் சிகிச்சை க்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கும் மற்றும் 2 நபர்களை மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்து 156-க்கு விற்பனையானது.

    சிவகிரி:

    சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 435 மூட்டைகளில் 13 ஆயிரத்து 436 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.65.06 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.83.60 காசுகள், சராசரி விலையாக ரூ.76.30 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்து 156-க்கு விற்பனையானது.

    • ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பல்வேறு புகார் தொடர்பாக சோதனை நடத்தினர்.
    • பிளாஸ்டிக் பயன்படுத்தியது தொடர்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் ஓட்டல்கள், ரெ ஸ்டா ரண்டுகள், டீக்கடை கள், பாஸ்ட்டிட் கடைகள், மளிகை கடைகள், பேக்கரி களில் அதிகாரிகள் சோதனை நடத்தி உணவு பொருள் கலப்படம் சட்ட விரோத விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட உணவு பொருள் பாது காப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் குழுவினர் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, உள்பட பகுதிகளில் 447 ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பல்வேறு புகார் தொடர்பாக சோதனை நடத்தினர்.

    இதில் 44 ஓட்டல்களில் சுகாதாரம் மேம்படுத்தப்படாமல் இருந்தது தொடர்பாக தல ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். இதேபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியது தொடர்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 434 மளிகை கடைகள், பெட்டி கடை யில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கடை களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இத்தொடர்பாக தல ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொங்கல் விழா காலை தொடங்கி நடந்தது.
    • பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து மாரியம்மனை வழிபாடு செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் காங்கேயம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 15 நாள் பொங்கல் வைபோகம் சிறப்பாக கொண்டாடப்படும் . இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதல் நிக ழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து 25-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது.

    கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

    வேண்டுதல்காரர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர். தினமும் இரவு மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா காட்சியும் நடந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று பொங்கல் விழா காலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது.

    பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தி பரவ சத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கோவில் தலைமை பூசாரி வாசுதேவன், புலவர் அறிவு, மற்றும் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • போக்குவரத்து அலுவலர்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஈரோடு:

    போக்குவரத்து ஆணை யர் மற்றும் ஈரோடு கலெ க்டர் உத்தரவின் பேரில். துணை போக்கு வரத்து ஆணையர் வழிகாட்டுதலின் படி, ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கட்டரமணி, பதுவை நாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், சுரேந்திரக்குமார் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை சுற்றுச்சூழல் விஞ்ஞானி அருண்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு மத்திய பஸ் நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன், கண் கூசும் முகப்பு விளக்குகள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது சுமார் 45 பஸ்களில் ஏர் ஹாரன் அகற்றப்பட்டது. பஸ் நிலையத்திற்குள் அதிக ஒலி எழுப்பிய 13 பஸ்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்று அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன், கண் கூசும் முகப்பு விளக்கு கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பின் அனுமதிச்சீட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • கடந்த மாதம் 2-ந்தேதி நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் பாலதொழுவில் உள்ள குளத்திற்கு சிப்காட் சாய கழிவு நீர் வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் தங்கமணி விஜயகுமார் தலைமையில் நேற்று கூட்டம் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் பாலதொழுவில் உள்ள குளத்திற்கு சிப்காட் சாய கழிவு நீர் வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனாலும் தொடர்ந்து சாயகழிவு நீர் வந்து கொண்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும், மாவட்ட கலெக்டர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நடக்க இருந்த கிராமசபை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று புஞ்சை பால தொழுவு ஊராட்சி துணைத்தலைவர் பிரியாவின் கணவர் சுப்பிரமணி, சென்னிமலை யூனியன் 11-வது வார்டு கவுன்சிலர் தங்கவேல், சிப்காட்டால் பாதிக்கப்பட்டோர் மக்கள் நல சங்கம் சார்பில் பிரபு, மணி உட்பட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திரண்டு கிராம சபை கூட்டத்தினை ஒத்திவைக்க வேண்டும் என்று மாலை 5 மணி வரை போராடினர்.

    இது சம்பந்தமாக சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தினை நடத்தினர். நடந்த கூட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை, கிராம சபை கூட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என கூறி புஞ்சை பாலதொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து பொது மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணி வரை பேராட்டம் நடந்தது.

    அதன் பின்பு பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசன், அஜித் ஆண்டனி, வேலுச்சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்தியுள்ளார். மாவட்டம் முழுவதும் போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு உரிய வகையில் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து காரில் இருந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கவுந்தபாடி, பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (32), அம்மாபேட்டை பூதப்பாடி பகுதியை சேர்ந்த டிரைவர் அஜித் ஆண்டனி (26), கோபி நல்லதம்பி நகரை சேர்ந்த வேலுச்சாமி (60) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதில் காய்கறி வியாபாரம் செய்து வரும் வேலுச்சாமி, இளவரசனிடம் இருந்து குட்கா பொருட்களை பெற்று அதை கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசன், அஜித் ஆண்டனி, வேலுச்சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    • கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • தாய் பிரியா கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்குமார் (45). இவரது மனைவி பிரியா (40). இவர்களது மகள் ஜோசிகா (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜோஷிகா கல்லூரி பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜோஷிகா மன வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தாய் அவருக்கு சமாதானம் கூறி வந்தார். இதையடுத்து ஜோஷிகா கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ஜோஷிகா நேற்று மாலை திடீரென வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். வேலைக்கு சென்று இருந்த அவரது தாய் பிரியா வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது ஜோஷிகா சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டு வந்து ஜோஷிகாவை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தாய் பிரியா கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×