என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார ஆவணங்கள் சமர்ப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
    • கட்சி முகவர்களிடம் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

    ஈரோடு:

    இந்தியதேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 01.01.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்குசாவ டிகளில் வரும் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதிகளில் 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள  இணையதள முகவரியிலும், செயலிகள் மூலமாகவும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

    இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்களும் சம்பந்தப்பட்ட வாக்கு ச்சாவடிகளை அணுகியும் அல்லது இணைய வழி மூலமாகவும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தெரிவித்துக் கொள்ள ப்படுகிறது.

    மேலும் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பிறந்த தேதிக்கான ஆதார ஆவணங்கள் பிறப்புச்சான்று, ஆதாரஅட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை, ஓட்டுநர் உரிமம், மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு சான்றிதல் அதில் பிறந்த தேதி இருந்தால், இந்திய கடவுச்சீட்டு மற்றும் புகைப்படம் சமர்ப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க இறப்பு எனில் இறப்புச்சான்றும், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர் எனில் அதற்குரிய முகவரி சான்றும் சமர்ப்பிக்கவும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள ஆதார அட்டை, குடி பெயர்ப்பி ற்கான சான்று, மாற்றுத்தி றனாளி என குறிப்பிட வேண்டும் எனில் மாற்றுத்திறனாளி க்கான சான்று ஆதரா ஆவணங்க ளாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா சேவை எண் 0424 1950-னை தொடர்பு கொள்ளலாம்.

    இப்பணிகளை மேற்பா ர்வை செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.சங்கர் ஈரோடு மாவட்டத்திற்கு நாளை வருகை புரிந்து மாவட்ட கலெக்டர், தேர்தல் அலுவ லர்கள் மற்றும் அங்கரீக்கப்பட்ட கட்சி முகவர்களிடம் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

    • வீட்டுத்தோட்ட பயிர் விதைகள் மற்றும் எளிய பண்ணை கருவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • காய்கறி, கீரை, பழங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தும் நோக்கத்துடன் கேரளா மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக தாவர மரபணு மண்டல நிலையத்தின் சார்பாக வீட்டுத்தோட்ட பயிர் விதைகள் மற்றும் எளிய பண்ணை கருவிகள் வழங்கும் முகாம் நடை பெற்றது.

    இம்முகாமில் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலை வர் கே.பிரதீப் முன்னிலை வகித்து அழிய கூடிய தாவரங்களை பாதுகாத்தல் மற்றும் தேசிய மரபணு வங்கி குறித்து தெரிவித்தார். ஈரோடு மாவட்ட விதைச்சா ன்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் கலந்து கொண்டு அங்ககச்சான்றின் முக்கிய த்துவம் மற்றும் வீட்டுத் தோட்ட காய்கறி பயிரிடும் முறைகள், பயிர் மேலா ண்மை மற்றும் பாதுகாப்பு முறைகள், நச்சு இல்லாத காய்கறி, கீரை, பழங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    மேலும் முதன்மை விஞ்ஞானி லதா பராம்ப ரியமிக்க விதைகளை சேகரித்தல் மற்றும் சேமித்தல் குறித்து தெரிவி த்தார். இப்பயிற்சியில் திருமலைசாமி, வெங்க டேசன், பெருந்துறை விதைச்சான்று அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இம்முகாமில் 110 விவ சாயம் மற்றும் விவ சாயம் சார்ந்த தொழிலாளர்க ளுக்கு காய்கறி விதைகள், பழச்செடி, கீரை விதைகள், கடப்பாரை, மண்வெட்டி, கொத்து மற்றும் ரப்பர் கூடை வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ராதா மாரியப்பன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • வீட்டில் சுப்பிரமணியம் தூக்குபோட்டு கொண்டார்.
    • ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர், எல்லப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (73). விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி (65). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சுப்பிரமணி யத்துக்கு பல ஆண்டுகளாக பூர்வீக சொத்தில் பிரச்சனை இருந்து வருகிறது. மேலும் அவரது மகனும் கடந்த 10 வருடங்களாக சண்டை போட்டுக்கொண்டு பேசாமல் இருந்து வருகிறார். இதனால் சமீப காலமாக சுப்பிரமணியம் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணியம் தூக்குபோட்டு கொண்டார். வெளியில் சென்ற அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர் வரும் வழியிலேயே சுப்பிரமணியம் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரும்பு பூஸ்டர் குறித்த செயல் விளக்கத்திடல் கரும்பு வயலில் அமைக்கப்பட்டது.
    • கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகாிக்கும் என்றும் அட்மா திட்டப்பணியாளர்கள் எடுத்துரைத்துனர்.

    கொடுமுடி:

    வேளாண்மை-உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 செயல்படுத்தபடும்.

    நஞ்சை கொளாநல்லி கிராமத்தில் கரும்பு பூஸ்டர் குறித்த செயல் விளக்கத்திடல் விவசாயி ரங்கராஜ் கரும்பு வயலில் அமைக்கப்பட்டது.

    வேளாண்மை பல்கலை கழகத்தின் மூலம் வெளி யிடப்பட்ட கரும்பு பூஸ்டர் இலை வழி தௌிப்பு செய்வதன் மூலம் மகசூல் 20 சதம் வரை அதிகாிக்கும்.

    சர்க்கரையின் அளவு கூடும். கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகாிக்கும் என்றும் அட்மா திட்டப்பணியாளர்கள் எடுத்துரைத்துனர்.

    • அர்ச்சனா தேவி தங்கியிருக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தேனி மாவட்டம் உப்பார்பட்டி, கருப்புசாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன் (48).

    இவரது மகள் அர்ச்சனா தேவி (20). இவர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே எம்மாம்பூண்டியில் உள்ள பனியன் கம்பெனியில் தங்கி கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அர்ச்சனா தேவி இரவு தனது தந்தை மதுரை வீரனுக்கு போன் செய்து தான் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் காலை 10 மணியளவில் கம்பெனியின் உரியமையாளர் மதுரைவீரனுக்கு போன் செய்து மகள் அர்ச்சனா தேவி வேலை செய்பவர்கள் தங்கியிருக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நம்பியூர் வந்த அர்ச்சனா தேவியின் தந்தை மதுரைவீரன் தனது மகளின் சாவுக்கு காரணம் கார்த்திகேயன் என்ற வாலிபரும், அவர் வேலை பார்த்த நிறுவனமும் தான் என புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சனிக்கிழமைகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் நாளை 42 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக முழுவதும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது.

    இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.

    அதன்படி வரும் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஒவ்வொரு வாரமும் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட நிலையம், நகர்ப்புற நிலைய அளவில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது.

    முகாமில் பங்கேற்பவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்ப ட்டு தேவையான மாத்திரை மருந்து வழங்கப்பட்டு வந்தது.

    தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பால் அவதிப்ப ட்டவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த காய்ச்சல் முகம் வரும் டிசம்பர் 31-ந் தேதி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இந்த அறிவிப்பை மாற்றி பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இனி ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமைகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை 42 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என சுகாதா ரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமை களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

    இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் 133 பள்ளிகளில் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

    ஈரோடு:

    அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ் படிக்க வழிவகை செய்யும் விதமாக அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜெ.இ.இ. பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி தொடங்குகிறது.

    இது குறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, எலைட் பள்ளி என 133 பள்ளிகளில் நீட், ஜெ.இ.இ. பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. வகுப்பை காலை அல்லது மாலை நேரத்தில் நடத்தி கொள்வது குறித்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் பயிற்சி வகுப்பு நடக்கும். வெள்ளிக்கிழமை தேர்வு குறித்த மதிப்பீடு நடக்கும். இதே நடைமுறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு பயிற்சி வகுப்பாக மட்டும் நடந்தது. இந்த ஆண்டு பயிற்சி வகுப்புடன் தினமும் தேர்வும் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா ஆய்வு மேற்கொண்டார்.
    • அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒழிப்பான்கள் பயன்படுத்திய பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் குறித்து போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தலின்படி, மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கோபி பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, தாளவாடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் காற்று ஒலிப்பான் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒழிப்பான்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களை பஸ்சில் இருந்த அகற்றம் செய்து பறிமுதல் செய்த வாகன ஆய்வாளர் அதனை பஸ்சின் சக்கரத்தின் அடியில் வைத்து அழித்தார்.

    பின்னர் அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒழிப்பான்கள் பயன்படுத்திய பஸ்களுக்கு தலா ரூ.1000 என சுமார் 10 பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒழிப்பான்கள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ரூ4.73 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
    • சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சி திட்டபணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கொடுமுடி:

    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ரூ4.73 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

    கொளத்துப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக த்துக்காக புதியதாக ரூ.32.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.15.50 லட்சம் மதிப்பில் கட்டப்ப ட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நி லை நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கொம்பனை ப்புதூரில் உள்ள அரசினர் கால்நடை மருந்தகம், கொம்பனைப்புதூர் அரசு ஆரம்பசுகாதார நிலையம், கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகம், தாமரைபட பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி,

    தாமரைப்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையம் , மகளிர் சுய உதவி்குழுவி னரின் விற்பனை மையம், சிவகிரியில் உள்ள உழவர் நலத்துறையின் கிருஷிசின்சாயி,

    சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சி திட்டபணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    • கடந்த 3 நாள்களாக வேலைக்கு செல்லாமல் சரவணன் மது அருந்திவிட்டு யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்துள்ள பணியம்பள்ளியை சேர்ந்தவர் துரைசாமி (64). இவரது 2-வது மகன் சரவணன் (30). என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்துள்ளார். கட்டிட வேலை செய்து வந்தார். தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சரவணன் அடிக்கடி மது குடித்துவிட்டு போதையில் புலம்பி வந்துள்ளார்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன் மது போதையில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற சரவணனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தாளவாடி அருகே கல்மண்டிபுரத்தில் உள்ள பெரியப்பா வீராசாமியின் வீட்டுக்கு சரவணனை அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர். அங்கு தங்கி அவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். தற்போது கடந்த 3 நாள்களாக வேலைக்கு செல்லாமல் சரவணன் மது அருந்திவிட்டு யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சரவணன் நேற்று வீட்டில் படுத்திருந்துள்ளார். அவரை வீராசாமி எழுப்பிய போது அசைவற்று கிடந்துள்ளார். அவரிடம் விஷமருந்தின் வாசம் அடித்துள்ளது. உடனே சரவணனை மீட்டு தாளவாடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செய்வதறியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே பொன்னுசாமி முடங்கி கிடந்தார்.
    • சுமார் 10 அடி ஆழமுடைய ஒரு கசிவுநீர் கால்வாய் மாயமானது தெரியவந்தது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே லக்காபுரத்தில் வசித்து வருபவர் பொன்னுசாமி (85). முன்னாள் கிராமநிர்வாக அலுவலர். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பொன்னுசாமி எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளார்.

    இந்நிலையில் ஈரோடு பகுதியில் பெய்த மழையின் மழைநீரும், கீழ்பவானி பாசன பகுதிகளில் இருந்து வெளியேறிய கசிவுநீரும் லக்காபுரத்தில் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டிற்குள் புகுந்து சூழ்ந்தது. இதனால் செய்வதறியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே பொன்னுசாமி முடங்கி கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் தாசில்தார் இளஞ்செழியன் ஆகியோர் அங்கு சென்று பொன்னுசாமியை அங்கிருந்து மீட்டு மொடக்குறிச்சி டாக்டர்.சரஸ்வதி எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவ மனையில் தற்காலிகமாக தங்கவைத்தனர்.

    பின்னர் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டின் பகுதிக்கான வரைபடத்தை ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் சுமார் 10 அடி ஆழமுடைய ஒரு கசிவுநீர் கால்வாய் மாயமானது தெரியவந்தது.

    இதனையடுத்து எந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள் அந்த பகுதியில் ஆக்கிரமித்து மறைக்கப்பட்டிருந்த கசிவு நீர்கால்வாயை கண்டுபிடித்து அதற்குள் நிரப்பட்டிருந்த மண் மற்றும் கான்கிரீட் கட்டுமானங்களை அகற்றி பல ஆண்டுகளாக காணாமல் போன அந்த கால்வாயை மீட்டனர். இதனால் பொன்னு சாமியின் வீட்டையும், அந்த பகுதியையும் சூழ்ந்திருந்த மழைநீர் மற்றும் பாசன கசிவுநீர் வடிந்தது. 

    • கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர்.
    • இதைத்தொடர்ந்து இன்று மாலை சிறப்பு திருப்பலியும் நடக்க உள்ளது.

    ஈரோடு:

    கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர்.

    இதன்படி ஈரோடு சத்தி சாலை சந்திப்பில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி இன்று காலை கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் கல்லறைக்கு வந்து, கல்லறைகளை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து, மலர்வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி, ஜெபப்புத்தகத்தை படித்து முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று மாலை சிறப்பு திருப்பலியும் நடக்க உள்ளது.

    கல்லறை திருநாளையொட்டி ஈரோடு கல்லறை தோட்டத்தில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு பத்தி, மெழுகுவர்த்தி, பூக்க ள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.

    ×