என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியம்பட்டி அருகே என்ஜினீயர் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
    X

    புளியம்பட்டி அருகே என்ஜினீயர் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • கடந்த 3 நாள்களாக வேலைக்கு செல்லாமல் சரவணன் மது அருந்திவிட்டு யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்துள்ள பணியம்பள்ளியை சேர்ந்தவர் துரைசாமி (64). இவரது 2-வது மகன் சரவணன் (30). என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்துள்ளார். கட்டிட வேலை செய்து வந்தார். தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சரவணன் அடிக்கடி மது குடித்துவிட்டு போதையில் புலம்பி வந்துள்ளார்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன் மது போதையில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற சரவணனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தாளவாடி அருகே கல்மண்டிபுரத்தில் உள்ள பெரியப்பா வீராசாமியின் வீட்டுக்கு சரவணனை அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர். அங்கு தங்கி அவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். தற்போது கடந்த 3 நாள்களாக வேலைக்கு செல்லாமல் சரவணன் மது அருந்திவிட்டு யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சரவணன் நேற்று வீட்டில் படுத்திருந்துள்ளார். அவரை வீராசாமி எழுப்பிய போது அசைவற்று கிடந்துள்ளார். அவரிடம் விஷமருந்தின் வாசம் அடித்துள்ளது. உடனே சரவணனை மீட்டு தாளவாடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×