என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணை பகுதியில் மழை தண்ணீர் இரு கரைகளிலும் பெருக்கெடுத்து செல்கிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

    கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதே போல் நேற்று இரவு கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், கொடிவேரி மற்றும் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பவானி ஆற்றில் மழை வெள்ளம் இரு கரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது.

    மேலும் கொடிவேரி தடுப்பணை பகுதியில் மழை தண்ணீர் இரு கரைகளிலும் பெருக்கெடுத்து செல்கிறது. தடுப்பணையில் உபரி நீர் சுமார் 2400 கனஅடி செல்கிறது. மேலும் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதையொட்டி கொடிவேரியில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் அனுமதி இல்லை. மேலும் அங்கு பரிசல்கள் இயக்கவும் இன்று தடை விதிக்கப்படுவதாகவும் தண்ணீர் குறைந்த பின்பு அனுமதி அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரிக்கு பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். உள்ளே செல்லும் கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர்.

    • துணி வாங்க லிப்டில் சென்ற தொழிலாளி சுப்பிரமணியின் கை லிப்டில் சிக்கி துண்டானது.
    • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் லிப்டில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்பில் துணிகளை வாங்க லிப்டில் சென்ற இஸ்திரி செய்யும் தொழிலாளி சுப்பிரமணியின் கை லிப்டில் சிக்கி துண்டானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகள் தொடங்கியது.
    • பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்து கொண்டனர்.

    ஈரோடு:

    இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமை களில்) சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும்,

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும் voterhelpline என்ற செயலிகள் மூலமாகவும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

    இந்த நிலையில் இன்று அந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் தொடங்கியது. பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளை மற்றும் வரும் 18, 19-ந் தேதிகளில் இந்த சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும்.

    • பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளியை அடைந்தது.

    பவானி:

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் நவம்பர் மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்கள் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் பெயர் திருத்தம் போன்ற வற்றினை செய்து கொள்ளும் வகையில் வாக்காளர்கள் அந்த அந்த வாக்குச்சாவடி முகாமிற்கு சென்று விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதனை த்தொடர்ந்து பவானி அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவர்கள் மூலம் முகாம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளியை அடைந்தது.

    இந்த பேரணியில் பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட கலெக்டரிடம் உங்களது குறைகளை கூறியுள்ளோம்.

    மேலும் இன்னும் சில தினங்களில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய 3 மாத சம்பள பாக்கியினை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

    சிவகிரி:

    சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொண்ட 2 ஆயிரத்து 923 கிலோ எடையுள்ள எள் விற்பனையானது.

    விற்பனையான எள்ளில் சிவப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.130.59 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.169.39 காசுகள், சராசரி விலையாக ரூ.161.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

    இதேபோல அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 166 மூட்டைகள் கொண்ட 7 ஆயிரத்து 591 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.85.69 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.86.88 காசுகள், சராசரி விலையாக ரூ.86.5 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலை யாக ரூ.63.69 காசுகள், அதிக பட்ச விலையாக ரூ.82.89 காசுகள், சராசரி விலையாக ரூ.72.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 792-க்கு விற்பனையானது.

    மொத்தம் சிவகிரி மற்றும் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் எள் மற்றும் தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்து 591-க்கு விற்பனையானது.

    • 8.7 டி.எம்.சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் நடப்பு பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
    • நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் 2-வது பெரிய நீர்தேக்கமான பவானிசாகர் அணையின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசன பகுதிகளில் சுமார் 2 லட்ச த்து 50 ஆயிரம் ஏக்கர் நில ங்கள் பாசனம் பெறுகின்றன.

    கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 1 லட்சத்து 3,500 ஏக்கரில் நெல்நடவு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கு டிசம்பர் 13-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

    ஆனால் போதிய மழையும், நீர்வரத்தும் இல்லா ததால் 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 64 அடியாக சரிந்தது. 8.7 டி.எம்.சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் நடப்பு பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

    இதனால் நீலகிரி மாவட்டத்தில் நீர்மின் திட்ட அணைகளில் இருந்து 5 டி.எம்.சி தண்ணீரை பவானிசாகர் அணைக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையேற்று தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டு நேற்று முதல் விநாடிக்கு 1,300 கனஅடி வீதம் நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் பிரச்சினையை உணர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு கீழ்பவானி் பாசன பகுதி விவசாயிகள் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவி த்துள்ளனர்.

    இதன் மூலம் நடப்பு ஆண்டு நெற்பயி ர்களை காப்பாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நிலைமையை சமாளிக்க நீர்மின் தேக்கங்களில் இருக்கும் தண்ணீரை அரிதாகவே பயன்படுத்துவது வழக்கம்.

    அதன்படி 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • மரம் பலத்த காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்து விட்டது.

    ஈரோடு, நவ. 4-

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. அதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் மதிய நேரத்தில் மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மாலை மற்றும் இரவில் சாரல் மழை பெய்தது.

    இதே போல் சத்தியமங்க லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தாலும் மாலை நேரத்தில் மேக மூட்டத்துடனேயே காணப் பட்டது.

    இதை தொடர்ந்து சத்திய மங்கலம், பண்ணாரி, ராஜன் நகர், சிக்கரசம் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதையடுத்து விடிய, விடிய பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.

    மேலும் வன்பகுதிகளான தாளவாடி, தலமலை பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென பசுமையாக காணப்பட்டது.

    இதே போல் அந்தியூர், தவிட்டுபாளையம், சின்ன தம்பி பாளையம், வரட்டுப் பள்ளம் அணைப்பகுதி மற்றும் பர்கூர் பகுதிகளிலும் நள்ளிரவில் பரவலாக மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பர்கூர் மலை பகுதியில் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது.

    நம்பியூர், எலத்தூர், குரு மந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் பவானிசாகர் கோபி, கொடுமுடி, குண்டேரி பள்ளம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    சென்னிமலை பகுதியில் காலையில் வெயில் அடித்தது மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 4.20 மணிக்கு திடீர் என இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. மின்னல், இடியுடன் பலத்த காற்று வீசியது.

    இதில் சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையம் அருகே சென்னிமலை-கே.ஜி.வலசு செல்லும் ரோட்டில் ரோட்டின் ஓரமாக இருந்த மரம் பலத்த காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்து விட்டது. இதனால் இந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் அறிந்து சென்ற சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் 40 நிமிடங்களில் மரத்தினை துண்டாக்கி அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இருந்த இடையூறுகளை சரி செய்தனர். இந்த பலத்த காற்று வீசியதில் பல இடங்கில் சிறிய மரங்களும் முறிந்தும், சாய்ந்தும் விழுந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    பவானிசாகர்-28, கொடி வேரி-26, சத்தியம ங்கலம்-19. நம்பியூர்-16, குண்டேரி பள்ளம்-14.20, மொட க்குறிச்சி-10, கொடுமுடி-10, கோபி-9.20, வரட்டுப்ப ள்ளம்-8.70, சென்னி மலை-4, ஈரோடு-1.

    • கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால் தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில்

    மல்லிகை சாகுபடி செய்து வருவதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தோட்டத்து கொட்டகையில் 4 செம்மறி ஆடுகளை கட்டி தீவனம் போட்டு

    விட்டு ஊருக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு

    கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால்

    தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள்

    கடும் பீதி அடைந்துள்ளனர்.

    மீண்டும் ஆட்டை தேடி சிறுத்தை ஊருக்குள் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

    உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில்

    வனத்துறையினர் 4 கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 700 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.77 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4, 773 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 700 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று பவானி ஆற்றுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.34 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 6.23 அடியும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.74 அடியும் உள்ளது.

    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி மாணவ-மாணவிகளின் பசியை போக்கும் வகையில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகவும் இருந்து வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரந்தோறும் 92 ஆயிரம் முட்டைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மொடக்குறிச்சி தாலுகாவில் 126 பள்ளிகளும், கொடுமுடி தாலுகாவில் 90 பள்ளிகளும் வாரந்தோறும் முட்டை பெறுகின்றன.

    இதில் பல பள்ளிகளில் உள்ள மதிய உணவு மையங்களில் உள்ள சமையலர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கடந்த புதன்கிழமை மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி போய் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரச்சனையை எடுத்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டன.

    இதனால் கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள 27 பள்ளிகளில் ஆயிரத்து 348 முட்டைகளும், கொடுமுடி தாலுகாவில் 13 பள்ளிகளில் 767 முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும் இச்சம்பவம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அவரது உத்தரவின் பேரில் முட்டைகளின் மாதிரிகளை துறையினர் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். பின்னர் முட்டையை சப்ளை செய்த நிறுவனத்திடம் நல்ல முட்டைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அடுத்தடுத்து 4 மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தது.
    • சாலையின் நடுவே இருந்த மின் கம்பிகளும், 2 மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.

    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று மதியம் மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    ஈரோடு நகரில் பன்னீர்செல்வம் பூங்கா, பஸ் நிலையம், சம்பத் நகர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடம் கனமழை பெய்தது. மழையின் போது பலத்த காற்றும் வீசியது. இதனால் ஈரோடு ஈ.வி.என்.சாலையில் அடுத்தடுத்து 4 மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தது.

    இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மரம் விழுந்தது. பெரியார் நகரை சேர்ந்த 20 வயது வாலிபருக்கு காயம் ஏற்பட்டது.

    அவர் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையின் நடுவே இருந்த மின் கம்பிகளும், 2 மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை தடை செய்து மாற்று வழியில் திருப்பி விட்டனர். மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொக்லைன் உதவியுடன் மரங்களை வெட்டி அகற்றினர்.

    மேலும் சாலையில் சாய்ந்து விழுகின்ற அபாய கரமான நிலையில் இருந்த மேலும் சில மரங்களை பொக்லைன் மூலமாக கீழே தள்ளி அப்புறப்படுத்தினர். மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு பிறகே போக்குவரத்துக்கு அதிகாரிகள் அனுமதித்தனர்.

    இதேப்போல் மொடக்குறிச்சி, கொடிவேரி, நம்பியூர் போன்ற பகுதியில் இடியுடன் கன மழை பெய்தது.

    ×