search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hydroelectric reservoirs to"

    • 8.7 டி.எம்.சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் நடப்பு பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
    • நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் 2-வது பெரிய நீர்தேக்கமான பவானிசாகர் அணையின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசன பகுதிகளில் சுமார் 2 லட்ச த்து 50 ஆயிரம் ஏக்கர் நில ங்கள் பாசனம் பெறுகின்றன.

    கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 1 லட்சத்து 3,500 ஏக்கரில் நெல்நடவு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கு டிசம்பர் 13-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

    ஆனால் போதிய மழையும், நீர்வரத்தும் இல்லா ததால் 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 64 அடியாக சரிந்தது. 8.7 டி.எம்.சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் நடப்பு பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

    இதனால் நீலகிரி மாவட்டத்தில் நீர்மின் திட்ட அணைகளில் இருந்து 5 டி.எம்.சி தண்ணீரை பவானிசாகர் அணைக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையேற்று தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டு நேற்று முதல் விநாடிக்கு 1,300 கனஅடி வீதம் நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் பிரச்சினையை உணர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு கீழ்பவானி் பாசன பகுதி விவசாயிகள் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவி த்துள்ளனர்.

    இதன் மூலம் நடப்பு ஆண்டு நெற்பயி ர்களை காப்பாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நிலைமையை சமாளிக்க நீர்மின் தேக்கங்களில் இருக்கும் தண்ணீரை அரிதாகவே பயன்படுத்துவது வழக்கம்.

    அதன்படி 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×