search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Van overturned accident"

    • வேன் பின்பக்க டயர் வெடித்து நடு ரோட்டில் கவிழ்ந்து.
    • விபத்தில் டிரைவர் உட்பட 12 பேருக்கு பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்து சிவியர்பாளையம் பகுதியில் இருந்து திருமணத்தி ற்காக பெண் வீட்டார் புளியம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையம் பகுதியில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு நிச்சயம் செய்து மதிய விருந்துக்காக வாடகை வேனில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது புங்கம்பள்ளி அருகே பெட்ரோல் பங்க் அருகில் எதிர்பாராத விதமாக திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்தும் மற்றும் வீல் ட்ரம் உடைந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் இழுத்து சென்று நடு ரோட்டில் கவிழ்ந்து.

    இந்த விபத்தில் டிரைவர் உட்பட 12-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டது. சிலருக்கு கை, கால் முறிவு, தலையில் காயம் ஏற்பட்டிரு ந்தது.

    இந்நிலையில் விபத்தில் வேனில் சிக்கி கொண்ட வர்களை அருகில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலத்த காயம் அடைந்த 5 நபர்களை மேல் சிகிச்சை க்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கும் மற்றும் 2 நபர்களை மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
    • வேன் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உகாயனூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல பள்ளி முடிந்ததும்,சுமார் 20 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களோடு தனியார் வாடகை வேன் பொங்கலூர் - மாதப்பூர் ரோட்டில் வந்துள்ளது.

    மாதப்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது மேடான பகுதியில் ஓட்டுனர் வேனை திருப்ப முயன்ற போது, நிலை தடுமாறி அங்குள்ள பள்ளமான இடத்தில் எதிர்பாராத விதமாக வேன் சாய்ந்த நிலையில் இறங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வேனில் சிக்கியிருந்த குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனத்தை மீட்டனர். பின்னர் வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து குழந்தைகளும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனியார் நிறுவனத்திற்கு வேலை ஆட்களை ஏற்றி சென்ற போது விபத்து
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில்.நேற்று மாலை கம்பெனியில் இருந்து வேலை முடிந்து சுமார் 30 பேர் கம்பெனி வேனில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தனர். வளர்புரம்- கிருஷ்ணாபுரம் ரோட்டில் வந்தபோது திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் 25 பேர் காயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய வேன் டிரைவர் விஜியை (வயது 30) தேடி வருகின்றனர்.

    ×