என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
- குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
- வேன் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் :
பல்லடம் அருகே உகாயனூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல பள்ளி முடிந்ததும்,சுமார் 20 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களோடு தனியார் வாடகை வேன் பொங்கலூர் - மாதப்பூர் ரோட்டில் வந்துள்ளது.
மாதப்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது மேடான பகுதியில் ஓட்டுனர் வேனை திருப்ப முயன்ற போது, நிலை தடுமாறி அங்குள்ள பள்ளமான இடத்தில் எதிர்பாராத விதமாக வேன் சாய்ந்த நிலையில் இறங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வேனில் சிக்கியிருந்த குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனத்தை மீட்டனர். பின்னர் வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து குழந்தைகளும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.