என் மலர்
நீங்கள் தேடியது "on 44 hotels"
- ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பல்வேறு புகார் தொடர்பாக சோதனை நடத்தினர்.
- பிளாஸ்டிக் பயன்படுத்தியது தொடர்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் ஓட்டல்கள், ரெ ஸ்டா ரண்டுகள், டீக்கடை கள், பாஸ்ட்டிட் கடைகள், மளிகை கடைகள், பேக்கரி களில் அதிகாரிகள் சோதனை நடத்தி உணவு பொருள் கலப்படம் சட்ட விரோத விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட உணவு பொருள் பாது காப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் குழுவினர் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, உள்பட பகுதிகளில் 447 ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பல்வேறு புகார் தொடர்பாக சோதனை நடத்தினர்.
இதில் 44 ஓட்டல்களில் சுகாதாரம் மேம்படுத்தப்படாமல் இருந்தது தொடர்பாக தல ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். இதேபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியது தொடர்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 434 மளிகை கடைகள், பெட்டி கடை யில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கடை களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தொடர்பாக தல ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






